Published:Updated:

கொரோனா... ஆன்லைன் மோசடிகள்! - தப்பிப்பது எப்படி?

ஆன்லைன் மோசடி
பிரீமியம் ஸ்டோரி
News
ஆன்லைன் மோசடி

மெயில் மோசடிகளிலிருந்து தப்பிக்க எளிய வழி, நம்பத் தகாத மெயில்களைக் கண்டு கொள்ளாமல் விடுவதுதான்.

ன்றைய சூழலில் கொரோனாவால் அனைவருமே வீட்டில் முடங்கியிருக்கிறோம். சிலர் ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ முறையில் வேலை பார்க்கிறோம்.

பலருக்கும் விடுப்பு போலத்தான் நாள்கள் செல்கின்றன. இதனால் மக்கள் முன்பைவிட அதிக அளவில் மொபைல் மற்றும் பிற சாதனங்களைப் பயன்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த நேரத்தில் மக்களைக் குறிவைக்கும் சைபர் மோசடிகளும் அதிக அளவில் தலைதூக்கத் தொடங்கியிருக்கின்றன.

ஆன்லைன் மோசடி
ஆன்லைன் மோசடி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கடந்த வாரம் நம் நாட்டில் பலருக்கும் ஒரு மெயில் வந்தது. ‘லாக்-டவுன் காலத்தில் நெட்ஃப்ளிக்ஸ் அதன் சேவைகளை இலவசமாக வழங்குகிறது. அந்தச் சலுகையைப் பெற, கீழ்க்காணும் லிங்க்கில் இருக்கும் சர்வேயில் பங்குகொள்ளுங்கள்’ என்றது அந்த மெயில். அந்த லிங்க்கை கிளிக் செய்த பலரும் பின்பு அதிர்ச்சி அடைந்திருப்பார்கள். ஏனென்றால் அது ஒரு மோசடி மெயில். உங்கள் தகவல்களை உங்களிடமிருந்தே பெறும் ‘Phishing’ வகை மெயில் அது.

இது எப்போதும் நடப்பதுதான் என்றாலும், இந்த கொரோனா நேரத்தில் இன்னும் தீவிரமாகச் செயல்படத் தொடங்கியிருக்கின்றன இந்த சைபர் மோசடிக் கும்பல்கள். இது போன்ற நேரத்தில் கொரோனா நோய்த்தொற்றிலிருந்து எப்படிப் பாதுகாப்பாக இருக்கிறோமோ, அதேபோல சைபர் தாக்குதல்களிலிருந்தும் நம்மைத் தற்காத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

மேலே குறிப்பிட்டது ஒரு சிறிய எடுத்துக்காட்டு மட்டுமே. WHO, UN, ICMR என எந்த அமைப்பின் பெயரிலும் இது போன்ற மோசடி மெயில்கள் வரலாம். இவற்றுடன் அந்த அமைப்புகளின் இணையதளம் என்று போலி இணையத்தள முகவரிகளும் அனுப்பப்படும். இதை வைத்து முக்கியமான தகவல்களைத் திருட முடியும் என்பதால், இது போன்ற மெயில்களிலிருக்கும் லிங்க்குகளை கிளிக் செய்வதற்கு முன்னர் அது போலியானதா என செக் செய்து பார்க்க வேண்டியது அவசியம். தகவல் திருட்டு மட்டுமல்ல, நிதி மோசடிகளும் நடக்கும். மாஸ்க், வென்டிலேட்டர் போன்ற சாதனங்களை வாங்க நிதி திரட்டுவதாகக்கூட மெயில், எஸ்.எம்.எஸ்கள் வரும். அதன் உண்மைத்தன்மையைச் சோதிக்காமல் அவற்றில் பணம் போடாதீர்கள். மேலும், கொரோனா விழிப்புணர்வு, தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில் வைரஸ்கள் பரப்பப்படலாம். இதன் மூலம் கிரெடிட்/டெபிட் கார்டு தகவல்களைத் திருடவும் வாய்ப்பிருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

கொரோனா பாதிப்புகளை டிராக் செய்வதாக இருந்தாலும்கூட குறிப்பிட்ட நம்பத்தகுந்த இணையதளம் மற்றும் ஆப்களை மட்டுமே பயன்படுத்துங்கள். சில போலி ஆப்கள் இருக்கின்றன. கொரோனா பாதிப்புகளை டிராக் செய்வதாகக் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால், இவற்றை இன்ஸ்டால் செய்து ஓப்பன் செய்தால் மொத்தமாக மொபைலே லாக் ஆகிவிடும். பணம் கட்டினால்தான் அது ‘அன்லாக்’ ஆகும். இது போன்ற ‘Ransomware’ தாக்குதல்களும் நடக்கும். கடந்த ஜனவரிக்குப் பிறகு கொரோனா தொடர்பாக சுமார் 16,000 இணையதள முகவரிகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இவற்றில் 100 இணையதளங்கள் மோசடித் தளங்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளன. மேலும் 2,200 இணையதளங்கள் சந்தேகத்துக்கு உரியதாகக் குறித்து வைக்கப்பட்டுள்ளன.

ஆன்லைன் மோசடி
ஆன்லைன் மோசடி

பலரும் வீட்டிலிருந்து வேலை பார்ப்பதால், உங்கள் தகவல்கள் மட்டுமல்லாமல், நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனங்கள் சார்ந்த தகவல்களையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்வது அவசியம். நீங்கள் வீட்டிலிருந்து வேலை பார்ப்பவராக இருந்தால் பின்வரும் நடைமுறைகளைக் கடைப்பிடிப்பது நல்லது.

■ உங்கள் பணிசார்ந்த டேட்டாவை அலுவலக மெயில் ஐடியுடன் இணைக்கப்பட்ட கிளவுட் சேவைகளில் மட்டுமே சேகரியுங்கள். பர்சனல் கிளவுட் டிரைவ்களில் சேவ் செய்ய வேண்டாம். இதனால் எந்த டேட்டாவும் வெளியில் செல்லாமல் தடுக்க முடியும். முக்கியமான டேட்டாக்களை பேக்-அப் எடுத்து வைத்துக்கொள்வதும் அவசியம்.

■ பெரும்பாலான நிறுவனங்களில் அலுவலக வேலைகளுக்கென்று தனி லேப்டாப் தந்திருப்பார்கள். எந்தக் காரணத்துக்காகவும் அலுவலகப் பணி செய்யும் அந்த லேப்டாப்பை குடும்பத்தினருடன் பகிர வேண்டாம். நீங்கள் சரியாகக் கையாண்டாலும் பிறர் அப்படிக் கையாள்வார்கள் என்று சொல்ல முடியாது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

■மெயில் மோசடிகளிலிருந்து தப்பிக்க எளிய வழி, நம்பத் தகாத மெயில்களைக் கண்டுகொள்ளாமல் விடுவதுதான்.

கொரோனா குறித்து பல மோசடி மெயில்கள் அனுப்பப்படுகின்றன என சில உதாரணங்களைக் குறிப்பிட்டிருந்தோம். அவற்றில் சிக்காமல் நாம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அந்த மெயில்களை ஓப்பன் செய்தாலும், மெயில்களிலிருக்கும் அட்டாச்மென்ட் ஃபைல்களை எந்தக் காரணத்துக்காகவும் பதிவிறக்காதீர்கள். அவை வைரஸ்களாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அதில் வரும் லிங்க்குகளையும் கிளிக் செய்ய வேண்டாம். அதை ஃபார்வேர்டு செய்யாமலும் இருங்கள்.

ஆன்லைன் மோசடி
ஆன்லைன் மோசடி

■ இணையத்தில் எந்தவொரு பதிவிறக்கத்தைச் செய்வதாக இருந்தாலும் ஆன்டிவைரஸ் ‘ஆன்’ ஆகி இருக்கிறதா என்பதை முதலில் உறுதிப்படுத்திக்கொள்வது அவசியம். நல்ல ஆன்டிவைரஸ் பெரும்பாலான பிரச்னைகளைத் தீர்த்துவிடும்.

■ எளிதில் கண்டுபிடிக்க முடியாத நல்ல பாஸ்வேர்டுகளை நாம் வைத்துக்கொண்டாலே போதும், மோசடிப் பேர்வழிகள் நமக்கு ஏற்படும் பல பாதிப்புகளிலிருந்து நாம் தப்பித்துவிட முடியும்.

■ நிறுவனங்கள் பலவும் அலுவலகம் சார்ந்த வேலைகளுக்குத் தனி VPN (Virtual Private Network) கொடுத்திருப்பார்கள். அதிலேயே எப்போதும் உங்கள் வேலையைப் பாருங்கள். இதனால் வெளியிலிருந்து வரும் ஹேக்கர்கள் யாரும் உங்கள் நெட்வொர்க்கில் நடக்கும் பரிமாற்றங்களைப் பார்க்க முடியாதபடி செய்துவிடலாம்.

■ சமீபத்திய ஓ.எஸ் அப்டேட்டை செய்து விடுங்கள். அப்போதுதான் பாதுகாப்பு வசதிகள் இன்றைய நாளுக்கு ஏற்றதாக இருக்கும்.

இப்படி சில சிறிய விஷயங்களைக் கவனித்துக் கொண்டால் எந்தவொரு சைபர் தாக்குதலிலும் சிக்காமல் தற்காத்துக்கொள்ளலாம்.