Published:Updated:

`மாத்தி யோசித்தால் நிச்சயம் சாதிக்கலாம்!' - பெண்களுக்கான ஆன்லைன் பிசினஸ் வழிகாட்டல் பயிற்சி

ஆன்லைன் பிசினஸ் வழிகாட்டல் பயிற்சி
ஆன்லைன் பிசினஸ் வழிகாட்டல் பயிற்சி

முதலீடு செய்ய பணம் இருந்தால் ஒரு பிசினஸை யார் வேண்டுமானாலும் தொடங்கலாம். ஆனால் அந்த பிசினஸில் ஜெயிக்க சரியான திட்டமிடல் அவசியம். சரியான திட்டமிடலுடன் களம் இறங்கினால் நம் சந்ததியினருக்கு ஏற்ற குடும்பத் தொழிலாகவும் ஒரு பிசினஸை மாற்ற முடியும்.

கொரோனா, பொருளாதார ரீதியான நிறைய பாதிப்புகளை அனைவரின் வாழ்க்கையிலும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிச்சயமற்ற தன்மை சொந்தத் தொழில் தொடங்கும் எண்ணத்தை நோக்கி பலரை உந்தித் தள்ளியிருக்கிறது. வேலையிழப்பு, சம்பளக் குறைப்பு என பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட பலரும் புதிதாக ஆன்லைன் பிசினஸ் தொடங்குவதைத்தான் இலக்காகக்கொண்டு களம் இறங்கி இருக்கிறார்கள்.

மாதிரி படம்
மாதிரி படம்

உங்களின் புதிய ஆன்லைன் பிசினஸுக்கான பிளான் தொடங்கி, வருமானத்தை அதிகரிப்பது, ஆன்லைனில் ஒரு பொருளை விற்பனை செய்வது, குறைந்த செலவில் விளம்பரம் செய்வது வரை என ஒரு பிசினஸ் தொடங்குவதற்கு அனைத்து தகவல்களையும் கொண்ட `மாத்தி யோசி' என்ற பெண்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது. அவள் விகடன் மற்றும் நாணயம் விகடன் இணைந்து வழங்கவிருக்கும் இந்தப் பயிற்சி வகுப்பு ஜூலை 11-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 முதல் 5.30 மணி வரை நடைபெற உள்ளது

இது தொடர்பாக விரிவாகப் பேசிய மார்கெட்டிங் எக்ஸ்பெர்ட் சக்திவேல் பன்னீர்செல்வம், ``சில தலைமுறையாகத் தொழில் செய்த குடும்பங்கள் எனில் அதிலுள்ள ஏற்ற இறக்கங்களைக் கையாள்வது அவர்களுக்கு எளிதாக இருக்கும். ஆனால் புதிதாகத் தொழில் தொடங்குபவர்கள் யாரும் அவ்வளவு எளிதில் அம்பானி ஆகிவிட முடியாது. வெற்றியாளர்களின் கதைகளை நாம் கொண்டாடுகிறோம். ஆனால் அந்த வெற்றிக்குப் பின் அவர்கள் கண்ட தோல்விகளையும், சவால்களையும் யாரும் பேசுவதுகூட கிடையாது. மற்ற முயற்சிகளில் தோற்கும்போது நம் உழைப்பு மட்டுமே வீணாகும். ஆனால் ஒரு பிசினஸில் தோற்கும்போது உழைப்புடன் சேர்த்து, நம் முதலீடும் வீணாகிவிடும். ஒருமுறை ஏற்படும் நஷ்டத்திலிருந்து மீண்டு வர சில வருடங்கள்கூட ஆகலாம்.

பிசினஸ்
பிசினஸ்

முதலீடு செய்ய பணம் இருந்தால் ஒரு பிசினஸை யார் வேண்டுமானாலும் தொடங்கலாம். ஆனால் அந்த பிசினஸில் ஜெயிக்க சரியான திட்டமிடல் அவசியம். சரியான திட்டமிடலுடன் களம் இறங்கினால் நம் சந்ததியினருக்கு ஏற்ற குடும்பத் தொழிலாகவும் ஒரு பிசினஸை மாற்ற முடியும். இன்று பிசினஸில் ஜாம்பவான்களாக இருக்கும் ஒவ்வொருவரும் சரியான திட்டமிடலையும், இலக்குகளையும் கொண்டுதான் அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணித்திருப்பார்கள்.

இன்று பல பெண்கள் ஆன்லைனில் பிசினஸ் செய்கிறார்கள். பார்ப்பதற்கு ஆக்டிவ்வாகத் தெரிவார்கள். நிறைய ஃபாலோயர்கள் இருப்பார்கள். பிசினஸ் பயங்கர லாபத்தில் இருப்பது போன்று தெரியும். வருமானமும் கிடைக்கும். ஆனால் உழைப்புக்கு ஏற்ற லாபம் இருக்காது. ஒரு மாதத்திற்கான மொத்த லாபம் 15,000 முதல் 20,000 ரூபாய்தான் இருக்கும்.

ஆன்லைன் பிசினஸ்
ஆன்லைன் பிசினஸ்

உதாரணமாக, வீட்டிலிருந்து ஆன்லைன் மூலம் சேலை விற்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். ஒரு சேலைக்கு அதிகபட்சம் 200 ரூபாய் லாபம் வைத்தால்கூட மாதத்திற்கு 100 சேலைகள் விற்றால் கூட 20,000 தான் லாபம் கிடைக்கும். பொழுதுபோக்குக்காகச் செய்பவர்கள் இந்தத் தொகையைப்பற்றி கவலைப்படத் தேவையில்லை. `தன் எதிர்காலம் பிசினஸ்தான்' என்று இருப்பவர்கள் இன்னும் மாற்றி யோசிக்க வேண்டும்.

சரியான திட்டமிடலுடன் தொழில் தொடங்கினால் வீட்டிலிருந்தே குறைந்த நேரத்தில் லட்சங்களில் வருமானம் சாத்தியமே... மாத்தி யோசிப்பது எப்படி, தொழில் தொடங்குவது எப்படி என்றெல்லாம் `மாத்தி யோசி!' பயிற்சி வகுப்பில் விரிவாகக் காண்போம் என்றார்" சக்திவேல் பன்னீர்செல்வம்.

ஆன்லைன் பிசினஸ் வழிகாட்டல் பயிற்சி
ஆன்லைன் பிசினஸ் வழிகாட்டல் பயிற்சி

`மாத்தி யோசி!' பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

https://bit.ly/3xePR72

அடுத்த கட்டுரைக்கு