Published:Updated:

`இந்தியாவில் புது மருத்துவக்கல்லூரி!' - ஆனந்த் மஹிந்திரா ட்வீட்டுக்கு ஆதரவும் எதிர்ப்பும்

ஆனந்த் மஹிந்திரா

நம் நாட்டிலிருந்து பல ஆயிரம் மருத்துவ மாணவர்கள் உக்ரைனுக்குச் சென்று மருத்துவம் படிப்பதற்கு மிக முக்கியமான காரணம், நம் நாட்டில் போதிய அளவு மருத்துவக் கல்லூரிகள் இல்லை என்பதுதான். நம் நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 90,000 சீட்களே உள்ளன.

`இந்தியாவில் புது மருத்துவக்கல்லூரி!' - ஆனந்த் மஹிந்திரா ட்வீட்டுக்கு ஆதரவும் எதிர்ப்பும்

நம் நாட்டிலிருந்து பல ஆயிரம் மருத்துவ மாணவர்கள் உக்ரைனுக்குச் சென்று மருத்துவம் படிப்பதற்கு மிக முக்கியமான காரணம், நம் நாட்டில் போதிய அளவு மருத்துவக் கல்லூரிகள் இல்லை என்பதுதான். நம் நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 90,000 சீட்களே உள்ளன.

Published:Updated:
ஆனந்த் மஹிந்திரா

எப்போதுமே வித்தியாசமாக யோசித்து செயல்படக்கூடியவர் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா. கார் உற்பத்தியில் கலக்கி வரும் இவர் இப்போது ஹைதராபாத்தில் புதிதாக ஒரு மருத்துவக் கல்லூரி ஒன்றைத் திறக்கத் திட்டமிட்டு வருவதாக ட்வீட் செய்ய, ஏகப்பட்ட பாராட்டுகள் அவருக்குக் குவிந்துள்ளன.

ரஷ்யாவானது உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளதால், உக்ரைனில் மருத்துவம் படிக்கும் பல ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் படிப்பை விட்டுவிட்டு நாடு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். ``நம் மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று மருத்துவம் படிக்கும் நிலையை மாற்ற வேண்டும். தனியார் நிறுவனங்கள் நம் நாட்டில் மருத்துவக் கல்லூரி அமைக்க முன் வர வேண்டும்’’ என்று சமீபத்தில் பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

Doctor (Representational Image)
Doctor (Representational Image)
Pixabay

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நம் நாட்டிலிருந்து பல ஆயிரம் மருத்துவ மாணவர்கள் உக்ரைனுக்குச் சென்று மருத்துவம் படிப்பதற்கு மிக முக்கியமான காரணம், நம் நாட்டில் போதிய அளவு மருத்துவக் கல்லூரிகள் இல்லை என்பதுதான். நம் நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 90,000 சீட்களே உள்ளன. இதற்கு 16 லட்சம் மாணவர்களுக்கு மேல் முட்டி மோதுகின்றனர்.

இந்தக் கல்லூரிகளில் கஷ்டப்பட்டு படிக்க சீட் கிடைத்தாலும், பல லட்சம் செலவு செய்துதான் மருத்துவம் படிக்க முடியும் என்கிற நிலையே நம் நாட்டில் இருக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆனால், உக்ரைன் போன்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் நிறைய மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்த மருத்துவக் கல்லூரிகளில் போதுமான அளவு சீட்டுகள் இருப்பதால், உலகின் எந்த நாட்டு மாணவர்களும் எளிதில் சேர்ந்து படிக்கக்கூடிய நிலை உள்ளது. தவிர, இந்த நாடுகளில் மருத்துவம் படிக்க குறைந்த செலவே ஆகிறது. இந்த இரண்டு காரணங்களுக்காகத் தான் உலகின் பல நாடுகளில் இருந்தும் பல லட்சம் மாணவர்கள் இந்த நாடுகளுக்கு வந்து மருத்துவம் படிக்கிறார்கள்.

ஆனந்த் மஹிந்திரா
ஆனந்த் மஹிந்திரா
Twitter Photo

இது பற்றி எல்லாம் சமீபத்தில் பத்திரிகைகள் மூலம் விளக்கமாகப் படித்துத் தெரிந்துகொண்ட ஆனந்த மஹிந்திரா, ``நம் நாட்டில் மருத்துவக் கல்லூரிகளுக்கு இவ்வளவு பெரிய பற்றாக்குறை இருப்பது எனக்குத் தெரியாது’’ என்று கடந்த வியாழன் அன்று ட்வீட் செய்து, ஹைதராபாத்தில் உள்ள மஹிந்திரா பல்கலைக்கழகத்தில் (MahindraUni) இந்தப் புதிய மருத்துவக் கல்லூரியை அமைப்பது தொடர்பான சாத்தியக்கூறுகளை பரிசீலிக்குமாறு டெக் மஹிந்திரா நிறுவனத்தின் சி.இ.ஓ சி.பி.குருமணிக்கு கோரிக்கை விடுத்திருக்கிறார். இந்தப் பல்கலைக்கழகத்தில் சட்டம், பொறியியல், நிர்வாகம், மீடியா, நுண்கலை எனப் பலவகையான படிப்புகள் உள்ளன.

ஆனந்த் மஹிந்திரா இது தொடர்பாக ட்வீட் செய்தவுடன் அவருக்கு நெட்டிசன்களிடம் இருந்து பாராட்டு மழை கொட்டத் தொடங்கியது. அதே சமயத்தில், ``மருத்துவக் கல்லூரி மூலம் நீங்களும் கோடி கோடியாக சம்பாதிக்க நினைக்காதீர்கள். குறைந்த கட்டணத்தை நீங்கள் வசூலிக்க வேண்டும்’’ என்றும் அட்வைஸ் தந்திருக்கின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism