Published:Updated:

டிஜிட்டல்மயம்: சிறுதொழில் நிறுவனங்களுக்கு வழிகாட்டிய சென்னைக் கருத்தரங்கம்!

கருத்தரங்கம்
பிரீமியம் ஸ்டோரி
கருத்தரங்கம்

கருத்தரங்கம்

டிஜிட்டல்மயம்: சிறுதொழில் நிறுவனங்களுக்கு வழிகாட்டிய சென்னைக் கருத்தரங்கம்!

கருத்தரங்கம்

Published:Updated:
கருத்தரங்கம்
பிரீமியம் ஸ்டோரி
கருத்தரங்கம்

சிறு தொழில் நிறுவனங்கள்தான் நமது பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமானதொரு தூணாக இருக்கிறது. ஆனால், சிறு தொழில் செய்பவர்கள் சந்திக்கும் முக்கியமான பிரச்னை, தொழிலை எப்படி வளர்த்தெடுப்பது, அடுத்து எப்படிக் கொண்டு செல்வது என்பது யோசிக்க முடியாமல் தவிப்பதுதான். ஒரு நாளைக்கு 16 மணி நேரம் தொழிலுக்காக செலவிடும் அவர்களால், நிறுவனத்தின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு சில மணி நேரங் களைக்கூட ஒதுக்க முடிவதில்லை. இந்தக் குறையைப் போக்குகிற மாதிரி சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கென ஒரு நாள் கருத்தரங்கு ஒன்றை சென்னையில் கடந்த 17-ம் தேதி அன்று நடத்தியது ஆந்திரா சேம்பர் ஆஃப் காமர்ஸ். இந்த அமைப்பின் 95-ம் ஆண்டு நிறைவு தினத்தை ஒட்டி இந்தக் கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது ஆந்திரா சேம்பர்.

டிஜிட்டல்மயம்: சிறுதொழில் நிறுவனங்களுக்கு வழிகாட்டிய சென்னைக் கருத்தரங்கம்!

“எதிர்காலத்தை எதிர்கொள்ள சிறுதொழில் நிறுவனங்களைத் தயார்படுத்துவது (Empowering MSMEs to Embrace the future) என்கிற தலைப்பில் நடந்த இந்தக் கருத்தரங்கு மூன்று அமர்வாகப் பிரிக்கப்பட்டு இருந்தது. முதல் அமர்வில் பேசினார் இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்து கலந்துகொண்ட தெற்காசிய எஃப்.என்.எஃப்-பின் தலைவர், டாக்டர் கார்ஸ்டன் க்லைன்.

‘‘8.4 கோடி மக்கள் தொகை உள்ள ஜெர்மனி யைவிட இந்தியாவில்தான் அதிகமான இளைஞர்கள் அதாவது, இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 50 சதவிகிதத்துக்கும் மேற்பட்டவர்கள் இளைஞர்களாக உள்ளனர். இதுவே இந்தியாவின் நிறுவன வளர்ச்சிக்கு சிறந்த வாய்ப்பாக உள்ளது.

எனினும் இந்தியாவிலும் சரி, ஜெர் மனியிலும் சரி, பள்ளிகளில் கற்பிக்கும் பாடம் தொழிலதிபர்களை வளர்ப்பதாக இல்லை. பள்ளிகளில் இதற்கேற்ற கல்வி கற்று தந்தால் நிச்சயமாகத் தொழில்துறையில் நம்மால் பெரும் வளர்ச்சியை அடைய முடியும்’’ என்றார்.

இந்தக் கருத்தரங்கின் இரண்டாவது அமர்வில் பேசினார் கோ ஃப்ருகல் நிறுவனத் தின் சி.இ.ஓ குமார் வேம்பு. குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் டிஜிட்டல்மயம் மற்றும் ஆட்டோமேஷன் செய்ய வேண்டியதன் அவசியம் பற்றி விளக்கமாக எடுத்துச் சொன்னார். ‘‘ஒரு நாட்டின் தொழில்துறை வளர்ச்சி அந்த நாட்டின் ஜனநாயக உரிமைகள் மற்றும் மக்கள் தொகையை யொட்டியே அமையும். வளர்ச்சி அடைந்த நாடுகளில் வயதானவர்களே அதிகம் உள்ளனர். ஆனால், இந்தியாவில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இந்த இளைஞர்களுக்கு வேலை தருகிற மாதிரி, தற்போதைய நிலையில் தொழில் துறையில் புதிய பணியாளர்கள் சேர்க்கைகள் அதிகரித்து வருகின்றனர்.

ஒரு துறையை டிஜிட்டல் மயமாக்குவதற்கு இன்றைய சூழலே சிறந்தது. கணினிமயமாக்கலில் மக்களின் கட்டளைக்குக்கீழ் கணினி இருத்தது. டிஜிட்டல்மயமாக்கலில் கணினியே தன் வேலைகளைச் செய்துவிடும். தொழில் துறையை டிஜிட்டல் மயமாக்கு தலுக்கு நாம் கடைப்பிடிக்க வேண்டிய ஐந்து சிறந்த மாற்றங் கள் பற்றியும் கூறியவர், ‘‘வாய்ப்புகள் என்பது நம் கண் முன்னே இருக்கிறது. அதைப் பயன்படுத்துவது நம் கையில் தான் உள்ளது” என்று பேசி முடிக்க, கருத்தரங்குக்கு வந்த அனைவரும் அவரது பேச்சை வெகுவாகப் பாராட்டினார்கள்.

அவர் பேசிமுடித்ததும், சமுன்னதி ஃபைனான் ஷியல் சர்வீசஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ அனில் குமார், சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் வளர்வதற்கு ஃபின்டெக் நிறுவனங்கள் எப்படி உதவியாக இருக்கும் என்பது பற்றிப் பேசினார்.

டிஜிட்டல்மயம்: சிறுதொழில் நிறுவனங்களுக்கு வழிகாட்டிய சென்னைக் கருத்தரங்கம்!

‘‘கடந்த காலத்தில் இருந்து நாம் அனைத்தையும் கற்றுக் கொள்ள வேண்டும். நாம் கற்ற பாடங்களை, செயல்படுத்து வதில் வித்தியாசமாக யோசித்து செயல்பட வேண்டும்.

டிஜிட்டல் மயமாக்குதலில் இருந்து எந்த விஷயத்தையும் மக்களிடம் எளிதில் கொண்டு சேர்த்துவிடலாம். எடுத்துக் காட்டாக, சமூக வலைதளங் களில் பிரபலமான `கச்சா பாதாம்’ என்கிற பாடல். இந்தப் பாடல் வீடியோ யூடியூபில் 34 கோடி பேர் பார்த்திருக் கிறார்கள். அந்தப் பாடலைப் பாடியவர், சைக்கிளில் கடலை விற்கும் ஒரு சிறு வியாபாரிதான் ஆனால், அவர் பாடல் வரிகள் எல்லோருக்கும் பிடித்திருந்த தால், அவர் உலக அளவில் புகழ் பெற்றவராக மாறியிருக் கிறார். எனவே, வித்தியாசமாக யோசிக்க ஆரம்பியுங்கள். உங்களுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும்’’ என்று பேசி முடித்தார் அனில்குமார்.

மூன்றாவது அமர்வில் பேசி னார் நேச்சுரல்ஸ் ஸ்பாவின் சி.இ.ஓ மற்றும் நிறுவனர் குமரவேல். பிராண்ட் வளர்த் தெடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து அவர் பேசினார்.

‘‘இந்தியாவை நாம் நான்கு பகுதிகளாகப் பிரிக்கலாம். சக்தி வாய்ந்த இந்தியா, ஏழை இந்தியா, நடுத்தர இந்தியா, தொழிலதிபர்களின் இந்தியா என்பதுதான் அந்த நான்கு பிரிவுகள். இன்றைய சூழலில் அரசாங்கம் வேலைகளை உருவாக்க முயற்சி செய்கிறது. ஆனால், உண்மையில் தொழி லதிபர்கள்தான் வேலைகளை உருவாக்க முடியும். இன்றைய இளைஞர்களும், தொழிலதி பர்களும்தான் புதிய கால போராட்ட வீரர்கள். அவர் களே இந்தியாவை வறுமையில் இருந்து மீட்பார்கள்.

மழை நீர் என்பது நாம் எப்படிப்பட்ட பாத்திரத்தை வைத்தாலும் அதை நிரப்பும். அது போலத்தான் கனவுகளும். நாம் எதை சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ, அதுதான் கனவு. அது, எதுவாக இருந்தாலும் சரி, கனவுகளுக்கு எல்லையில்லை. அனைவரும் தன்னம்பிக்கை உடையவர் களாக இருக்க வேண்டும்’’ என்று பேசிய குமரவேல், சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில்முனைவோர்கள் புத்தகம் படிக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

டிஜிட்டல்மயம்: சிறுதொழில் நிறுவனங்களுக்கு வழிகாட்டிய சென்னைக் கருத்தரங்கம்!

“வெற்றி என்பது எண்கள் உடைய பூட்டை போன்றது. சரியான எண்கள் தெரிந்தால் போதும், திறப்பது யாராக இருந்தாலும் பூட்டு திறந்து விடும்” என்று பேசி முடித்தார்.

இவரைத் தொடர்ந்து மைண்ட் ஃபுள் மார்க்கெட்டிங் ஸ்ட்ராட்டஜிஸ்ட் நிறுவனத்தின் நிறுவனர் ராஜேஷ் சீனிவாசன் பேசினார். வாடிக்கையாளர் திருப்தியின் முக்கியத்துவத்தைப் பற்றி அவர் பேசியதாவது... ‘‘ஒரு பழ வியாபாரத்துக்குக்கூட பல கோணங்கள் உண்டு. வாடிக்கை யாளர்களை, அவர்கள் இடத்தில் இருந்து புரிந்துகொள்வது மிகவும் முக்கியம். இப்போது ‘ஜூம்’ இணையதளத்தைப் பயன்படுத்தி, நாம் பலருடனும் பல விஷயங்களைப் பற்றி பேசுகிறோம். ஆனால், கோவிட்டுக்கு முன் அதன் விலை மிகவும் குறைவாக இருந்தது; ஆனால், கோவிட் காலத்தில், அதன் பங்கு விலை நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குக் கணிசமாக உயர்ந்திருக்கிறது. ஆனால், கோவிட்டுக்குப் பிறகு பெரிய சரிவை சந்தித்தது. இதற்குக் காரணம், மக்களின் தேவையில் ஏற்பட்ட மாற்றம்தான்.

அமேசான் நிறுவனம் உலகம் முழுக்க நேரடிக் கடைகளைத் திறந்து வருகிறது. ஆனால், கடைகள் வைத்திருப்பவர்களோ, ஆன்லைன் மூலம் பொருள்களை விற்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். நுகர்வோரிடம் எவ்வளவு அதிகமாக பேசுகிறோமோ, அந்த அளவுக்கு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அது உதவும். எந்தத் தொழிலாக இருந்தாலும் மனிதர்களையும் தொழில்நுட்பத்தையும் சமநிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்’’ என்றும் கூறினார்.

இந்தக் கருத்தரங்கின் இறுதியில் ஆந்திரா சேம்பர் ஆஃப் காமர்ஸின் தலைவர் டாக்டர் வி.எல்.இந்திரா தத், இந்தக் கருத்தரங்கு நடக்க காரணமாக இருந்த அனைவருக்கும் சிறப்பு பரிசு வழங்கினார். ஆந்திரா சேம்பர்சின் எம்.எஸ்.எம்.இ பிரிவின் தலைவர் எம்.கே.ஆனந்த் நன்றி சொல்ல, இந்தக் கருத்தரங்கம் சிறப்பாக முடிந்தது.

கருத்தரங்கில் கலந்து சிறுதொழில்முனைவோர்கள் அனைவரும் தங்கள் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான பாடங்களைக் கற்றபடி வெளியேறினார்கள். இது மாதிரியான கருத்தரங்குகள் தமிழகம் முழுக்க நடக்க வேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு!