Published:Updated:

கைகொடுக்கும் பை... தோல்வியில் பிறந்த வெற்றி!

நீனா லெகி
பிரீமியம் ஸ்டோரி
நீனா லெகி

சாதனை

கைகொடுக்கும் பை... தோல்வியில் பிறந்த வெற்றி!

சாதனை

Published:Updated:
நீனா லெகி
பிரீமியம் ஸ்டோரி
நீனா லெகி

சுப மீனாட்சி சுந்தரம்

நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த ஒருவர் கல்லூரித் தேர்வில் பெயிலானால், மனமுடைந்து போவார் இல்லையா? மகாராஷ்டிராவைச் சேர்ந்த நீனா லெகிக்கும் அதே உணர்வுதான். ஆனால், நீனா அப்படிச் சோர்ந்து உட்கார்ந்துவிடவில்லை. அந்தச் சமயத்தில் தன்னை பிசியாக வைத்திருப்ப தற்காகப் பெண்களுக்குத் தேவையான பைகளைத் தயாரிக்கத் தொடங்கினார். அந்தப் பைகளை எடுத்துக்கொண்டு போய் கல்லூரி மாணவிகளிடம் விற்க ஆரம்பித்தார். 1985-ம் ஆண்டில் தன் அம்மாவிடம் ரூ.7,000 கடனாக வாங்கி, செய்ய ஆரம்பித்த பிசினஸ் இன்று ‘பேக் இட்’ எனப் பெரிய நிறுவனமாக வளர்ந்திருக்கிறது.

சுப மீனாட்சி சுந்தரம்
சுப மீனாட்சி சுந்தரம்

1980-களின் காலகட்டத்தில் மைக்கேல் ஜாக்சனின் மிகப் பிரபலமாக இருந்த பாடல் ஒன்று ‘ஜஸ்ட் பீட் இட்.’ அதன் அடிப்படையில் தனது நிறுவனத்துக்கு ‘பேக் இட்’ (bag it) என்று பெயர் வைத்தார். ஒவ்வொரு பெண்ணுக்கும் நாகரிகமான, நீடித்து உழைக்கக்கூடிய, கவர்ச்சி கரமான அழகான பைகள் தேவைப்படுவதால் நீனா தயாரிக்கும் பை வகைகளுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு. இப்போது இந்த பிராண்டின் ஆண்டு வருவாய் ரூ.111 கோடி என்றால் நம்ப முடிகிறதா?

மிகவும் பாதுகாப்பான சூழ்நிலையில் வளர்ந்த தன்னை கல்லூரித் தேர்வில் அடைந்த தோல்வி, தன்னை மிகுந்த குழப்பத்துக்கு உள்ளாக்கியதாகக் குறிப்பிடும் நீனா, அந்த நேரத்தில் தன்னை ஒரு போராளியாகவே கருதினார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீனா லெகி
நீனா லெகி

‘‘பரீட்சையில் ஃபெயிலானதால் நான் ஒன்றும் முட்டாள் அல்ல, திறமையானவள்’ என்பதை நிரூபிப்பதற்காக எடுத்துக்கொண்ட முயற்சிதான் தன்னை ஒரு தொழில்முனை வோராக மாற்றியது’’ என்கிறார் நீனா. வெறும் கலைத்திறன் என்று சொல்லப்படும் டிசைன் மட்டுமல்லாமல் நிர்வாகத் திறன், ஒரு வணிகத்தை நடத்துவதற்கான புத்திசாலித்தனம், நிதி மேலாண்மை, மக்களைக் கையாளும் திறன் என அனைத்தும் என்னிடம் இருக்கிறது என்பது எனக்கும், என்னைச் சுற்றி உள்ள மற்றவர்களுக்கும் நிரூபிப்பதற்காக எடுத்துக் கொண்ட அவதாரம்தான் இந்தத் தொழில் முனைவோர் அவதாரம்’’ என்கிறார் நீனா.

ஆரம்பத்தில் துணி மற்றும் கேன்வாஸில் பைகளைச் செய்ய ஆரம்பித்தார் நீனா. தானே கடைக்குச் சென்று கைப்பைகள் தயாரிப் பதற்காக வண்ணத் துணிகளை வாங்குவார். சொந்தமாக டிசைன்களை உருவாக்குவதற்காக காகிதத்தில் அதற்கான பேட்டர்ன்களையும் உருவாக்கியர், பிறகு வெவ்வேறு அளவுகளிலும் பைகளைத் தயாரிக்க ஆரம்பித்தார். அந்தக் கட்டத்தில்தான் ஃபாக்ஸ் (FAUX) எனப்படும் சிந்தடிக் - செயற்கைத் தோல் பற்றித் தெரிய வர, அதன் மூலம் பைகளைத் தயாரிக்கத் தொடங்கிய பின்னர், அவரது பிசினஸ் சூடுபிடிக்க ஆரம்பித்தது.

‘‘வாடிக்கையாளர்களின் ரசனையைத் தெரிந்து கொள்வதற்காக 2019-ம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப் பட்ட சுமார் 9 நகரங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களிடம் ஆய்வுகளை நடத்தி வாடிக்கையாளர்களின் விருப்பங்களைக் கேட்டறிந்தோம். அதற்குப் பிறகு, நாங்கள் கண்டு கொண்டதெல்லாம் சந்தை பெரும்பாலும் இரண்டு வகையான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. பேஷன் ரகங்களைத் தேடுபவர்கள் ஒரு பக்கம், மற்றவர்கள் தாங்கள் கொடுக்கும் காசுக்குரிய மதிப்பைத் தேடுபவர்கள் இன்னொரு பக்கம். சரி, வாங்கித்தான் பார்ப்போமே எனத் தங்களது நடப்பவர்கள் மூன்றாவது ரகம் என வாடிக்கையாளர்களை வகைப் படுத்துகிறார் நீனா.

‘‘சீனா மற்றும் இதர நாடுகளிலிருந்து போட்டிகள் இருந்தாலும் மிகப்பெரிய அளவில் உற்பத்தி செய்வதால் அதிகமான செயல்திறனைக் கொண்டிருக்கிறோம். கடந்த 30 ஆண்டுகளாக வியாபாரத்தில் இருந்து வருவதால், இந்திய வாடிக்கை யாளர்களை நன்கு புரிந்துகொண்டு வடிவமைப்பில் இருந்து உற்பத்தி வரை நுகர்வோர்களின் தேவைகளுக்கும் பயன்பாட்டுக்கும் ஏற்றவாறு தயாரிப் பதால், விலையிலும் எங்களால் சந்தையில் போட்டி போட முடிகிறது’’ என்கிறார் நீனா.

‘‘தொழில்முனைவு என்பது ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டுமே. ஏனென்றால், இந்தப் பயணம் அவ்வளவு சுலபமல்ல. போராட்டங்களும் சிரமங்களும் நிறைந் துள்ளது. வாழ்க்கையில் தொழில் முனைவோருக்கு நிறைய உற்சாகம் தேவை. நீங்கள் தொடங்கிய நிறுவனத்தை வளர்க்க வேண்டுமென்றால், மிக அதிகமான மனஉறுதி தேவை. தொழில் முனைவோர்களுக்கு உறக்கம் வருவது மிகவும் கடினம்.

என்னைக் கேட்டால் உறங்கும்போது வருவதல்ல கனவு. உங்களது கனவு உங்களை தூங்கவிடவில்லை என்றால் தான் நீங்கள் ஒரு வெற்றிகரமான தொழில் முனைவராக இருக்க முடியும்’’ என்று சொல்லி, வெற்றியாளர்களின் மனநிலை எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி சொல்லி அசத்துகிறார் நீனா.