Published:Updated:

கலக்கல் வருமானம் தரும் கழிவுகளில் இருந்து காஸ் தயாரிப்பு..!

காஸ் தயாரிப்பு
பிரீமியம் ஸ்டோரி
காஸ் தயாரிப்பு

தொழில் பழகுவோம் வாங்க! 14

கலக்கல் வருமானம் தரும் கழிவுகளில் இருந்து காஸ் தயாரிப்பு..!

தொழில் பழகுவோம் வாங்க! 14

Published:Updated:
காஸ் தயாரிப்பு
பிரீமியம் ஸ்டோரி
காஸ் தயாரிப்பு

தொழில்நுட்ப வளர்ச்சியால் உலகம் வேகமா முன்னேறிக்கொண்டிருக்கும் அதேவேளையில், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் சவால்கள் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத் துள்ளன. இதனால், சூரிய ஆற்றல், காற்றாலை, நீர்மின் சக்தி போன்றவற்றின் மூலம் உற்பத்தி செய்யப்படும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றல்கள், மின்சாரத் தேவைக்குப் பெரிதும் உதவுகின்றன.

அதுபோலவே, சி.என்.ஜி (பயோ காஸ்) தயாரிப்பு, எரிபொருள் தேவைக்கு முக்கிய ஆதாரமாக மாறிவருகிறது. சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும் மாற்று எரிபொருள் பயன்பாட்டில் முக்கியத்துவம் பெற்றிருக்கும் சி.என்.ஜி உற்பத்தியில் மத்திய அரசு ரூ.2 லட்சம் கோடி முதலீடு செய்யவுள்ளது.

வர்த்தக ரீதியாகப் பெரும் முக்கியத்துவம் பெற்றிருக்கும் இந்தத் தொழில் குறித்து இந்த வாரம் வழிகாட்டுகிறார், திருச்சியைச் சேர்ந்த தொழில் ஆலோசகரான ராமசாமி தேசாய்.

கலக்கல் வருமானம் தரும் கழிவுகளில் இருந்து காஸ் தயாரிப்பு..!

பயோ காஸ் என்றால் என்ன?

ஆக்சிஜன் இல்லாத நிலையில், கரிமப் பொருள்களின் முறிவால் உருவாகும் வாயுக் களின் கலவையே பயோ காஸ் எனப்படுகிறது.

மெத்தனோஜென் அல்லது காற்றில்லா உயிரினங்களுடன் காற்றில்லாத செரிமானத் தால் உற்பத்தியாகும் பயோ காஸ், மக்கும் பொருள்களின் நொதித்தல் செயல் முறையால் உற்பத்தியாகிறது.

பயோ காஸ் தயாரிப்பால், வளிமண்டலத்தில் கலக்கும் மீத்தேனின் அளவு குறைந்து, சுற்றுச் சூழலும் பாதுகாக்கப்படும்.

கலக்கல் வருமானம் தரும் கழிவுகளில் இருந்து காஸ் தயாரிப்பு..!

ஒரே நாளில் வாயு தயார்...

நம் புராஜெக்ட் அளவீட்டின்படி, தினமும் 10 டன் அளவில் மூலப்பொருள் களைக் கலனில் நிரப்ப வேண்டும். அவை நொதித்து 24 மணி நேரத்தில் வாயு உற்பத்தியாகும். அதை உடனுக் குடன் பிரித்தெடுத்து, எரிபொருள் தேவைக்கான தூய்மையான மீத்தேன் வாயுவாக மாற்றலாம்.

உணவுக் கழிவுகள், தாவரக் கழிவுகள், கால்நடைகளின் கழிவுகள் போன்று பல்வேறு மூலப்பொருள்களிலிருந்தும் பயோ காஸ் தயாரிக்கலாம். இதை, இயற்கை எரிவாயுவைப் போல, சி.என்.ஜி (Compressed Natural Gas) சிலிண்டரில் அடைத்து, சமையல் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு வணிக ரீதியாக விற்பனை செய்யலாம்.

நொதித்தல் வினைக்குப் பிறகு, வாயு உற்பத்தியாகும் கலனில் இருந்து திரவம் போல கழிவு (Slurry) வெளியேறும். அதைச் சேகரித்து தாவரங்களுக்குப் பயன்படுத்துவதன் மூலம் பயிர் வளர்ச்சி நன்றாக இருக்கும். தவிர, கலனில் தங்கிய திடநிலையிலுள்ள கழிவு களைப் பிரித்தெடுத்து, தாவரங் களுக்கு உரமாகப் பயன் படுத்தலாம். மீத்தேன் வாயு தயாரிப்புக்காக, கோசாலை, கால்நடைப் பண்ணை, காய்கறிச் சந்தை போன்ற இடங்களில் மக்கக்கூடிய கழிவுகளைக் குறைவான விலைக்கு வாங்கி மூலப்பொருளாகப் பயன் படுத்தலாம்.

தயாரிப்பு முறை...

தினசரி வாயு உற்பத்திக்கேற்ப மூலப்பொருள்களை (கற்கள் உள்ளிட்ட திடப்பொருள்களை நீக்கி) அரவை இயந்திரத்தில் சேர்த்துக் கூழாக்கி, அதை கன்டெய்னர் கலனில் (Blower) சேர்க்க வேண்டும். இந்த ஸ்டார்ட்டர் கரைசலில் பாக்டீரி யாக்களால் நொதித்தல் வினை நிகழ்ந்து உயிர் வாயு உற்பத்தி யாகும். அதில், 45% அளவுக்கு கார்பன் டை ஆக்ஸைடு கலந்திருப்பதால், அவற்றை எரிபொருள் தேவைக்கு அப்படியே பயன்படுத்தும் போது முழுமையான பலன் கிடைக்காது. எனவே, ஸ்க்ரப்பர் (Scrubber) எனப்படும் டீசல் பரைசேஷன் (Desulphurization) செயல்பாட்டின் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட வாயுவில் இருந்து, கார்பன் டை ஆக்ஸைடு நீக்கப்படும். இதன் மூலம் சுத்த மான மீத்தேன் வாயு தயாராகும். அதிலிருக்கும் ஈரப்பதம் நீக்கப்பட்டு, அதிக அழுத்தம் கொடுத்து சிலிண்டரில் சி.என்.ஜி வாயுவாக அது நிரப்பப்படும்.

கலக்கல் வருமானம் தரும் கழிவுகளில் இருந்து காஸ் தயாரிப்பு..!

விற்பனை வாய்ப்பு...

சிலிண்டரில் அடைத்து வணிக ரீதியாக விற்பனை செய்யப்படும் மீத்தேன் வாயுவை, வீடு மற்றும் உணவகங்களில் சமையல் தேவைக்குப் பயன்படுத்தலாம். தவிர, சி.என்.ஜி பயன்பாட்டில் இயங்கும் வாகனங்களை இயக்கவும் இந்த வாயு தேவைப் படும் என்பதால், அத்தகைய நிறுவனங்கள், உற்பத்தி ஆலை களின் தேவைகளுக்கும் விற்பனை செய்யலாம்.

சிறப்பம்சங்கள்...

 சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும்.

 எரிசக்திக்காகச் செலவிடப் படும் செலவுகளைக் குறைக்கலாம்.

 மரபுசாரா எரிசக்தித் துறையில், அந்நிய முதலீடுகளை ஈட்டலாம்.

 பெட்ரோல், டீசல், எரிவாயு போன்ற எரிபொருள்கள் வெளி நாடுகளில் இருந்து நம் நாட்டில் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுவதைக் குறைக்கலாம்.

வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.

வாயு உற்பத்தி செய்யப்படும் கலன் மாசுபடாது. அதிலிருந்து, துர்நாற்றம், பூச்சி, நோய்த்தொற்று பரவும் பாதிப்புகளும் ஏற்படாது.

ராமசாமி தேசாய்
ராமசாமி தேசாய்

வங்கிக் கடனுதவி...

தினமும் 10 டன் மூலப் பொருள்கள் பயன்படுத்துவதற்கு ஏதுவாக, இந்தத் தொழில் தொடங்க 160 லட்சம் ரூபாய் முதலீடு தேவைப்படும். ‘நீட்ஸ்’ திட்டத்தின்கீழ் 90 லட்சம் ரூபாய் கடனுடன் (Term Loan) 25% மானியமும் பெறலாம்.

கலக்கல் வருமானம் தரும் கழிவுகளில் இருந்து காஸ் தயாரிப்பு..!

மாதம்தோறும் 8,47,500 டேர்ன் ஓவர்!

500 கியூபிக் மீட்டர் கொள்ளளவு கொண்ட பயோ காஸ் பிளான்ட் அமைப்பதால், தினமும் 250 - 400 கிலோ கிராம் மீத்தேன் வாயு கிடைப்பதுடன், 2,500-க்கும் அதிகமான திடநிலை உரமும் (கலனுக்குள் சேகரமாவது), 4,000 கிலோவுக்கும் அதிகமாகத் திரவநிலை உரமும் கிடைக்கும். ஒரு கிலோ கிராமுக்கு ரூ.55 வீதம், தோராயமாக 250 கிலோ கிராம் வாயு விற்பனை செய்வதாகக் கணக்கிட்டால் ரூ.13,750 கிடைக்கும். ஒரு கிலோவுக்கு ரூ.5 வீதம், 2,500 கிலோ திட உரம் விற்பனையில் ரூ.12,500 கிடைக்கும். ஒரு கிலோ கிராமுக்கு 50 பைசா வீதம், தினமும் 4,000 கிலோ கிராம் திரவ உரம் விற்பனையில் ரூ.2,000 வருமானம் கிடைக்கும். மூன்று விற்பனை முறையிலும் தினமும் 28,250 ரூபாயும், ஒரு மாதத்துக்கு 8,47,500 ரூபாய் வருமானம் ஈட்டலாம்.

(தொழில் பழகுவோம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism