முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி வள்ளல் பற்றி நாம் சிறு வயதில் படித்திருக்கிறோம். நவீன இந்தியாவில் சுமார் 21 பில்லியன் டாலரை (ஏறக்குறைய ரூ.1,45,000 கோடி) தனது அறக்கட்டளையான ‘அசிம் பிரேம்ஜி பவுண்டேஷன்’ மூலம் கல்வி மேம்பாட்டுக்காகக் தந்திருப்பவர் விப்ரோ நிறுவனத்தின் தலைவராக இருந்த அசிம் பிரேம்ஜி. உலக அளவில் பில்கேட்ஸ், வாரன் பஃபெட்டுக்கு அடுத்தபடியாக சமூக மேம்பாட்டுக்கென தனது சொத்தில் 90 சதவிகிதத்தைக் கொடுத்து மூன்றாவது இடத்தில் இருப்பவர் பிரேம்ஜி.

இவரைப் பற்றி சமீபத்தில் வந்திருக்கும் புத்தகம் `அசிம் பிரேம்ஜி – தி மேன் பியாண்ட் தி பில்லியன்ஸ் (Azim Premji – The Man Beyond the Billions)’. சந்தீப் கன்னா, வருண் சூத் ஆகிய இருவரும் இந்தப் புத்தகத்தில் அசிம் பிரேம்ஜி பற்றி சுவாரஸ்யமாக குறிப்பிட்டுள்ள பகுதிகள் இனி...

அசிம் பிரேம்ஜியின் எளிமை..!

எத்தனை கோடி ரூபாய் சம்பாதித்தாலும் இவரது சாப்பாட்டு முறையில், பயன்படுத்தும் காரில், பயணிக்கும் முறையில் எந்தவொரு மாற்றமும் இருந்ததில்லை. அது போலவே, இவர் தனது நிறுவனத்தில் வேலை செய்பவர்களும் இருக்க வேண்டுமென நினைப்பதால், பலரின் அதிருப்திக்கு ஆளானவர். இருப்பினும் விப்ரோ குழுமத்துக்கான பண்பாடு மற்ற குழுமங்களுடன் ஒப்பிடுகையில் தனித்துவமானது.

10 டாலரில் 3 பேருக்கு பர்கர்..!

அலுவலகத்தில் எங்காவது வீணாக ஃபேன் அல்லது லைட் எரிந்துகொண்டிருப்பதைப் பார்த்தால் அதை நிறுத்திவிடக்கூடிய பழக்கம் கொண்டவர். ஒரு முறை அமெரிக்கப் பயணத்தின்போது உயர் அதிகாரி ஒருவர், மூன்று பேர் சாப்பிடுவதற்கு 10 டாலரில் பர்கர் வாங்கிக் கொடுக்க, அந்தச் சிக்கனத்தைப் பாராட்டியவர் பிரேம்ஜி.

விப்ரோ வேல்யூஸ்..!

1971-ம் ஆண்டில் விப்ரோ குழுமத்துக்கான பண்புகளை வரையறுக்க ஆரம்பித்தார். அது இன்றைக்கு `விப்ரோ வேல்யூஸ்’ என அங்கு பணியாற்றுபவர் களிடையே அறியப்படுகிறது. அதில் இடம் பெற்றிருக்கும் முக்கியமான மூன்று பண்புகள்... நேர்மை, மக்கள் மீது மரியாதை, வாடிக்கையாளருக்கு முக்கியத்துவம் ஆகும்.

வாடிக்கையாளர்கள் சந்திப்பு..!

எந்தவொரு ஊருக்குச் சென்றாலும் விநியோகஸ்தர்கள், வாடிக்கையாளர்கள், க்ளையன்டுகள் எனப் பலதரப்பினரையும் அவர்கள் இருக்கும் இடத்துக்கு நேரில் சென்று சந்தித்து அவர்களது நிறை குறைகளைக் கேட்டு அதற்கேற்ப வியாபார உத்திகளை அமைத்துக் கொள்வது பிரேம்ஜியின் வழக்கம்.

சமூக நலனில் அக்கறை..!

இவர் அம்மா மருத்துவராக பணியாற்றிய இடங்களுக்கு சிறு வயதில் தொடர்ந்து சென்றதால், சமூகநலனில் அக்கறை ஏற்பட ஆரம்பித்தது. 1966-ம் ஆண்டு வெறும் இரண்டு மில்லியன் டாலர் வருமானம் ஈட்டிய சமையல் எண்ணெய் தயாரிக்கும் நிறுவனத்தை 2019-ம் ஆண்டு 11.5 பில்லியன் டாலர் வருமானம் ஈட்டும் குழுமமாக உருவாக்கிக் காட்டியவர். சிறிது பிடிவாதம் இருந்தாலும் அடுத்தவர்களின் ஆலோசனைகளுக்கு மதிப்பு கொடுப்பவர்.

தவறுக்கு வருத்தம் தெரிவித்த அசிம்..!

அஜிம் தலைமையின்கீழ் ஒரு பரீட்சார்த்த முயற்சியாக இரண்டு தலைமைச் செயல் அதிகாரிகள் நியமிக்கப்பட, அவர்களின் (கிரிஷ் பரஞ்ச்பே, சுரேஷ் வாஷ்வானி) செயல்பாடு சரியில்லையென தகாத முறையில் பதவி நீக்கம் செய்யப்பட்டார்கள். அது பொது வெளியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால், அது நடந்து முடிந்த சில மாதங்களுக்குப் பின், தான் அப்படிச் செய்தது தவறு என உரியவர்களிடம் கூறி வருத்தம் தெரிவித்தார்.

உலக அளவில் சோனி, நோக்கியா போன்ற பல நிறுவனங் களின் போர்டுகளில் இடம்பெற அழைப்புகள் வந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளாமல் மறுத்தவர் அசிம் பிரேம்ஜி.

சொந்த மகன் ஆனாலும்...

தன் குடும்பத்தைப் பற்றியோ, குடும்ப உறுப்பினர்கள் பற்றியோ பொதுவெளியில் பலரும் பேசுவதை அசிம் பிரேம்ஜி விரும்புவதில்லை. அதேபோல, அவர் மகன் ரிஷாத் பிரேம்ஜி படித்து முடித்துவிட்டு, விப்ரோவில் இணைந்தபோது, எடுத்த எடுப்பிலேயே அவருக்கு உயர்பதவியைத் தந்துவிடாமல், ஒவ்வொரு துறையிலும் எல்லோரும் பெறும் பயிற்சியைப் பெற்ற பிறகே தலைமைப் பதவியில் அமர வைத்தார் அசிம் பிரேம்ஜி. சுருக்கமாக, அவர் ஒரு வித்தியாச மான தொழிலதிபர்!

கடனுக்குப் பதிலாகக் கிடைத்த விப்ரோ நிறுவனம்..!

மும்பையிலிருந்து வெகு தொலைவில் இருக்கும் அமல்நேர் என்ற இடத்துக்குப் புலம்பெயர்ந்த பிரேம்ஜியின் தந்தை ஹாஷம் பிரேம்ஜி, அங்கு பணம் கொடுக்கல், வாங்கலில் ஈடுபட்டார். அப்போது அவரிடம் கடன் வாங்கிய சிறு தொழிலதிபர் ஒருவர், தான் கடனாக வாங்கிய பணத்தைத் திரும்பத் தரமுடியாத நிலையில் இருப்பதாகவும், அதற்குப் பதிலாக தனது எண்ணெய் தயாரிக்கும் சிறு தொழிற்சாலையை வைத்துக்கொள்ளுமாறு கூற, அதை ஏற்றுக்கொண்டு, அதன் பெயரை `வெஸ்டன் இண்டியா வெஜிடபிள்ஸ் புராடெக்ட்ஸ் லிமிடெட்’ என மாற்றம் செய்தார். தொழிற்சாலையை நடத்த மேலும் பணம் தேவை என்ற நிலையில் 1946-ம் ஆண்டு பம்பாய் பங்குச் சந்தையில் பட்டியலிட்டார். 1966-ம் ஆண்டு ஹாஷம் பிரேம்ஜி இறந்தபின், அந்த நிறுவனத்தை அசிம் பிரேம்ஜி நடத்தத் தொடங்கினார். அப்போது அவருக்கு வயது 23. எனவே, 1968-ம் ஆண்டுதான் தலைமையேற்றார்!