Published:Updated:

பில் டெஸ்க்கைக் கையகப்படுத்திய புராசஸ்... உழைப்புக்குக் கிடைத்த வெற்றி!

இணைப்பு...
பிரீமியம் ஸ்டோரி
இணைப்பு...

இணைப்பு

பில் டெஸ்க்கைக் கையகப்படுத்திய புராசஸ்... உழைப்புக்குக் கிடைத்த வெற்றி!

இணைப்பு

Published:Updated:
இணைப்பு...
பிரீமியம் ஸ்டோரி
இணைப்பு...

தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த புராசஸ் நிறுவனம் இந்தியாவைச் சேர்ந்த பில் டெஸ்க் நிறுவனத்தை முழுமையாக வாங்கியிருக்கிறது. 470 கோடி டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 35,000 கோடி) அளவில் இந்த நிறுவனம் வாங்கப்பட்டிருக்கிறது.

2000-ல் தொடங்கப்பட்ட நிறுவனம்...

2000-ம் ஆண்டில் மூன்று நண்பர்களால் தொடங்கப்பட்டது இந்த நிறுவனம். னிவாசு, அஜய் கவுசல் மற்றும் கார்த்திக் கணபதி ஆகிய மூன்று நண்பர்களும் படித்தது வேறுவேறு ஐ.ஐ.எம்-களில்; வேலை பார்த்தது வேறுவேறு நிறுவனங்களில். ஆனால், 1999-ல் ஆர்தர் ஆண்டர்சன் என்னும் கன்சல்டிங் நிறுவனத்தில் ஒன்றிணைந்தார்கள்.

இப்போதுபோல், அப்போது இணையம் பிரபலம் ஆகவில்லை. வென்ச்சர் கேப்பிடல் பணம் பெரிதாகப் புழங்கவில்லை. அதைவிட, ஐ.ஐ.எம்-களில் படித்திருந்தாலும் பெரும் சம்பளமும் இல்லை. 1999-ம் ஆண்டு கடைசி நாளில் வேலையை விடுவது என முடிவெடுத் தார்கள். 2000-ம் ஆண்டு மார்ச்சில் பில் டெஸ்க் தொடங்கினார்கள்.

தற்போது இணையத்தில் பணப் பரிமாற்றம் என்பது சர்வ சாதாரணம். ஆனால், அப்போது இணையம் என்பது தகவல்தொடர்பு சாதனமாக மட்டுமே இருந்தது. அதனால் பணப் பரிவர்த்தனைக்கான நிறுவனம் தொடங்கலாம். இதனால் வங்கிகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் எனப் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என இவர்கள் திட்டமிட்டனர். ஆனால், 2000-த்தில் இணையம் பயன்படுத்துபவர்கள் என்பது மிகக் குறைந்த அளவிலேயே இருந்தனர். இணையம் சார்ந்து தொழில் ஆரம்பித்தாலும் உடனே வெற்றி கிடைத்து விடாது என்று தெரிந்தே பில் டெஸ்க்கைத் தொடங்கினார்கள்.

பில் டெஸ்க்கைக் கையகப்படுத்திய புராசஸ்... 
உழைப்புக்குக் கிடைத்த வெற்றி!

2000-ம் ஆண்டு தொடங்கி சமீப காலம் வரை பில் டெஸ்க் குறித்து எந்தச் செய்தியும் யாராலும் பார்த்திருக்க முடியாது. காரணம், இதுவரை இந்த நிறுவனம் மீடியாவிடம் உரையாடியதே கிடையாது. நிறுவனம் தொடங்கியபோது, வளர்ச்சி அடைந்தபோது, முதலீடு கிடைத்தபோது என எப்போதும் இதன் நிறுவனர்கள் வாயைத் திறந்து பேசியது கிடையாது. இந்த இணைப்புக்குப் பிறகுதான் நிறுவனர்கள் பேசியிருக்கிறார்கள்.

ஐ.பி.ஒ..?

‘‘சில முதலீட்டாளர்கள் எங்களுடன் 15 ஆண்டுகளுக்கு மேல் இருக்கிறார்கள். அவர்களுக்கு வெளியேறும் வாய்ப்பு வழங்க வேண்டும் எனத் திட்டமிட்டோம். இந்த ஆண்டு தொடக்கத்தில் ஐ.பி.ஓ குறித்து சிந்தித்தோம். அப்போது புராசஸ் நிறுவனம் எங்கள் நிறுவனத்தை வாங்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. அவர்களுடைய ஆஃபரை பங்குதாரர்களிடம் தெரிவித்தோம். அவர்கள் அனைவரும் இதை ஏற்றுக்கொண்டதால், ஐ.பி.ஓ கொண்டு வருவதைவிட இது நல்ல திட்டமாக இருக்கும் என்று நினைத்து, நிறுவனத்தை விற்பனை செய்தோம்’’ என்கிறார்கள் இந்த மூவரும். இந்த மூவரிடமும் மொத்தமாக 30.84% பங்குகள் உள்ளன.

இந்த இணைப்பு 2022-ம் ஆண்டு பிப்ரவரிக்குள் முடிவடையும் என எதிர் பார்க்கப்படுகிறது. இந்த இணைப்புக்குப் பிறகு, ஆன்லைன் பேமென்ட் துறையில் சர்வதேச அளவில் முக்கியமான நிறுவனமாக (ஆண்டுக்கு 147 பில்லியன் டாலர் பரிவர்த்தனை செய்யும்) புராசஸ் மாறும்!

சத்தம் இல்லாமல் ஒரு பெரும் சாதனையை செய்து முடித்திருக்கிறது பில் டெஸ்க்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism