Published:Updated:

5 பேருக்கு BMW கார் பரிசு... அசத்திய சுரேஷ் சம்பந்தம்!

BMW கார் பரிசு...
பிரீமியம் ஸ்டோரி
BMW கார் பரிசு...

பரிசு

5 பேருக்கு BMW கார் பரிசு... அசத்திய சுரேஷ் சம்பந்தம்!

பரிசு

Published:Updated:
BMW கார் பரிசு...
பிரீமியம் ஸ்டோரி
BMW கார் பரிசு...

கிராஃபியன் பிளாக்

நிறுவனத்தின் வளர்ச்சிக்குப் பாடுபட்ட ஊழியர்களுக்கு, நல்லதொரு பரிசு தந்து ஆச்சர்யப்பட வைப்பது வளர்ந்துவரும் நிறுவனங்களின் வழக்கமாக மாறிவருகிறது. சென்னையில் இருந்து செயல்படும் சாஸ் (SaaS) நிறுவனமான கிஷ்ஃப்ளோ தன் ஐந்து ஊழியர்களுக்கு ஐந்து BMW கார்களை வழங்கியுள்ளது. இது அவர்களை மட்டுமல்ல, ஐ.டி ஊழியர்கள் அனைவரையும் ஆச்சர்யப் படுத்தியிருக்கிறது.

பத்து ஆண்டுகளுக்குமுன் தொடங்கப்பட்ட கிஷ்ஃப்ளோ இன்று சுமார் 160 நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சேவையை வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பேற்றிருக்கும் தினேஷ் வரதராஜன் (Chief Product Officer), பிரசன்னா ராஜேந்திரன் (Vice President), விவேக் மதுரை (Director), ஆதி ராமநாதன் (Director), கெளசிக் ராம் கிருஷ்ணசாயி (Director) உள்ளிட்டோருக்கு BMW கார்களை வழங்கி திக்குமுக்காட வைத்திருக்கிறார் கிஷ்ஃப்ளோவின் சி.இ.ஓ சுரேஷ் சம்பந்தம்.

5 பேருக்கு BMW கார் பரிசு... அசத்திய சுரேஷ் சம்பந்தம்!

BMW காரைப் பரிசளித்துப் பேசிய கிஷ்ஃப்ளோ நிறுவனத்தின் சி.இ.ஓ சுரேஷ் சம்பந்தம், ``கிஷ்ஃப்ளோ 10 ஆண்டுகளில் பல ஏற்றத்தாழ்வுகளைச் சந்தித்திருக்கிறது. இதில் என்னோடு கைகோத்து தொடர்ந்து பயணித்த நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பிலுள்ள ஐந்து பேருக்கு BMW 5 சீரிஸ் 530டி எடிஷன் கார்களை வழங்குவதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இந்த ஒவ்வொரு காரின் மதிப்பும் தோராயமாக ரூ.1 கோடி. இந்த ஐவரும் எளிய குடும்பப் பின்னணி கொண்டவர்கள். இந்த அன்பளிப்பை அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்துக்கும் தருவதில் எனக்குப் பெருமகிழ்ச்சி” என்றார்.

BMW காரைப் பெற்றுக்கொண்ட அந்த 5 பேரிடமும் பேசினோம். தினேஷ் வரதராஜன், ``ரொம்ப சந்தோஷமாக இருக்கு. கார் எனக்குக் கிடைச்சதைவிட, என்னோட சேர்ந்து பணி யாற்றியவர்களுக்கும் கிடைச்சதுல இன்னும் இரட்டிப்பு சந்தோஷம். கடந்த ஐந்து வருஷமா நாங்க வேகமா வளர்ந்துகிட்டு வர்றோம். அந்த வளர்ச்சியோட அடையாளம்தான் இந்த கார் பரிசு’’ என்றார்.

பிரசன்னா ராஜேந்திரனுடன், ``இன்னிக்கு சுரேஷ் எங்களை விருந்துக்கு கூப்பிட்டுப் போய் ஒருசேர ஐந்து பேருக்கும் கார் பரிசா தந்தார். இந்தியாவில வேற எந்த நிறுவனமும் இப்படிப் பண்ணியிருக்குமான்னு எனக்குத் தெரியல. ரொம்ப குதூகலாமவும் மகிழ்ச்சி யாவும் இருக்கு” என்றார்.

5 பேருக்கு BMW கார் பரிசு... அசத்திய சுரேஷ் சம்பந்தம்!

விவேக் மதுரை, ``இதை நான் எதிர்பார்க்கவே இல்ல. இந்த காரை நிறுத்துற அளவுக்கு என் வீட்டில் இடமில்லை. இதற்காக என் வீட்டை கொஞ்சம் இடித்து மாற்றம் செய்யணும். காரை எடுத்துக்கிட்டு ஒரு ரவுண்டு திருநெல்வேலி வரை போகலாம்னு இருக்கேன்” என்றார்.

``என்னோட வாழ்க்கை லட்சியம் ஒரு பி.எம்.டபிள்யூ கார் வாங்கணும்ங்கிறதுதான். அது ரொம்ப நாள் ஆசையா இருந்துச்சு. என்னைக்காவது வாங்கிடுவேன்னு நினைச்சேன். ஆனா, என் லட்சிய கார் இப்ப என் கண்ணு முன்னால நின்னுகிட்டு இருக்கு. இந்த கார்தான் உங்களுக்குன்னு சுரேஷ் காட்டினப்ப சந்தோஷத்துல திக்குமுக்காடிட் டேன்” என்றார் ஆதி ராமநாதன் சிரித்தபடி.

‘‘நிறுவனத்தோட முக்கியப் பொறுப்புல இருக்கிறவங்கள லஞ்சுக்குக் கூப்பிட்டாரு. சரின்னு போனேன். லஞ்சுக்கு முன்னாடி கொஞ்சம் வெளியே போகலாம் வாங்க’ன்னு வெளியே அழைச்சுட்டுப் போய், இந்தாங்க BMW கார் சாவின்னு கொடுத்தப்ப எனக்கு இன்ப அதிர்ச்சி’’ என்ற கெளசிக்ராமின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்.

இருக்காதா பின்னே... BMW கார் என்பது எளிய மனிதர்களுக்கு வாழ்நாள் கனவாச்சே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism