Published:Updated:

பெர்க்‌ஷையர் ஹாத்வேயின் அடுத்த தலைவர்..? மனம் திறந்த பஃபெட்..! வாய்ப்பை இழந்த அஜித் ஜெயின்...

வாரன் பஃபெட்
பிரீமியம் ஸ்டோரி
வாரன் பஃபெட்

W A R R E N B U F F E T T

பெர்க்‌ஷையர் ஹாத்வேயின் அடுத்த தலைவர்..? மனம் திறந்த பஃபெட்..! வாய்ப்பை இழந்த அஜித் ஜெயின்...

W A R R E N B U F F E T T

Published:Updated:
வாரன் பஃபெட்
பிரீமியம் ஸ்டோரி
வாரன் பஃபெட்

ஆகாஷ்

கடந்த வாரத்தில் மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் தலைவர் பில்கேட்ஸ் - மிலிண்டா தம்பதியினரின் 27 ஆண்டுக்கால மணவாழ்க்கை முடிவுக்கு வந்து பெரும் பரபரப்பைக் கிளப்பியது ஒருபக்கம் எனில், வாரன் பஃபெட்டின் பெர்க்‌ஷையர் ஹாத்வே நிறுவனத்தை அடுத்து தலைமையேற்று நடத்தப்போவது யார் என்கிற தகவல் வெளியாகி, பரபரப்பு மேலும் அதிகரித்தது இன்னொரு பக்கம்.

பெர்க்‌ஷையர் ஹாத்வேயின் ஆண்டு பொதுக்கூட்டம் கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் ஆன்லைனில் நடந்தது. கடந்த ஆண்டு கோவிட் பயம் காரணமாக இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் இருந்த வாரன் பஃபெட்டின் நண்பர் சார்லஸ் முங்கர், இந்த ஆண்டு ஆன்லைன் மூலம் கலந்துகொண்டார். வழக்கம் போல, வாரன் பஃபெட் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பல்வேறு விஷயங்கள் பற்றிப் பேசினார்.

‘‘கோவிட்டுக்குப் பிறகு பல புதிய முதலீட்டாளர்கள் சந்தைக்கு வந்திருக்கிறார்கள். பங்குச் சந்தையில் எளிதாகப் பணம் பண்ணலாம் என்று நினைக்கிற அளவுக்கு அதில் பணம் பண்ணுவது அவ்வளவு எளிதான விஷயமல்ல’’ என்று எச்சரித் திருக்கிறார்.

வாரன் பஃபெட்
வாரன் பஃபெட்

கடந்த ஆண்டில் அமெரிக்க அரசாங்கம் எடுத்த பல நடவடிக்கை கள் காரணமாகப் பொருளாதாரம் வளர்ச்சியை நோக்கித் திரும்பியது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, கையில் இருந்த 145 பில்லியன் டாலரையும் முதலீடு செய்திருந்தால் நான் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருப்பேன் என்று சொன்னார் வாரன் பஃபெட்.

கடந்த காலாண்டில் சில நிறுவனப் பங்குகளை விற்றதன்மூலம் 12 பில்லியன் டாலர் பணம் பஃபெட்டின் கையிருப்புக்கு வந்திருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் எஸ்&பி 500 இண்டெக்ஸைவிட அதிகம் சம்பாதிக்கும் பஃபெட், கடந்த ஆண்டில் இண்டெக்ஸ் ஃபண்ட் தந்த பாதி அளவுக்கு மட்டுமே வருமானம் பார்த்திருக்கிறார்.

ஆப்பிள் நிறுவனப் பங்கு விலை கடந்த ஆண்டு 80% வரை உயர்ந்தது. ஆனால், இந்தப் பங்கை அவசரப்பட்டு விற்றது தன்னுடைய தவறுதான் என்று ஒப்புக்கொண்டிருக்கிறார் வாரன்.

கடந்த பல ஆண்டுகளாகவே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விஷயம் இந்தக் கூட்டம் மூலம் வெளியானது. பெர்க்‌ஷையர் நிறுவனத்தை அடுத்து தலைமை ஏற்று நடத்தப்போவது யார் என்பதுதான் அது. இந்த நிறுவனத்தின் துணைத் தலைவராக இருக்கும் க்ரெக் ஏபெல்தான், பெர்க்‌ஷையர் நிறுவனத்தின் அடுத்த சி.இ.ஓ-வாக இருப்பார் என்று தெரிய வந்திருக்கிறது.

‘‘இன்று இரவு எனக்கு ஏதாவது பிரச்னை ஏற்பட்டு, நாளை நான் அலுவலகம் வரவில்லை எனில், க்ரெக் வழிநடத்துவார்’’ என்று வாரன் பஃபெட் சொன்னதன் மூலம் இது உறுதியாகியிருக்கிறது.

இந்தியாவைச் சேர்ந்த அஜித் ஜெயினும் பெர்க்‌ஷையர் நிறுவனத்தின் துணைத் தலைவராகத் தான் இருக்கிறார். ஆனால், அவருக்கு தற்போது 69 வயதாகிவிட்டது. ஆனால், க்ரெக்குக்கு தற்போது 58 வயதுதான் ஆகிறது. எனவே, அவரால் அடுத்த 20 வருடங்களுக்கு நிறுவனத்தை நடத்திச் செல்ல முடியும். வயதை முக்கியமான காரணியாக வைத்துதான் பெர்க்‌ஷையரின் அடுத்த தலைவரைத் தேர்வு செய்திருப்பதாகச் சொல்லியிருக்கிறார் வாரன் பஃபெட்.

அடுத்து தலைமையேற்று நடத்தப் போவது யார் என்று தெரிந்தாலும் வாரன் பஃபெட்டும் சார்லி முங்கரும் பெர்க்‌ஷையர் நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்திச் செல்வார்கள் என்றே தெரிகிறது.

பெர்க்‌ஷையர் தலைமைப் பதவி இந்தியரான அஜித் ஜெயினுக்குக் கிடைக்காதது ஏமாற்றமே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism