Published:Updated:

Assembling industry: தமிழகத்தில் நம்பிக்கை தரும் புதிய வேலைவாய்ப்புகள்!

அசெம்பிளிங் 
தொழில்
அசெம்பிளிங் தொழில்

Assembling industry: ஐபோன், ஐபாட் உள்ளிட்ட ஏராளமான பொருள்களைத் தயாரித்து (Finished Goods), அவற்றை ஏற்றுமதி செய்யும் முக்கிய இடமாகத் திகழ்ந்த சீனாவின் இடத்தை, இந்தியா பிடிப்பதற்கு நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

உதிரி பாகங்களை வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து, அவற்றை ஒன்றிணைத்து, பல்வேறு பொருள்களைத் தயாரிக்கக்கூடிய 'அசெம்பிளிங்' தொழில்களைத் தமிழ்நாட்டில் அதிக அளவில் ஏற்படுத்த நிறைய வாய்ப்புகள் உள்ளன.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் வேலையையும் வாழ்வாதாரங்களையும் இழந்திருக்கும் தற்போதைய சூழலில், இந்தச் செய்தி மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் தருவதாக இருக்கிறது.

திருப்பூரில் ஆயத்த ஆடைகள், சிவகாசியில் பட்டாசு, ராணிப்பேட்டையில் தோல் பொருள்கள் எனத் தமிழ்நாட்டில் சில நகரங்களில் தொழில்கள் வளர்ந்துள்ளபோதிலும், கச்சாப் பொருள்கள் (Raw Material) மற்றும் உதிரி பாகங்களை இறக்குமதி செய்து, அவற்றின் மூலம் பல்வேறு பொருள்களாகத் தயாரிக்கும் 'அசெம்பிளிங்' தொழில்கள் என்பது தமிழ்நாட்டில் குறைவாகவே இருக்கின்றன. இத்தகைய தொழில்கள் நன்கு வளர்ந்திருந்தாலும், இன்னும் கூடுதலாகக் கவனம் செலுத்த வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.

இத்தகைய சூழலில், 'உலகத்துக்காக தமிழ்நாட்டில் தயாரித்தல்' என்ற கருத்துருவை ஏற்படுத்தி, அதைத் தமிழகத்தில் பரவலாகக் கொண்டு செல்ல வேண்டும். சீனா போன்ற சில நாடுகளை மட்டுமே சார்ந்திருக்காமல், தங்களின் விநியோகச் சங்கிலியைப் (Supply Chain) பரவலாக்க வேண்டும் என்ற சிந்தனை பன்னாட்டு நிறுவனங்களிடம் ஏற்பட்டுள்ளது.

அதனால்தான், கொரோனா காலத்துக்கு முன்பாகவே, அமெரிக்க–சீன வர்த்தக யுத்தம் காரணமாக சில பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் விநியோகச் சங்கிலியை சீனாவிலிருந்து ஆசியாவின் பிற பகுதிகளுக்கு மாற்ற ஆரம்பித்தன.

அசெம்பிளிங் 
தொழில்
அசெம்பிளிங் தொழில்

உதிரி பாகங்களையும், கச்சாப் பொருள்களையும் பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து ஐபோன், ஐபாட் உள்ளிட்ட ஏராளமான பொருள்களைத் தயாரித்து (Finished Goods), அவற்றை ஏற்றுமதி செய்யும் முக்கிய இடமாகத் திகழ்ந்த சீனாவின் இடத்தை, இந்தியா பிடிப்பதற்கு நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டால், லட்சக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும்.

தமிழகத்தில் அசெம்பிளிங் தொழில்களை அதிக அளவில் உருவாக்குவதற்கான வாய்ப்புகள் குறித்து சென்னை வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (எம்.ஐ.டி.எஸ்) இயக்குநரும், பேராசிரியருமான பி.ஜி.பாபு மற்றும் மும்பையைச் சேர்ந்த இந்திரா காந்தி மேம்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர் சி.வீரமணி ஆகியோர் ஆய்வுக் கட்டுரை (Why Assemble in Tamil Nadu?) ஒன்றைத் தயாரித்துள்ளனர்.

அதில் தமிழகச் சூழல் குறித்தும், அசெம்பிளிங் தொழிலை தமிழகத்தில் ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் விரிவாகக் கூறியுள்ளனர். இது குறித்து பேராசிரியர் பி.ஜி.பாபுவிடம் பேசினோம்.

“அசெம்பிளிங் தொழில்களை அதிக அளவில் உருவாக்கி, சிறப்பாகச் செய்தோமென்றால், ஏற்றுமதியைப் பெருமளவில் அதிகரிக்க முடியும். மேலும், ஊழியர்களுக்கு மதிப்பு வாய்ந்த ஊதியத்தைத் தரக்கூடிய வேலைவாய்ப்புகளை அசெம்பிளிங் தொழில்கள் மூலமாக உருவாக்க முடியும்.

சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்து முதலீடுகள் வெளியேறிக்கொண்டிருக்கும் நேரத்தில், தமிழ்நாட்டுக்கு முதலீடுகளைக் கொண்டுவர நல்ல வாய்ப்பு உருவாகியிருக்கிறது. எனவே, 'உலகத்துக்காக தமிழ்நாட்டில் அசெம்பிளிங் செய்தல்' என்ற சூழலை இங்கு உருவாக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்” என்கிறார்.

இதுகுறித்த புள்ளிவிவரங்களுடன் கூடிய முழுமையான கட்டுரையை முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க... https://bit.ly/2WSTf7F > தமிழகத்தில் அசெம்பிளிங் தொழில்..! - புதிதாக உருவாகும் வேலைவாய்ப்புகள்! https://bit.ly/2WSTf7F

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு