Published:Updated:

உங்கள் வாழ்க்கையில் முன்னேற உதவும் பாசிட்டிவ் அணுகுமுறை! நீங்கள் நேர்மறை சிந்தனையாளரா..?

பாசிட்டிவ் அணுகுமுறை
பிரீமியம் ஸ்டோரி
பாசிட்டிவ் அணுகுமுறை

MBA BOOKS

உங்கள் வாழ்க்கையில் முன்னேற உதவும் பாசிட்டிவ் அணுகுமுறை! நீங்கள் நேர்மறை சிந்தனையாளரா..?

MBA BOOKS

Published:Updated:
பாசிட்டிவ் அணுகுமுறை
பிரீமியம் ஸ்டோரி
பாசிட்டிவ் அணுகுமுறை

ஆட்டிக்யூஷன் (Atticution)என்றால் என்ன என்ற கேள்வியுடன் ஆரம்பிக்கிறது இந்தப் புத்தகம். எந்தவொரு விஷயத்திலும் நம் அணுகுமுறை (Attitude) மற்றும் செய்து முடிக்கும் திறன் (Execution) இந்த இரண்டு வார்த்தைகளையும் இணைத்து உருவாக்கப்பட்டதுதான் இந்த ஆட்டிக்யூஷன். இதுதான் நாம் இந்த வாரம் பார்க்கப்போகும் புத்தகத்தின் தலைப்பாகும்.

வெற்றிக்கான முதல்படி...

‘‘விரும்புதலே (ஆசை) எந்தவொரு விஷயத்துக்கும் ஆரம்பப்புள்ளியாக இருக்கிறது. விருப்பம் நிறைவேறத் தேவையான ஊக்குவித்தல் (Motivation) என்பது இன்றைக்கு உலகம் முழுவதும் நீக்கமற நிறைந்திருக்கும் ஒரு விஷயமாக இருக்கிறது. தொலைக்காட்சி விளம்பரம், விளையாட்டுக்கான குழுக்கள் செய்யும் சாதனை குறித்த தகவல்கள், புத்தகங்கள், சமூக வலைதளங்கள் என எங்கேயும் ஊக்குவிப்புக்கு பஞ்சமேயில்லை. யூடியூப் வலைதளத்தில் மூன்று நிமிடம் முதல் மணிக்கணக்கில் ஊக்குவித்தல் குறித்து விலாவாரியாகப் பேசும் வகையில் மோட்டிவேஷன் குறித்த வீடியோ உரைகள் இருக்கவே செய்கிறது.

என்னதான் மோட்டிவேஷன் குறித்து நாம் தெரிந்துகொண்டு மோட்டிவேட் ஆனாலுமே, நம் எண்ணங்களை செயலாக்க நாம் மட்டுமே நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வெறுமனே மோட்டிவேட் ஆவதால் மட்டுமே பிரயோஜனம் எதுவும் இல்லை” என்கிறார் இந்தப் புத்தகத்தின் ஆசிரியரான எல்ட்டன் ஹர்ட்.

‘‘மோட்டிவேஷன் என்பது ஒரு அலாரம் அடிக்கும் திறன்கொண்ட கடிகாரம் போன்றதுதான். அலாரம் அடித்தவுடன் (மோட்டிவேட் ஆனவுடன்) நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதுதான் நீங்கள் செய்ய நினைக்கும் காரியங்களில் நல்ல முடிவுகளைக் கொண்டுவந்து சேர்க்கிறது. இத்தகைய உங்களின் மனப்பாங்கே முன்னேற்றத்துக்கான பாதையில் உங்களை வழிநடத்திச் செல்கிறது என்று நான் சொல்கிறேன்’’ என்று சொல்லும் ஆசிரியர், மேலும், இது குறித்து பின்வரும் மூன்று கேள்விகளை நம்முன்னே வைக்கிறார்.

1. கடைசியாக எப்போது நீங்கள் அதிகமாக மோட்டிவேட் ஆனீர்கள்? 2. மோட்டிவேட் ஆன அந்த வேளையில், நீங்கள் என்னென்ன செயல்களைச் செய்தீர்கள் அல்லது செய்யாமல் விட்டீர்கள்? (வேண்டாத வற்றைச் செய்யாமல் விட்டொழித் தீர்கள்). 3. தினசரி மோட்டிவேஷனைப் பெற என்னென்ன முயற்சிகளை நீங்கள் செய்துவருகிறீர்கள்? என்பதுதான் அந்தக் கேள்விகள். இந்தக் கேள்விகளுக்குப் பின்னால் மோட்டிவேஷனைப் பெற்றபின்னால் அன்றாடம் தொடர்ந்து முன்னேற்றத் துக்கான நடவடிக்கைகளைத் தவறாமல் எடுப்பதற்கான வழிமுறை களை உருவாக்கிக்கொள்வது எப்படி என்பதையும் பட்டியலிட்டுள்ளார்.

பாசிட்டிவ் அணுகுமுறை
பாசிட்டிவ் அணுகுமுறை

மற்றவர்களிடம் சொல்லுங்கள்...

‘‘முதலில், நீங்கள் மோட்டி வேஷனைப் பெற உறுதுணையாக இருக்கும் மூன்று அதிமுக்கிய விஷயங்களைப் பட்டியலிடுங்கள் (குடும்பம், நண்பர்கள், புத்தகங்கள், வீடியோக்கள் போன்றவை). இதில் உள்ள ஆட்களில் இரண்டு அல்லது அதற்கு அதிகமான உங்களை மோட்டிவேட் செய்யக்கூடிய நபர்களைப் பட்டியலிடுங்கள், இந்தவித பட்டியலை இட்டபின்னர் ஒரு செயலை (பெரிய சாதனைச் செயல்கள் என்றில்லை – ஒரு டூர் போவேன், இந்த வருடம் நான் திருமணம் செய்துகொள்வேன் என்பது போன்ற சாதாரண செயல் களைக்கூட) நான் இன்றைக்கு செய்து முடிப்பேன் என்று தீர்மானித்துவிட்டு, அந்தத் தீர்மானத்தை உங்களுக்கு நம்பிக்கையானவர்களிடம் சொல்லி வையுங்கள்.

இப்படிச் சொல்லி வைப்பதன் மூலம் உங்கள் மனதில் ‘அடடா, இவர்களிடம் சொல்லி வைத்திருக் கிறோமே! கட்டாயம் இதற்கான முயற்சியை எடுக்க வேண்டுமே!’ என்ற நினைப்புடன் செயல்பட ஆரம்பிப்பீர்கள். இவர்கள்தாம் பொறுப்புணர்வுக் கூட்டணி உறுப்பினர்கள் (accountability partners). உங்களைச் சுற்றியிருக்கும் இது போன்ற நபர்களே உங்களை வற்புறுத்தி முன்னேற்றத்தின் அடுத்த படிநிலைக்குக் கொண்டு செல்ல உதவுவார்கள்’’ என்கிறார் ஆசிரியர்.

‘‘இதில் நீங்கள் முக்கியமாகத் தீர்மானிக்க வேண்டியது, யாரிடம் இந்த விஷயத்தைச் சொல்லி வைப்பது என்பதுதான். உங்கள் நலம் விரும்பிகளிடம் நீங்கள் செய்ய நினைக்கும் விஷயங்களைச் சொல்லலாம். ஆனால், இவர்கள் நம்மை கேள்வி கேட்க ஏதுவாக நாம் அவர்களைச் சந்தித்து உரையாட வேண்டுமில்லையா? நாம் எப்போது அவர்களைச் சந்திப்போம், எவ்வளவு காலத்துக்கு ஒரு முறை அவர்களைச் சந்திப்போம் என்பதையும் நாம் வரையறை செய்துகொள்ள வேண்டும். இதுபோன்ற நபர்களைச் சந்திக்கும் இடம் மற்றும் நேரம் கவனச் சிதறல் குறைவாக இருக்கும் வண்ணம் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும்’’ என்றும் சொல்கிறார் ஆசிரியர்.

ஸ்மார்ட் குறிக்கோள்களுக்கான கேள்விகள்...

நீங்கள் நினைத்ததை அடைய உங்களிடம் SMART குறிக்கோள்கள் இருக்க வேண்டும். Specific (குறிப்பிட்ட), Measurable (அளவிடக்கூடியதான), Actionable (இருக்கிற சூழ்நிலையில் நடவடிக்கைகள் எடுப்பது சாத்தியமான), Realistic (யதார்த்தமான), Timebound (குறிப்பிட்ட கால அளவுக்குள் செய்ய வேண்டிய அளவிலான) என்ற குணாதி சயங்களைக் கொண்ட குறிக்கோள்களை நிர்ணயித்துக்கொண்டிருக்கும் நபர்களில் பெரும்பான்மையானவர்கள்கூட அவர்கள் நினைக்கும் அளவுக்கான வெற்றியைப் பெற முடிவதில்லை என்பதையே நடைமுறையில் பார்க்கிறோம். இது எதனால் என்று தீர ஆராய்ந்தால் ஒன்று புலப்படுகிறது.

Accountability எனும் பொறுப்புணர்வு இந்தவித குறிக்கோள்களில் இல்லாது போவதால் மட்டுமே பெரும்பாலானோர் SMART குறிக்கோள்களைக் கொண்டிருக்கும்போதிலும் வெற்றியைப் பெற இயலாது போகிறது. பொறுப்புணர்வை அதிகரித்துக் கொள்ள நீங்கள் முயல வேண்டும். அதற்கான சிந்தனையைச் செய்யும்போது நீங்கள் கேட்க வேண்டிய கேள்வி கடைசியாக, ‘நான் தீர்மானித்த விஷயத்தைத் தீர்மானித்தவாறு எப்போது செய்து முடித்தேன், அடுத்த ஒன்று அல்லது இரண்டு வருடங்களில் எந்த விஷயத்தைச் செய்து முடித்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன், என் திட்டங்களைச் செயலாக்க விடாமல் பெரும் தடையாக குறுக்கே நிற்பது எது என்பவையே நீங்கள் பொறுப்புணர்வை அதிகரித்துக்கொள்வதற்காக உங்களையே கேட்டுக்கொண்டு பதிலைக் கண்டறிய வேண்டிய கேள்விகள் என்கிறார் ஆசிரியர்.

இலக்கை அடைய முடியவில்லையா..?

விற்பனைப் பிரதிதிகள் தங்களுடைய விற்பனை இலக்கை முடிக்க முடியாமல் திணறும்போது ஒரு பயிற்சியாளராக ஆசிரியர் கேட்கும் கேள்விகளை இந்தப் புத்தகத்தில் தந்துள்ளார். ‘‘விற்பனையில் உங்களுடைய வெற்றி எந்த அளவில் உள்ளது, உங்களைப் போலவே பணிபுரியும் ஒரு சில சிறந்த விற்பனைப் பிரதிநிதியால் மட்டும் எப்படி எக்கச் சக்கமாக விற்பனை செய்ய முடிகிறது என்ற இரண்டு கேள்வி களை விற்பனைப் பிரதிநிதிகளிடம் கேட்டுத் தீவிரமாக விவாதித்த பின்னால் அவர்களில் மிக பெரும்பான்மையானவர்கள் சொன்ன பதில் ஒன்றுதான்.

‘மீண்டும், மீண்டும், மீண்டும் ஒரே செயலை அலுப்புசலிப்பு இல்லாமல் செய்வதால்தான் அதைச் செய்ய முடிந்தது’ என்பதுதான் அவர்கள் சொன்ன பதில்.

இங்கேதான் ஆட்டிக்யூஷன் (atticution = attitude + execution) என்பது உதவுகிறது. திரும்பத் திரும்ப ஒரே விஷயத்தை நீங்கள் செய்யும்போது எந்த மாதிரியான மனநிலையை நீங்கள் அடை கிறீர்கள், ஒவ்வொரு முறையும் உற்சாகமாகச் செய்கிறீர்களா அல்லது அரைத்த மாவையே அரைக்கிறோம் என்ற எண்ணமே மேலோங்குகிறதா? அரைத்த மாவையே அரைக்கிறோம் என்ற எண்ணத்துடன் செயல்பட்டால் உங்களுக்கு வெற்றி கிடைப்பது கடினமான ஒன்றாகவேயிருக்கும். செய்வதற்கரிய காரியங்களை யெல்லாம் நீங்கள் செய்ய முடியாது போகும். இதிலிருந்து வெளியேவர நீங்கள் உங்களுடைய மனப்பாங்கை மாற்றிக் கொண்டேயாக வேண்டும்.

புத்தகத்தின் பெயர்:
Atticution:
 Why Success Equals Attitude Plus 
Execution
ஆசிரியர்:
Elton Hart
 பதிப்பாளர்:
 High Bridge Books LLC
புத்தகத்தின் பெயர்: Atticution: Why Success Equals Attitude Plus Execution ஆசிரியர்: Elton Hart பதிப்பாளர்: High Bridge Books LLC

அலுவலகப் பணியில் முன்னேற...

‘‘அலுவலகத் தைப் பொறுத்த வரை, மொத்த வேலையில் உங்களுடைய பங்கு என்ன, உங்களுடைய பங்கை நீங்கள் சிறப்பாகச் செய்யா விட்டால் என்ன வாகும், சிறப்பாகச் செய்தால் என்ன வாகும், உங்கள் பங்கை நீங்கள் செய்து முடித்த பின்னால் என்ன மாதிரியான உணர்வைப் பெறுகிறீர்கள் என்பன போன்றவை உங்களுடைய மனப் பாங்கைச் சோதித்துக்கொள்ள உதவுகிற கேள்விகளாகும்.

உங்களுடைய பங்களிப்பை நீங்கள் சுமாராகச் செய்தால், அது எந்தளவு நிறுவனத்தையும் உங்களையும் பாதிக்கும், சூப்பராகச் செய்தால் அது எந்த அளவுக்கு உங்களையும் நிறுவனத்தையும் பலப் படுத்தும், வேலையின் தரத்தை மாற்ற நீங்கள் எதிலெல்லாம் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்பன போன்ற கேள்விகள் செயல்முறையை மேம்படுத்திக் கொள்ள கேட்கப்பட வேண்டிய கேள்விகளாகும்.

பணியிடத்தில் முன்னேற்றத்தைப் பெற நீங்கள் உங்களுடைய தனிப்பட்ட முன்னேற்றத்தில் மட்டுமே நீங்கள் முதலீடு களைச் செய்ய வேண்டும் என்று சொன்னால், அனைவருமே இது கொஞ்சம் சுயநலமான சிந்தனையாக இருக்கிறதே என்பார்கள். நினைவிருக் கட்டும் உங்கள் முன்னேற்றத்தில் நீங்கள் முதலீடுகளைச் செய்து திறனில் முன்னேற்றம் கண்டால் அதனால் முழுமையான பலனைப் பெறப்போவது நீங்கள் பணியாற்றும் நிறுவனமே அன்றி வேறொன்றும் இல்லை’’ என்று சொல்லி முடிகிறது இந்தப் புத்தகம்.

தனிநபர் வாழ்க்கை மற்றும் பணியிட வாழ்க்கை என்ற இரண்டிலுமே முன்னேற்றத்தைச் சரியான மனப்பாங்கைக் கொண் டிருப்பதன் மூலம் பெறும் வழிவகைகளை எளிதான நடையில் சொல்லும் இந்தப் புத்தகத்தை அனைவரும் ஒருமுறை படித்து பலன் பெறலாம்.

பிட்ஸ்

ற்பத்தித் துறைக்கான பர்ச்சேஸ் மேனேஜர் இண்டெக்ஸ் (PMI) கடந்த ஏழு மாதங்களில் இல்லாத அளவுக்கு 55.4 புள்ளி களை, கடந்த மார்ச் மாதத்தில் எட்டி முதலீட் டாளர்களை அதிர்ச்சி செய்துள்ளது!