Published:Updated:

நினைத்ததை செய்துமுடிக்கும் சூட்சுமம்..! சாதிக்கும் சீக்ரெட்ஸ்...

சாதிக்கும் சீக்ரெட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
சாதிக்கும் சீக்ரெட்ஸ்

MBA Books

நினைத்ததை செய்துமுடிக்கும் சூட்சுமம்..! சாதிக்கும் சீக்ரெட்ஸ்...

MBA Books

Published:Updated:
சாதிக்கும் சீக்ரெட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
சாதிக்கும் சீக்ரெட்ஸ்

இன்றைக்கு அலுவலகத்தில் பல வேலைகளைச் செய்து முடிக்க வேண்டும் என்கிற திட்டத்துடன் செல்வோம். ஆனால், அலுவலகத்தை விட்டுக் கிளம்பும்போது அதில் பாதிதான் முடிந்திருக்கும். இந்த அனுபவம் நம்மில் பலருக்கும் இருக்கும்தானே! இதற்கு என்ன காரணம்? ‘‘நாளின் பெரும்பாலான நேரத்தை நம்மைச் சுற்றி இருக்கும் உலகம் நம்முன்னால் எதைக் கொண்டுவந்து போடுகிறதோ, அதன் மீது கவனம் கொண்டு போய் நாம் எதைச் செய்ய நினைக்கிறோமோ (எதை அடைய நினைக்கிறோமோ, அதற்குத் தேவையானவற்றை) அதைச் செய்யத் தவறுவதால்தானே?்’’ என்கிற கேள்வியுடன் ஆரம்பிக்கிறது இந்த வாரம் நாம் பார்க்கவிருக்கும் ‘T0 Do To Done’ என்ற புத்தகம்.

புத்தகத்தின் பெயர்:
 From To-Do to Done
ஆசிரியர்கள்:
Maura Thomas 
பதிப்பாளர்:
Simple Truths
புத்தகத்தின் பெயர்: From To-Do to Done ஆசிரியர்கள்: Maura Thomas பதிப்பாளர்: Simple Truths

நம் வளர்ச்சிக்குப் பயன்படாத காரியங்களைச் செய்து பயனில்லை...

‘‘‘உண்மையான உற்பத்தித்திறன் (productivity) என்பது நம்முடைய செய்ய வேண்டிய காரியங்களுக்கான பட்டியலில் (to-do-list) இருக்கும் விஷயங்களை முடித்ததாக டிக் அடிப்பதோ, நம்மை நோக்கி வரும் பல்வேறு விதமான கம்யூனிகேஷன் களை (இ-மெயில், வாட்ஸ்அப் என) எதிர்கொண்டு பதிலளிப்பதிலோ இல்லை’’ என்று சொல்லும் ஆசிரியை, ‘‘எதிர்காலத்தில் உங்களுக்கு தனிப்பட்ட அளவில் உதவாத விஷயங்களை எவ்வளவு அதிகமாகச் செய்தாலும் அதை புரடக்டிவிட்டி என்ற கணக்கில் எடுத்துக்கொள்ளவே கூடாது’’ என்று கறாராகச் சொல்கிறார்.

மூன்றுவிதமான படிநிலைகள்...

பொதுவாக, புரடக்டிவிட்டி என்ற விஷயத்தில் மனிதர்கள் பயணிக்கும் படிநிலைகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். இதில் முதல் படிநிலை யில் நாளெல்லாம் ஒரே பிசியான சூழ்நிலை இருக்கும். நாளின் இறுதியில் எதையுமே உருப்படியாகச் செய்யாததைப் போன்ற சூழ்நிலை இருக்கும். இந்த முதல் படிநிலையில் நம்மை நோக்கிவரும் வேலையைத் தொடர்ந்து செய்துகொண்டேயிருக்க வேண்டும். அடுத்தவர்களுடன் சேர்ந்து செயல்படுவது, உடனிருக்கும் அடுத்தவர்களுடைய இலக்குகளை அவர்கள் அடைவதற்குத் தேவை யான காரியங்களைச் செய்வதே இந்தப் படிநிலையில் முக்கியமான பணியாக இருக்கும்.

இந்த நிலையில் உங்களுடைய தனிப்பட்ட இலக்கு குறித்து சிந்திக்க நேரம் இருக்காது. வார நாள்களில் குழுவின் இலக்குகளுக்காக அதிக நேரம் உழைத்துவிட்டு, வாரத்தின் இறுதியில் நிறுவனத்தினுள் குழுவுக்கான உங்களுடைய பொறுப்பு களுக்காக உழைத்துக்கொண்டிருப் பீர்கள். உங்களுடைய தனிப்பட்ட இலக்கை நினைத்துப் பார்க்கக்கூட இந்தப் படிநிலையில் இருக்கும்போது நேரமிருக்காது. இந்த வித புரடக்டி விட்டி, உங்களைச் சிதைத்துவிடும் அளவுக்கு வலிமை வாய்ந்ததாகும்.

இரண்டாவது படிநிலையில் கொஞ்சம் சிந்தித்து செயல்பட வாய்ப்பும் நேரமும் இருக்கும். ஆனாலும், இப்படி முடிக்கப்படும் வேலைகள் நிறுவனம் சார்ந்ததாக இருக்குமே தவிர, உங்கள் தனிப்பட்ட இலக்குகளுக்கானதாக இருக்காது. திட்டமிட்ட வேலையை முடித்தோமா, மாலையில் கொஞ்சம் வேலையை விட்டு தள்ளிச்சென்று பொழுதைப் போக்கினோமா என்று இருக்க முயலும் நிலை இது. வேலை யும் நடக்கும். பொழுதுபோக்கும் மகிழ்ச்சியும் இருக்கும். ஆனால், சிந்தித்துத் திட்டமிட்டு எதிர்காலத் துக்கான இலக்குகளுக்காக ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போட நேரமிருக்காது. சுருக்கமாக, வேறொரு புரடக்டிவிட்டி குறித்த நிர்வாகத் துக்கான நடைமுறை வேண்டும் என்பதையே இந்தச் சூழ்நிலை உங்களுக்குக் காட்டும்.

மூன்றாம் படிநிலையில், இரண்டு முக்கிய விஷயங்கள் நடப்பதை உணர்வீர்கள். ஒன்று, அன்றாடம் முடிக்க வேண்டிய வேலைகள் சரியாகக் குறித்த நேரத்தில் முடிக்கப்பட்டு, உங்களுடைய நிறுவனம் சார்ந்த இலக்குகளை நோக்கி உங்களுடைய பயணம் என்பது தங்கு தடையின்றி சீராக இயங்க ஆரம்பித்திருக்கும். அதே சமயம், நீங்கள் ரெகுலராக நேரம் ஒதுக்கி உங்களுடைய தனிப்பட்ட முன்னேற்றத்துக்கான திட்டங்களைத் தீட்டவும், உங்களுடைய தனிப்பட்ட திறனையும் மற்றும் சிந்தனா சக்தியையும் வளர்த்துக்கொள்ளவும், வேலை மற்றும் நீங்கள் வாழநினைக்கும் வாழ்க்கையில் ஜெயிக்கத் தேவையான விஷயங்களைக் கற்றுக்கொள்ளவும் செய்ய ஆரம்பித்திருப்பீர்கள்.

புரடக்டிவிட்டி என்பது வெறுமனே வந்த மெயில்களுக்கெல்லாம் பதில் அனுப்பிவிட்டு, செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் செய்து முடித்து விட்டு கொஞ்சம் அக்கடா என்று இருக்க நேரத்தை உருவாக்கிக்கொள்வது மட்டுமேயில்லை. நம்முடைய இலக்கு களை நோக்கி நகருவதற்கான உருப்படி யான விஷயங்களைச் செய்து நமக்கு நெருக்கமானவர்களுக்கு அவர்கள் வாழ்வில் உருப்படியான விஷயங்களை அடைவதற்கு உதவி செய்யும் ரீதியிலான அர்த்தம் பொதிந்த ஒரு வாழ்க்கையை வாழ முயற்சி செய்வதாகும்’’ என்கிறார் இந்தப் புத்தகத்தின் ஆசிரியை.

நினைத்ததை செய்துமுடிக்கும்
சூட்சுமம்..! சாதிக்கும் சீக்ரெட்ஸ்...

வெளியே இருக்கும் விஷயங்கள் நமக்கு கவனச்சிதறலைத் தரும் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் நமக்குள்ளே இருக்கும் நாமே பெருமளவு கவனச் சிதறலை நம்முடைய வாழ்வில் கொண்டு வந்து சேர்த்துவிடுவோம். அதென்ன நமக்குள்ளே இருக்கும் நபர் என்றால் நம்முடைய மூளையே அது குறிப்பிடுகிறது. இன்றைக்கு நான் கட்டாயம் முடிக்க வேண்டிய விஷயங்கள் என்று நாம் பட்டியலிட்டு நம்முடைய மூளையிடம் இவற்றையெல்லாம் நினைவில் வைத்துக்கொள் என்று கட்டளையிட்டு விடுகிறோம். மூளைக்கு அதை எப்போது நினைவூட்ட வேண்டும் என்று சொல்லாத காரணத்தால் தொடர்ந்து அது நமக்கு அந்த விஷயத்தை நினைவூட்டி நம்மை ஒரு பதற்ற நிலையிலேயே வைத்துப் பார்க்கிறது. பெரும் பாலான நிர்வாகிகள் எவற்றை யெல்லாம் முடிக்க வேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் நினைவு படுத்திக்கொள்வதாலேயேதான் கவனச் சிதறலுக்கு ஆளாகின்றனர்.

உதாரணத்துக்கு, சிங்கத்தை பழக்கச் செய்யும் நபர்கள் (lion tamer) அதன் கூண்டுக்குள் செல்லும்போது ஒரு நாற்காலியை கையுடன் எடுத்துச் செல்வதைப் பார்த்திருப்பீர்கள். எதற்காக அந்த நாற்காலி..? பழகச் செய்பவரின் செளகர்யத்துக் காகவோ, சிங்கம் தாக்கினால் அதிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காகவோ இல்லை. நாற்காலியை சிங்கத்தின் முன்னால் காட்டும்போது அது நாற்காலியின் நான்கு கால்களைப் பார்ப்பதன் மூலம் கவனச் சிதறலை அடைகிறது. நான்கு வழி தாக்குதலை எதிர்கொள்ள வேண்டுமோ, என்ன செய்வது என்பதன் மூலம் அதன் கவனத்தைச் சிதறச் செய்வதே அந்த நாற்காலியின் நோக்கமாகும். இதைத்தான் ‘லயன் சிண்ட்ரோம்’ என்கின்றனர். கவனச் சிதறலே நம்முடைய பலம் எது என்று நமக்கு தெரியவிடாத நிலையில் நம்மை ஆழ்த்தி, நம்மை ஏதாவது ஒன்றுக்கு அடிமையாக்கி விடுகிறது என்கிறார் ஆசிரியை.செய்ய வேண்டிய காரியங்களை ஒழுங்கமைத்தலின் அவசியத்தை நச்சென்று விளக்கியுள்ளார் அவர்.

படம்1: ஒழுங்கமைக்கப்படாதவை
படம்1: ஒழுங்கமைக்கப்படாதவை
படம்2: ஒழுங்கமைக்கப்பட்டவை
படம்2: ஒழுங்கமைக்கப்பட்டவை

ஒழுங்கமைக்கப்படாத செய்ய வேண்டிய வேலைகளின் பட்டியல்

படம் 1-ல் எத்தனை வகைப் பழங்கள் உள்ளன; ஒவ்வொன் றிலும் எத்தனை பழங்கள் உள்ளன என்ற கேள்விக்கு பதில் சொல்வதற்கு ஆகும் நேரத்தை விட, படம் 2-ல் எத்தனை வகை பழங்கள் உள்ளன, ஒவ்வொன்றி லும் எத்தனை உள்ளன எனக் கண்டு பிடித்துச் சொல்வதற்கு ஆகும் நேரம் மிக மிகக் குறைவான தாகவே இருக்கும் இல்லையா என்று கேட்கிறார் ஆசிரியர்.

ஒழுங்கமைக்கப்பட்ட வேலைகளின் பட்டியல்

நம் ஒவ்வொரு வருக்குள்ளும் செயல்திறன் அதிகமிருக்கும் ஒரு நபர் இருக்கவே செய்கிறார். அவரை செயல்படவிடாமல் இருக்கச் செய்ய பல்வேறு தடைகளை நாமே உருவாக்கி வைத்துவிட்டு அவர் செயல்பட மாட் டேன் என்கிறாரே அல்லது செயல்பட முடியவில்லையே என்று கவலையும் படுகிறோம். எப்படி அதிகப்படியான செயல்திறனுடன் செயல்படுவது, கணிணி மயமான இந்த உலகில் செயல்திறனை அதிகரிக்க உதவும் வகையில் இருக்கும் டூல்கள் என்னென்ன என்பனவற்றை யெல்லாம் சொல்லும் ஆசிரியை இவற்றை உபயோகிப்பதன் மூலம் இலக்குகளை அடையத் தேவை யான நேரத்தை சுலபமாக உருவாக்கிக் கொள்ள முடியும் என்கிறார். எது அவசரமோ, அது முக்கிய மான விஷயம். எது முக்கியமோ, அது அவசர மான விஷயம் எனும் பொன்மொழியை மறந்து விடாதீர்கள். நிறுவன இலக்குகளும் தனிநபர் இலக்குகளும் ஒரு மனிதருக்கு இரண்டு கண் களைப் போன்றது என்ற அதன் முக்கியத்துவத்தை அறிந்துகொண்டு செயல் பட்டால் ஒரு முழுமை யான மற்றும் நிறைவான வாழ்க்கையை வாழ முடியும் என்று சொல்லி முடிக்கிறது இந்தப் புத்தகம்.

கவனச்சிதறலில் சிக்கா மல் நம் இலக்கு நோக்கி பயணிப்பது எப்படி எனச் சொல்லும் இந்தப் புத்தகத்தை அவசியம் படிக்கலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism