Published:Updated:

தொடர் சர்ச்சை... சுக்குநூறாகச் சிதறும் பில்கேட்ஸின் இமேஜ்! விவாகரத்துக்கான காரணங்கள்!

C O N T R O V E R C Y

பிரீமியம் ஸ்டோரி

சர்வதேச அளவில் தொழில் முனைவுக்கு உதாரணமாக இருந்த பில்கேட்ஸின் இமேஜ், விவாகரத்து, இந்தியாவுக்கு எதிரான கருத்து ஆகிய சர்ச்சைகளால் படுகுழியில் விழத் தொடங்கி இருக்கிறது! டந்த மே 3-ம் தேதி பில் கேட்ஸ் - மெலிண்டா கேட்ஸ் விவாகரத்து அறிவிப்பு வெளியானது. 27 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தவர்கள் திடீரென பிரிய என்ன காரணம் என்பதற்கு பலரும் பல காரணங்களைச் சொன்னார்கள். பில்கேட்ஸுக்கு சுமார் 125 பில்லியன் டாலர் அளவுக்கு சொத்துகள், பங்குகள், ரியல் எஸ்டேட்டுகள் உள்ளிட்ட சொத்துகள் இருக்கின்றன. இந்தச் சொத்துகளைக் குறைந்த வரியில் பிரித்துக்கொள்ள இந்த விவாகரத்து ஏற்பாடு என்றார்கள்.

பில் கேட்ஸ்
பில் கேட்ஸ்

2019-லேயே விவாகரத்து...

ஆனால், அடுத்த சில நாள்களுக்குப் பிறகு, இப்போது வேறு ஒரு காரணம் சொல்லப்படுகிறது. 2000-ம் ஆண்டு மைக்ரோசாஃப்ட்டில் பணிபுரிந்த ஒரு பெண்ணுடன் பில்கேட்ஸ் நெருக்கமாக இருந்ததாகவும், 2019-ம் ஆண்டு இந்த நெருக்கத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்ல பில் கேட்ஸ் திட்டமிட்டதாகவும், இதைத் தொடர்ந்து மெலிண்டா விவாகரத்துக்குத் தயாரானதாகவும் மைக்ரோசாஃப்ட் இயக்குநர் குழுவுக்குக் கடிதம் கிடைத்தது.

இந்தப் புகார் தொடர்பாக மைக்ரோசாஃப்ட் இயக்குநர் குழு பிரத்யேக சட்ட நிறுவனத்தை அழைத்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்த விசாரணைக்கு மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கியது. ஆனால், இந்த விசாரணையின் முழுமையான முடிவு கிடைப்பதற்கு முன்பே மைக்ரோசாஃப்ட் இயக்குநர் குழுவில் இருந்து பில்கேட்ஸ் வெளியேறி விட்டார்.

பில்கேட்ஸ் மீது இப்படியொரு குற்றச்சாட்டு வந்த பிறகு, அவர் இயக்குநர் குழுவில் தொடர்ந்து இருப்பது சரியாக இருக்காது என இயக்குநர்கள் குழுவில் இருந்த சிலர் சொன்னதால்தான் இயக்குநர் குழுவைவிட்டு அவர் வெளியேறிய தாகச் சொல்லப்படுகிறது.

ஆனால், பில்கேட்ஸின் தரப்பு இதை மறுத்திருக்கிறது. ‘‘20 ஆண்டு களுக்கு முன்பு இருந்த தொடர்பு அது. தவிர, அவர்கள் சுமுகமாகப் பிரிந்துவிட்டனர். பில்கேட்ஸ் இயக்குநர் குழுவில் இருந்து வெளி யேறுவதற்கும், இந்தப் பிரச்னைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’’ என்கிறது பில்கேட்ஸ் தரப்பு.

பாலியல் குற்றவாளியுடன் தொடர்பு...

பில்கேட்ஸ் மனைவி கூறியிருக்கும் மற்றொரு குற்றசாட்டு இது. பாலியல் குற்றவாளி ஜெஃப்ரே எப்ஸ்டெய்ன் (jeffrey Epstein). இவர், 2019-ம் ஆண்டு சிறையில் இருக்கும்போதே தற்கொலை செய்துகொண்டவர். இவருடன் பில்கேட்ஸ் நட்பாக இருந்ததுடன், அடிக்கடி சந்திக்கவும் செய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. விவாகரத்துக்கான ஐடியாவைத் தந்ததே இவர்தான் எனச் சிலர் சந்தேகிக்கிறார்கள். ஆனால், இதையும் பில்கேட்ஸ் தரப்பு மறுத்திருக்கிறது.

இந்தியாவுக்கு எதிரான கருத்து...

கோவிட்-19 தொற்று நோய்க்கான தடுப்பூசியைத் தயாரிக்கும் காப்புரிமையை இந்தியாவுடன் பகிர்ந்துகொள்ளக் கூடாது என்று பில்கேட்ஸ் சொன்னதும் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது. தடுப்பூசி மருந்தை இந்தியா போன்ற நாடு களுக்குத் தராமல் அமெரிக்கா தான் மட்டும் வைத்துக்கொண்டு என்ன செய்யப்போகிறது எனப் பலரும் பில் கேட்ஸ் மீது கரித்துக் கொட்டியிருக் கிறார்கள்.

என்றாலும் இந்த சர்ச்சைகளால் மைக்ரோசாஃப்ட் பங்கு விலை குறையவில்லை. ஆனால், சர்வதேச அளவில் தொழில்முனைவுக்கு முன் உதாரணமாக இருந்த பில்கேட்ஸின் இமேஜ், விவகாரத்து, பாலியல் குற்றவாளியுடன் தொடர்பு, இந்தியாவுக்கு எதிரான கருத்து ஆகிய சர்ச்சைகளால் படுகுழியில் விழத் தொடங்கியிருக்கிறது என்பது மட்டும் உண்மை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு