Published:Updated:

பெண்கள் வேலைக்குச் செல்வதை அதிகரித்துள்ளதா கோவிட் பெருந்தொற்று? ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன?

Office (Representational Image) ( Image by RAEng_Publications from Pixabay )

நடப்பு 2020-ம் ஆண்டில் 3.8 லட்சம் நிறுவனங்கள் வொர்க் ஃப்ரம் ஹொம் வசதியை அதன் ஊழியர்களுக்கு வழங்கியுள்ளது. இது, 2016-ம் ஆண்டைவிட இரண்டு மடங்கு அதிகமாகும். அந்த ஆண்டில் ஐ.டி துறை சார்ந்த ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே வீட்டில் இருந்து வேலை செய்யும் வாய்ப்பை வழங்கிக்கொண்டிருந்தன.

பெண்கள் வேலைக்குச் செல்வதை அதிகரித்துள்ளதா கோவிட் பெருந்தொற்று? ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன?

நடப்பு 2020-ம் ஆண்டில் 3.8 லட்சம் நிறுவனங்கள் வொர்க் ஃப்ரம் ஹொம் வசதியை அதன் ஊழியர்களுக்கு வழங்கியுள்ளது. இது, 2016-ம் ஆண்டைவிட இரண்டு மடங்கு அதிகமாகும். அந்த ஆண்டில் ஐ.டி துறை சார்ந்த ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே வீட்டில் இருந்து வேலை செய்யும் வாய்ப்பை வழங்கிக்கொண்டிருந்தன.

Published:Updated:
Office (Representational Image) ( Image by RAEng_Publications from Pixabay )
அவ்தார் என்கிற நிறுவனம் பெண்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பது, மகப்பேறு மற்றும் குடும்ப சூழ்நிலை காரணமாக வேலையை விடும் பெண்களுக்கு மறு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தருவது மற்றும் பெண்கள் வேலையிடங்களில் எதிர்கொள்ளும் பிரச்னைகள் மற்றும் சவால்களை எதிர்கொள்வது எப்படி என்கிற விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவது போன்ற விஷயங்களைச் செய்து வரும் நிறுவனமாகும்.

இந்த நிறுவனம் அண்மையில் `Avtar’s 2022 Status of Women’s Workforce Participation in India' என்கிற ஆய்வறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையில், ``கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பாகப் பெண்கள் வேலைக்குப் போய்கொண்டிருந்த நிலையை ஒப்பிடும்போது, தற்போது ஏராளமான பெண்கள் வேலைக்குச் செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். 2016-ம் ஆண்டில் வேலை தேடிய பெண்களின் எண்ணிக்கை 5.7 கோடியாக இருந்திருக்கிறது. அது நடப்பு 2022-ல் 7.6 கோடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெண்கள்
பெண்கள்
Photo by Avel Chuklanov on Unsplash

2015 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் உயர்கல்வி படிப்புகளில் பெண் மாணவர்களின் சேர்க்கை 18.2% வளர்ச்சியைக் கண்டுள்ளது. நிச்சயமாக இந்நிலை பெண்களின் திறமையை மேம்படுத்தும். ஆலோசனை (கன்சல்டிங்), தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த பணிகள் (ஐ.டி & ஐ.டி.இ.எஸ்) மற்றும் நிதிச் சேவை (பி.எஃப்.எஸ்.ஐ) ஆகியவை 2020-ம் ஆண்டில் பெண் திறமையாளர்களைப் பணியமர்த்தும் முதல் மூன்று துறைகளாக இருக்கும்.

கொரோனா தொற்றுக்குப் பிறகு வீட்டிலிருந்து வேலை (வொர்க் ஃப்ரம் ஹோம்) மாதிரியான சில அலுவலகக் கட்டமைப்புகள் மற்றும் அலுவலக கலாசார மாற்றங்கள் பெண்கள் வேலைக்குச் செல்வதை அதிகப்படுத்தியிருக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நடப்பு 2020-ம் ஆண்டில் 3.8 லட்சம் நிறுவனங்கள் வொர்க் ஃப்ரம் ஹொம் வசதியை அதன் ஊழியர்களுக்கு வழங்கியுள்ளது. இது, 2016-ம் ஆண்டைவிட இரண்டு மடங்கு அதிகமாகும். அந்த ஆண்டில் ஐ.டி துறை சார்ந்த ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே வீட்டில் இருந்து வேலை செய்யும் வாய்ப்பை வழங்கிக் கொண்டிருந்தன.

செளந்தர்யா ராஜேஷ்
செளந்தர்யா ராஜேஷ்

ஆனால், இன்று பெரும்பாலான துறை சார்ந்த நிறுவனங்கள் வீட்டில் இருந்து வேலை செய்யும் வாய்ப்பை வழங்குவதால், பெண்களுக்கு இந்த வசதி பொருத்தமானதாக இருக்கிறது. சுமார் 12 லட்சம் நகர்ப்புற பெண்கள் வீட்டில் இருந்து வேலை என்கிற வசதியின் மூலம் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது.

இந்த ஆய்வறிக்கை குறித்து இந்த நிறுவனத்தின் நிறுவனர் செளந்தர்யா ராஜேஷ், ``பெண்கள் வேலைக்குப் போவதும், அவர்கள் வேலைக்குப் போக ஆர்வம் காட்டுவதும் அதிகரித்திருப்பது ஆரோக்கியமான விஷயம்தான். கொரோனா தொற்று காரணமாகப் பல நிறுவனங்கள் வீட்டில் இருந்து வேலை செய்வதை ஊக்குவிப்பதால் அது பெண்கள் வேலையில் இருந்து விலகுவதை குறைத்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல், வீட்டில் இருந்து வேலை செய்யும் வாய்ப்புகளை வழங்குவதால், வேலைக்குச் செல்லும் ஆர்வத்தை அது தூண்டவும் செய்கிறது.

மேலும், தன் ஊழியர்களின் குழந்தை வளர்ப்புக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்திருக்கிறது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் குழந்தை பராமரிப்பு ஆதரவை வழங்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை 2016-ல் 165-ஆக இருந்தது. இது நடப்பு ஆண்டில் 581 ஆக அதிகரித்துள்ளது. கோவிட்-19 தொற்றுக்குப் பின், சிறந்த குழந்தை பராமரிப்புக்கான அவசியத்தை அதிக எண்ணிக்கையிலான நிறுவனங்கள் புரிந்து கொண்டுள்ளன. வீட்டுக்கு அருகிலும், அலுவலக வளாகத்துக்கு உள்ளும் குழந்தைகள் காப்பகங்கள் அமைப்பது மற்றும் வீட்டில் இருந்து குழந்தைகளைப் பராமரிப்பதற்கான திட்டங்களை இனி வரும் ஆண்டுகளில் பல்வேறு நிறுவனங்கள் செயல்படுத்தும்" என்றார் அவர்.