Published:Updated:

''கல்வி... ஹோட்டல்... அடுத்தது ஃபார்மா துறைதான்!'' எதிர்காலம் பகிரும் 'பாரத்' சந்தீப் ஆனந்த்

'பாரத்' சந்தீப் ஆனந்த்
பிரீமியம் ஸ்டோரி
'பாரத்' சந்தீப் ஆனந்த்

சிறப்புப் பேட்டி

''கல்வி... ஹோட்டல்... அடுத்தது ஃபார்மா துறைதான்!'' எதிர்காலம் பகிரும் 'பாரத்' சந்தீப் ஆனந்த்

சிறப்புப் பேட்டி

Published:Updated:
'பாரத்' சந்தீப் ஆனந்த்
பிரீமியம் ஸ்டோரி
'பாரத்' சந்தீப் ஆனந்த்

இந்தியாவில் பெரும்பான்மையானோர் ஏழைகளாகத்தான் பிறக்கிறார்கள். ஆனால், எல்லோருமே ஏழையாகப் பிறந்து ஏழையாகவே இருந்துவிடுவதில்லை. சிலர் மட்டுமே வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு வாய்ப்புகளைப் படிக்கட்டுகளாக்கி மேலேறி தலையெழுத்தை மாற்றிக்கொள்கிறார்கள். அப்படி ஏழ்மை நிலையைத் தலைகீழாக மாற்றி முன்னேறிய குடும்பத்தின் இரண்டாம் தலைமுறை தொழிலதிபரும் தமிழகத்தின் முன்னணி கல்வி நிறுவனமான பாரத் பல்கலைக்கழகம் மற்றும் முன்னணி நட்சத்திர விடுதியான அக்கார்டு ஹோட்டலின் தலைவருமானடாக்டர். ஜெ. சந்தீப் ஆனந்த் தன் தொழில் வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். இதோ அவருடனான பேட்டியிலிருந்து...

உங்களுடைய தந்தை ஜெகத்ரட்சகன் உங்கள் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கம் எப்படிப்பட்டது?

``அரசியல் ஆளுமையான அப்பா ஜெகத்ரட்சகன் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர்தான். காலுக்கு செருப்புகூட இல்லாமல் ஒருவேளை உணவுடன் சிறு வயதைக் கழித்தவர். மின்சாரத் துறையில், தன் வாழ்வை ஆரம்பித்தவர். ஆனால், அப்போதும் அவரின் சிந்தனையும் இலக்கும் பெரிதாகவே இருந்தது. `சின்ன வயசுல எல்.ஐ.சி பில்டிங்கை வாங்கணும்னு ஆசைப்பட்டேன்' என்று விளையாட்டாகச் சொல்வார். நல்ல நகைச்சுவை உணர்வு கொண்டவர். ஞாபக சக்தி அதிகம்.

எத்தனை பிசினஸ் செய்தாலும், எத்தனை கூட்டங்களுக்குச் சென்றாலும், கையில் குறிப்பு ஏதும் இல்லாமல் அனைத்தையும் நினைவில் வைத்துக்கொள்வார்.

தோல் தொழிற்சாலை, இன்ஜினீயரிங் கல்லூரி, நர்சிங், ஃபார்மா, ஹோட்டல், அரசியல் என்று அனைத்துத் துறைகளிலும் தன் கடின உழைப்பால் தடம் பதித்தவர். `ஒரு விஷயத்தைத் தொடங்குவதற்கு முன் நிறைய நபர்களிடம் பேசுங்கள். அவர்களின் கருத்துகளைக் கேளுங்கள். அதிலிருந்து உங்களுக்கு ஒரு பார்வை கிடைக்கும். அதைச் செயல்படுத்தும்போது வெற்றி கிடைக்கும்' என்று சொல்வார். அவரைப் பார்த்து வளர்ந்ததே என்னுடைய ஆளுமைத்திறனுக்கான முக்கிய காரணம்.''

சந்தீப் ஆனந்த்
சந்தீப் ஆனந்த்

பிசினஸ் என்றாலே பல சவால்கள் இருக்கும். அதுவும் நீங்கள் ஒருபக்கம் கல்வி நிறுவனம், இன்னொரு பக்கம் ஹோட்டல் நிறுவனம் நடத்துகிறீர்கள், இரண்டையுமே வெற்றிகரமாக எப்படி நடத்த முடிகிறது?

``முன்பே சொன்னதுபோல, எல்லாவற்றுக்கும் அடித்தளம் அப்பாதான். அவர் உருவாக்கிய சாம்ராஜ்ஜியத்தில் வளர்ந்தவன், அவரிடமிருந்து கற்றுக்கொண்ட பாடங்களையே நான் செயல்படுத்தி வருகிறேன். பொதுவாக, எல்லோரும் சொல்லும் சாக்கு, நேரம் இல்லை என்பது. என்னைப் பொறுத்தவரை எல்லாவற்றுக்கும் போதிய நேரம் இருக்கிறது. எதற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதைப் பொறுத்ததுதான் விஷயம். ஒன்றுடன் மற்றொன்றை போட்டுக் குழப்பிக்கொள்ளக் கூடாது.

ஒரு வேலையை செய்யும்போது அதில் மட்டுமே முழுக் கவனம் செலுத்த வேண்டும். அதை முடித்த பின்னரே அடுத்த வேலை. அடுத்த வேலைக்குப் போனதும் முந்தைய வேலையைப் பற்றி யோசிக்கவே கூடாது. நிறைய பேர் வேலை அல்லது தொழிலில் கவனத்தைச் செலுத்தினால் குடும்பத்தோடு நேரம் செலவிட முடியாது என்பார்கள். நான் அதை ஒப்புக்கொள்ள மாட்டேன். பிசினஸ் வேறு, வீடு வேறு. அந்தந்த விஷயங்களின் டென்ஷனை அந்தந்த இடத்தில் மட்டும் வைத்துக்கொள்ளுங்கள்.எதையும் சிம்பிளாக அணுகுங்கள். வாழ்க்கையே அழகாக மாறிவிடும்.''

ஒரு நாட்டின் வளர்ச்சியில் முக்கியமான பங்கு கல்விக்கு இருக்கிறது. உங்களுடைய பார்வை யில் இந்தியாவின் நிலை எப்படி இருக்கிறது?

``கல்வி எப்போதுமே ஒருவருக்கு கைகொடுக்கும். அது என்னுடைய வாழ்க்கையிலேயே நிரூபணம் ஆகியிருக்கிறது. இன்று பிசினஸ் ஆளுமையாக நான் வளர முக்கியமான காரணம், நான் கற்ற கல்விதான். இப்போது நாம் தொழில்நுட்ப காலகட்டத்தில் இருக்கிறோம். இந்தியாவைப் பொறுத்தவரை, அமெரிக்காவுடன் ஒப்பிடும்போது தொழில்நுட்ப அளவில் நாம் 20 ஆண்டுகள் பின்னோக்கி இருக்கிறோம்.

விவசாயம், நீர் மேலாண்மை, கல்வி, தொழில், ஏன் அரசியலில் கூட தொழில்நுட்ப அளவில் நாம் நிறைய முன்னேற்றங்களைக் கொண்டுவரலாம். அனைத்து வீட்டிலும் கம்ப்யூட்டர் இருக்க வேண்டும் என்ற பில்கேட்ஸின் சிந்தனைதான் இன்றைய மென்பொருள் புரட்சிக்கான வித்து. பாமரருக்கும் எளிதில் புரியும் வண்ணம் தொழில்நுட்பத்தை சேர்க்க வேண்டும் என்பது என் கனவு. அதுமட்டுமல்லாமல், அமெரிக்காவில் அறிவுக்கு அதிக மரியாதை வழங்குவார்கள். அறிஞர்கள் எந்த நாட்டில் இருந்தாலும் அவர்களை அழைத்து அவர்களுக்கான சிறப்பான சலுகைகள் வழங்கி அரவணைத்துக் கொள்வார்கள். இந்தப் பழக்கம் இந்தியாவில் அதிகரிக்க வேண்டும். அறிவும் திறமையும் உள்ள நபர்களால் மட்டுமே நாட்டின் வளர்ச்சி சாத்தியமாகும்.''

உங்களின் அடுத்தகட்ட இலக்குகள் என்னென்ன?

``தமிழகத்தில் மட்டுமல்லாது, இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பாரத் பல்கலைக்கழகம் காலூன்ற வேண்டும் என்பது என் லட்சியம். கர்நாடகா, ஆந்திரா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் ஒப்புதல் கிடைத்துள்ளது. அஸ்ஸாம் மற்றும் மணிப்பூரில் பல்கலைக் கழகம் தொடங்குவதற் கான வேலைகளில் இறங்கியுள்ளோம். அதே போல், அக்கார்டு ஹோட்டல்களை இந்தியாவின் அனைத்து முக்கிய நகரங்கள் மற்றும் வெளிநாடுகளிலிலும் இயங்க வேண்டும் என்ற இலக்கோடு அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்.

ஃபார்மா துறையில் பொது மருந்துகள் மற்றும் ஆன்டி பயாட்டிக்ஸ் மருந்துகளை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். அனைத்து தரப்பினருக்கும் கேன்சருக்கான மருந்து கிடைக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம்.''

''கல்வி... ஹோட்டல்... அடுத்தது ஃபார்மா துறைதான்!'' எதிர்காலம் பகிரும் 'பாரத்' சந்தீப் ஆனந்த்

பிசினஸ் மட்டுமல்லாமல் சமூக நலன் சார்ந்தும் தொடர்ந்து இயங்குகிறீர்களே..!

``எங்கிருந்து பெறுகிறோமோ அங்கு திருப்பிச் செலுத்தப்பட வேண்டும். என்னதான் வாய்ப்பும் வசதியும் இருந்தாலும் ஒவ்வொருவரின் வளர்ச்சிக்கும் சமூகமும் முக்கியப் பங்கு வகிக் கிறது. சமூகத்துக்குத் திரும்பி செய்யும் கைம்மாறு என்பது மிக முக்கியமானது. அந்த வகையில் முடிந்த செயல்பாடுகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம். கோவிட் நேரத்தில் இலவச தடுப்பூசி முகாம்கள் மற்றும் குறிப்பிட்ட இடங்களைத் தேர்வு செய்து அங்குள்ள மக்களுக்கு தினம்தோறும் உணவுப் பொருள்கள் வழங்குதலில் ஈடுபட்டோம்.

ஜார்ஜியாவில் ஓர் அகதிக் குடும்பத்தின் 6 வயதுக் குழந்தை அரிய வகை இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தது. குழந்தைக்கான மருத்துவப் பொறுப்பை நாங்களே ஏற்றுக் கொண்டோம். யார் என்று தெரியாத வேறொரு நாட்டினரின் குழந்தை யின் மருத்துவப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட காரணத்துக்காக ஜார்ஜியா நாட்டின் உயரிய விருதான ‘ஆர்டர் ஆஃப் செயின்ட் நிகோலஸ்' விருதை எனக்கு அறிவித்தது அந்நாடு. என் வாழ்வில் இதுவொரு நெகிழ்ச்சியான தருணமாகும்.''

ஒரு நல்ல தலைவருக்கான அடையாளமாக நீங்கள் பார்ப்பது...

``தலைமை என்பது அனைத்து விதத்திலும் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருப்பது. அறிவை வளர்த்துக்கொண்டே இருக்க வேண்டும். நாம் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும் எனில், எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். தகுதியான நபர்களை அடையாளம் கண்டு அவர்களுக்குப் பொறுப்புகளை வழங்கி ஊக்கப்படுத்த வேண்டும். நம் எண்ணங்களை அவர்கள் மீது திணிக்கக்கூடாது. அவர்களுக்கு தங்கள் எண்ணங்களைச் செயல் படுத்த சுதந்திரத்தைக் கொடுக்க வேண்டும். இப்படி அதிகாரத்தைப் பகிர்ந்து கொடுத்தால், ஒரு நிறுவனத்தை வளர்ச்சி பெறச் செய்ய அவர்கள் உழைப்பார்கள். எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும்.''

பன்முகத் துறைகளில் தொடர்ந்து முன்னேறி வருகிறீர்கள். மக்களுக் காகப் பணியாற்ற அரசியலுக்கு வரும் விருப்பம் உண்டா?

```நீ இருக்கும் துறையில் இருந்தே மக்களுக்கு நிறைய உதவிகள் செய்ய லாம். அரசியல் உனக்கு வேண்டாம்' என்று அப்பா கூறுவார். ஆனால், என்னுடைய செயல்பாடுகளை தொழிலுக்குள் மட்டுமே சுருக்கிக்கொள்ள விரும்ப வில்லை. சாதிக்க நிறைய இருக்கிறது. அரசியலுக்கு வந்து மக்களுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்ற விருப்பம் எனக்குள்ளது. கல்வியிலும், தொழில்நுட்பத்திலும் வளர்ச்சியிலும் தொடர்ந்து பங்காற்ற அரசியல் இன்னும் சரியாக இருக்கும் என்று நம்புகிறேன்.''

அம்மா - அப்பா இருவரிடம் இருந்தும் எடுத்துக்கொண்ட முக்கிய அறிவுரை என்ன?

``அப்பா எப்போதும் சொல்வது, `பெரிதினும் பெரிது கேள்' என்பதுதான். எந்த கெட்ட பழக்கமும் வைத்துக்கொள்ளாதே என்று சொல்லிச் சொல்லி வளர்த்தார். அம்மா ‘முடிந்தவரை அனைவருக்கும் உதவி செய்' என்பார்கள். இருவருடைய வார்த்தைகளும் வழிகாட்டலும்தான் எனக்கான தாரக மந்திரங்கள்'' என்று முடித்தார்.

- செவி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism