Published:Updated:

புவிசார் குறியீடு அங்கீகாரத்துக்குக் காத்திருக்கும் ஆத்தங்குடி டைல்ஸ்... கைகொடுக்குமா அரசு?

கைகளால் உருவாகும் விதவிதமான பதிப்பு ஓடுகள்
கைகளால் உருவாகும் விதவிதமான பதிப்பு ஓடுகள்

கேக் அடுமனையில் தயார் செய்யப்படும் ரொட்டித்துண்டுகள் போல, பக்குவப்படுத்தி இந்த டைல்ஸை தயார்செய்கிறார்கள். கிரானைட், செராமிக்கோடு ஒப்பிடும்போது, ஆத்தங்குடி டைல்ஸின் விலை குறைவு.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள செட்டிநாட்டில், 96 கிராமங்கள் அடக்கம். அந்தக் கிராமத்தில் உள்ள பிரமாண்ட வீடுகளின் அழகுக்கு அழகு சேர்ப்பது, ஆத்தங்குடி டைல்ஸ். சிமென்ட் கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் இருந்தே ஆத்தங்குடி டைல்ஸ் பாரம்பர்யமாக செய்யப்படுகிறது.

ஆத்தங்குடி டைல்ஸ்
ஆத்தங்குடி டைல்ஸ்

காரைக்குடியை ஒட்டியிருக்கும் ஓர் அழகிய கிராமம்தான் ஆத்தங்குடி. பாரம்பர்ய வீடுகள் நிறைந்த இக்கிராமத்தில், சுமார் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் டைல்ஸ் தயாரிக்கும் தொழில் நடந்துவருகிறது. குடிசைத் தொழிலாக இருந்தாலும், பல நூறு குடும்பங்களை வாழவைக்கிறது இந்த டைல்ஸ் தொழில். இன்றுவரை எந்த இயந்திரப் பயன்பாடும் இன்றி, ஆத்தங்குடி டைல்ஸ் கைகளாலேயே செய்யப்படுகிறது.

கேக் அடுமனையில் தயார் செய்யப்படும் ரொட்டித்துண்டுகள் போல பக்குவப்படுத்தி, இந்த டைல்ஸை தயார் செய்கிறார்கள். கிரானைட், செராமிக்கோடு ஒப்பிடும்போது ஆத்தங்குடி டைல்ஸின் விலை குறைவு. தவிர, ஆரோக்கியத்துக்கும் நல்லது என்கிறார்கள். இந்த டைல்ஸ், கோடையிலும் குளிர் காலத்திலும் சம வெப்பநிலையைத் தரும் என்கிறார்கள் உற்பத்தியாளர்கள்.

ஆத்தங்குடி டைல்ஸ்
ஆத்தங்குடி டைல்ஸ்

பாரம்பர்ய முறையில் காலத்திற்கு ஏற்ற வடிவங்களிலும் டிசைன்களிலும் தயாரிக்கப்படும் ஆத்தங்குடி டைல்ஸ்க்கு உலகெங்கும் பெரிய வரவேற்பு இருக்கிறது.

அதேநேரம், ஆத்தங்குடி டைல்ஸ் என்ற பெயரில் நிறைய போலி டைல்ஸ்களும் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகின்றன. தரமற்ற, எந்திரங்களின் உதவியோடு செய்யப்படும் அதுபோன்ற டைல்ஸ்களால் உண்மையான ஆத்தங்குடி டைல்ஸ் விற்பனையும் பெயரும் பாதிக்கப்படுவதாகப் புகார் தெரிவிக்கிறார்கள் உற்பத்தியாளர்கள்.

எனவே, ஆத்தங்குடி கற்களுக்கு புவிசார் குறியீடு (geographical indication) வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய ஆத்தங்குடி டைல்ஸ் அசோசியேஷன் தலைவர் ரவி, "ஆத்தங்குடியில் 27 குடும்பங்கள் பாரம்பர்ய முறைப்படி ஆத்தங்குடி டைல்ஸ் உற்பத்தி செய்கிறோம். அதில், 5 குடும்பங்கள் பல தலைமுறையாக இந்தத் தொழிலில் இருக்கிறது. முழுக்க முழுக்க கைகளால் தயார் செய்யப்படும் இந்த டைல்ஸ் கற்களை செட்டிநாடு கல், பூக்கல், கண்ணாடிக் கல் என்று பல பெயர்களில் அழைக்கிறார்கள்.

painting designs
painting designs

ஆத்தங்குடியில் மட்டும் தயாரிக்கப்படும் இந்தப் பாரம்பர்ய கற்களுக்கு அரசு புவிசார் குறியீடு வழங்கினால், எங்களுடைய வாழ்வாதாரம் மேம்படும். மேலும், எங்கள் கிராமத்துப் பெருமையும் காப்பாற்றப்படும்" என்கிறார்.

"ஆத்தங்குடி டைல்ஸ் பற்றி தவறான பல செய்திகள் உலவுகின்றன. வரலாற்றை மாற்ற முயல்கிறார்கள். ஆத்தங்குடியில் உள்ள சில குடும்பங்கள் ஆரம்பித்தவைத்த தொழில் இது. எங்கள் கிராமம்தான் இந்தத் தொழிலுக்குப் பூர்வீகம். பர்மா, வியட்நாம், மொரீஷியஸ் என்று பல இடங்களில் இருந்து டிசைன்களைக் கொண்டுவந்து இங்கே டைஸ்லை வடிவமைத்தார்கள்.

சஞ்சை காந்தி
சஞ்சை காந்தி

ஆறுக்கு - ஆறு, எட்டுக்கு - எட்டு என்று பல அளவுகளில் டைல்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இப்போதிருக்கும் ஸ்மார்ட்போன் அளவுக்குக்கூட டைல்ஸ் தயார் செய்யப்பட்டுள்ளது. தற்போது நாங்கள், பத்துக்கு - பத்து என்ற அளவில் தயாரிக்கிறோம். பல நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்துவருகிறோம்.

தற்போது வரை எங்கள் டைல்ஸ்க்கு புவிசார் குறியீடு கிடைக்கவில்லை. 10 ஆண்டுகளுக்கு முன் இது தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு, அப்படியே விட்டுவிட்டார்கள். அரசு, ஆத்தங்குடி டைல்ஸுக்கு புவிசார் கிடைக்க உதவ வேண்டும்" என்கிறார், ஆத்தங்குடி டைல்ஸ் அசோசியேஷன் சங்கச் செயலாளர் அலெக்ஸ்.

சஞ்சை காந்தி குடும்பத்துடன்
சஞ்சை காந்தி குடும்பத்துடன்

தமிழகத்தில் 23 பொருட்களுக்கு மேல் புவிசார் குறியீடு பெற்றுக் கொடுத்த வழக்கறிஞர் சஞ்சய் காந்தியிடம் பேசினோம். "தமிழகத்தில் தஞ்சாவூர் வீணை, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, கோயில்பட்டி கடலைமிட்டாய் உள்ளிட்ட பல பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்றுள்ளோம். சிவகங்கை மாவட்டத்தில் ஏற்கெனவே காரைக்குடி கண்டாங்கி சேலைக்கு புவிசார் குறியீடு வாங்கியுள்ளோம். ஆத்தங்குடி டைல்ஸுக்கும் புவிசார் குறியீடு பெற வாய்ப்பு உள்ளது.

ஆத்தங்குடி கற்களின் வரலாறு, பாரம்பர்யம், செய்முறை என அனைத்தையும் சேகரித்து ஆவணங்களாக மாற்றி, புவிசார் குறியீடுக்கு பதிவுசெய்ய வேண்டும்.

ஆத்தங்குடி
ஆத்தங்குடி
பாரம்பர்யத்துக்கு கிடைத்த பெருமை! -புவிசார் குறியீடு வென்ற தஞ்சாவூர் நெட்டி, அரும்பாவூர் மரச்சிற்பம்

புவிசார் குறியீடு பெறுவதன்மூலம் ஆத்தங்குடி டைல்ஸ் தயார் செய்யும் நிறுவனங்களும் தொழிலாளர்களின் நிலையும் மேம்படும். போலியாக ஆத்தங்குடி டைல்ஸ் தயார் செய்து விற்பனை செய்யும் நபர்கள்மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பாகவும் அமையும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு