புதிதாகப் பதவி ஏற்கும் மேனேஜர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் குறித்து 10 கட்டுரைகளைப் பத்து அத்தியாயங்களாகத் தொகுத்து வெளியிடப்பட்டிருக்கும் புத்தகத்தை நாம் இந்த வாரம் பார்க்கப் போகிறோம்.

மேனேஜருக்கு எல்லாம் தெரியும்...

மேனேஜர் என்ற பணி ஆரம்ப காலத்தில் எவ்வளவு கஷ்டமான விஷயம் தெரியுமா? எல்லாவற்றையும் கன்ட்ரோலில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்போம். ஆனால், எதுவும் கன்ட்ரோலில் இருக்காது. குழந்தை பிறந்தவுடனேயே குழந்தை வளர்ப்பு முறை குறித்த அனைத்து விஷயங்களையும் பெற்றோர்கள் நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும் என எல்லோரும் எதிர்பார்ப்பதுபோல, ஒருவர் மேனேஜராகிவிட்டாலே போதும், அவருக்கு நிர்வாகம் குறித்த அனைத்து விஷயங்களும் தெரிய வேண்டும் என நினைக்கிறார்கள்.

ஆனால், ஒருவர் மேனேஜர் ஆவதற்கு முதல் நாள் வரை மேனேஜர் பணி என்றால் என்ன என்றே தெரியாமல் இருப்பார். எத்தனையோ லீடர்ஷிப் குறித்த புத்தகங்கள் இருந்தாலும் முதல்முறையாக மேனேஜர் ஆகும் நபருக்கு உதவும் முக்கியமான விஷயங்களைச் சொல்ல சரியான புத்தகங்கள் எதுவும் இல்லை.

கையில் பவர் இருந்தால் போதுமா..?

மேனேஜராகிவிட்டால் கையில் பவர் கிடைத்துவிடும். அதனால் நினைத்ததைச் செய்யலாம் என்று நினைப்போம். ஆனால், பதவி ஏற்றவுடன்தான் தெரியும், பலருடைய நல்ல உறவு இருந்தால் மட்டுமே நம்முடைய மேனேஜர் பதவியில் நாம் செய்ய வேண்டியவற்றைச் செய்து முடிக்க முடியும் என்பது.

நல்ல உறவைப் பேண நினைத்தால் அதிகாரத் தொனியைக் காட்ட முடியாதல்லவா? மேனேஜர் சீட்டில் அமர்ந்துவிட்டால் கம்பெனியின் சட்டதிட்டப்படி, அதிகாரம் நம் வசம் வந்து சேர்ந்துவிடும் என்று நினைப்போம். ஆனால், நம்முடைய அதிகாரம் என்பது நம்முடன் பணிபுரிபவர்கள், நம்மின்கீழ் பணி புரிபவர்கள் மற்றும் நம்முடைய மேலதிகாரிகள் போன்றவர்களுடன் நாம் கொண்டிருக்கும் நல்லுறவே வழங்குகிறது (அதாவது, நினைத்த விஷயத்தை நிறைவேற்ற பலருடைய அனுசரிப்பு அவசியம் என்பது) என்பதை நாம் பதவியேற்ற பின்னாலேயே புரிந்துகொள்வோம்.

நிர்வாகம் செய்யும்போதுதான்...

‘நானெல்லாம் மேனேஜர் இடத்தில் உட்கார்ந்திருந்தால் இந்தப் பிரச்னை எல்லாம் வரவே விட மாட்டேன்’ என்று சொல்கிறவர்கள், மேனேஜர் பதவிக்கு வந்தபின், இன்னும் மோசமாக நடந்து, பெரும் சிக்கலை ஏற்படுத்துவார்கள். ஏனென்றால் நிர்வாகம் செய்ய கற்றுக்கொள்வது நிர்வாகம் செய்யும் போதுதான் முடியுமே தவிர, பயிற்சி வகுப்பிலோ, கல்லூரி வகுப்பிலோ அமர்ந்து அதுகுறித்து கற்றுக்கொள்ள முடியாது. நேரடி யாகப் பொறுப்பேற்ற பிறகுதான் களத்தில் என்னென்ன சிக்கல்கள் வரும் என்பது நமக்குத் தெரியவரும்.

ஆள்களை நடத்தும் பண்பு...

மேனேஜர்கள் எதிர்கொள்ளும் மற்றுமொரு விஷயம், அவர்களுடைய டீம். புதியதாகப் பணியேற்கும் மேனேஜர் ஒருவர் ஏற்கெனவே அந்தப் பணியில் வேலை செய்து கொண்டிருக்கும் டீம் ஒன்றையே நிர்வகிக்க வேண்டியிருக்கும். ‘என்னுடைய டீமை நானே செதுக்கு செதுக்கு என்று செதுக்கி உருவாக்குவேன்’ என்று மேனேஜராகும் கனவுடன் திரிந்த ஒருவருக்கு இது போன்ற ரெடிமேட் டீம்கள் கையில் கிடைக்கும்போது கொஞ்சம் திக்குமுக்காடித்தான் போவார்கள்.

மேனேஜர் பணி என்பது குழுவை நிர்வகிப்பது. இதற்கு ஆள் தேர்வு செய்யும் போது இந்தப் பண்பைப் பார்க்காமல் தனிமனித சாதனைகளைப் பார்த்து தேர்வுகள் நடக்கின்றன. இதனால் ஒரு புதிய மேனேஜர் பதவி ஏற்று கொஞ்ச காலத்துக்குத் தனி மனித செயல்பாட்டின் வீச்சும், குழுவினருடன் (சுறுசுறுப்பு முதல் சோம்பேறி வரையிலான பலவகைப்பட்ட மனிதர்களைக் கொண்ட) அனுசரித்துப் போதலும் என்ற குழப்பநிலையிலேயே இருப்பார்.

இதில் பாதிப்படையப்போவது என்னவோ, நிறுவனம்தான். நிச்சயமாக இந்தக் குழப்பத்தால் நிறுவனங்களுக்கு சிலகாலம் பாதிப்புகள் இருக்கவே செய்யும். அதிலும் மேல்மட்டத்தில் இருந்து வேலையை முடிக்கச்சொல்லியும் பர்ஃபாமன்ஸ் கேட்டும் தரப்படும் அழுத்தங்கள் புதிய மேனேஜரை அவருடைய இயல்பு குணமான தனிமனித பர்ஃபாமன்ஸ் என்ற சிக்கலுக்கு உள்ளேயே உடனடியாக இழுத்துச் செல்லும். அவரே எல்லா வற்றையும் இழுத்துப்போட்டு முடிக்க முயல்வார். மேலேயிருந்து வரும் அழுத்தம் அதிகரிக்க அதிகரிக்க தன்னுடைய குழுவுக்கு அதிகாரப் பங்களிப்பு என்பதைக் கணிசமாகக் குறைக்க ஆரம்பித்துவிடுவார் புதிய மேனேஜர். இந்த இடத்தில்தான் புதிய மேனேஜருக்கு இது குறித்த டெலிகேஷன் குறித்த பயிற்சி என்பது அவசியமான ஒன்றாகிறது.

எதிர்ப்பாளர்களைச் சமாளிப்பது எப்படி?

புதிய மேனேஜர் எதிர்கொள்ளும் மற்றொரு சிக்கல், அவர் சொல்லும் விஷயங்களை ஒப்புக்கொள்ளச் செய்வது. ஒரு மேனேஜராக ஒருவர் வெற்றி பெற அவர் சொல்வதை மற்றவர்கள் விரும்பிக் கேட்டு நடக்கும் வண்ணமும், அவர் சொல்வதைச் செய்வதா, வேண்டாமா என்று முடிவெடுக்க முடியாமல் தவிப்பவர்களைக் கண்டறிந்து மேனேஜர் சொல்வதைச் செய்வது என்ற முடிவை எடுக்க வைக்கவும், மேனேஜர் சொல்வதைச் செய்ய மாட்டேன் என்று சொல்லும் எதிர்ப்பாளர்களை வாயை மூடவைத்து சொல்வதைச் செய்ய வைக்கவும் தேவையான திறனைக் கொண்டிருக்க வேண்டும். இது நம்மில் சிலருக்கு உடன்பிறந்த குணமாக இருக்கிறது. அப்படி இருந்துவிட்டால் நாம் அதிர்ஷ்டசாலி. அப்படி இல்லாத பட்சத்தில் என்னவாகும்?

ஆரம்ப காலத்தில் எல்லா விஷயங்களிலும் மேலே சொன்ன மூன்று வகை நபர்களிடமுமே ‘நான் பாஸ், நான் சொல்வதை நீ கேட்டே ஆக வேண்டும்’ என்ற தொனியில் செயல்பட ஆரம்பிப் போம். இது எங்கே போய் முடியும் என்றால், நாம் சொல்வதை ஆர்வமாகக் கேட்டு செய்ய நினைப்பவர்கூட ‘என்ன இந்த ஆள் நான் பாஸ்’ என்று தோரணை காட்டுகிறார் கொஞ்சம் எதிர்த்து வைப்போம் என்று நினைத்து எதிர்க்கும் வகை மனிதர்களாக மாறிவிடுவார்கள்.

புதிய மேனேஜராக ஒருவர் புரிந்துகொள்ள வேண்டியது மனிதர்கள் அவர்களை விரும்பு பவர்களை விரும்புவார்கள். உதவிக்கு எதிர்மரியாதையாக உதவியைச் செய்வார்கள். ஒரு குழுவில் ஒரு சிலர் ஒரு விஷயத்தைச் செய்தால் அதை நாமும் செய்யலாமே என்று முயற்சி செய்வார்கள். இந்த வகை குணாதிசயங்கள் மனிதனின் அடிப்படை குணாதிசயமாக இருப்பதால், நான் மேனேஜர் என்று தோரணை காட்டுவதைத் தவிர்த்து இந்தக் குணாதிசயங்களை மதித்து நடந்து அதிக பலனைப் பெறலாம் என்பதை புதிய மேனேஜர்கள் கட்டாய மாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

கோபதாபங்களைக் கையாள்வது எப்படி?

தனிமனிதக் கோபதாபங்களை சரிவரக் கையாள்வதன் அவசியம் பற்றித் தனி அத்தியாயத்தைக் கொண்டுள்ளது இந்தப் புத்தகம். ஒரு நிறுவனத்தில் எந்தப் படிநிலையில் இருந்தாலுமே மேனேஜர் என்பது அந்தந்தப் படிநிலையில் இருக்கும் ஒரு தலைமைப் பதவியே ஆகும். இந்தத் தலைமைப் பதவியில் இருக்கும் நபர் அவருடைய திறமையில் மிகுந்த நம்பகத் தன்மையைக் கொண்டிருக்க வேண்டும்.

‘எனக்கு இந்தப் பதவியில் சிறப்பாகச் செயல்பட முடியுமா என்பது சந்தேகமாக/பயமாக இருக்கிறது’ என்று ஒருவர் பொதுவில் சொல்லிவிட்டால் அவ்வளவுதான். கீழே பணிபுரி பவர்கள் எதிர்பார்க்கும் தன்னம்பிக்கை கொண்ட தலைமை என்ற பண்பை அவர் இழந்து விடுகிறார்.

இந்தப் பண்பு நம்முடைய தலைமைக்கு இல்லை என்று குழுவினர் நினைத்து விட்டால், அதன் பின்னால் குழுவின் பர்ஃபாமன்ஸை அதிகரிக்க படாதபாடு பட வேண்டி யிருக்கும்.

பாஸைப் புரிந்துகொண்டு நடப்பது...

பாஸின் இயல்பைப் புரிந்து நடக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றியும் இந்தப் புத்தகம் விவரிக்கிறது. அதென்ன பாஸைப் புரிந்துநடப்பது? பாஸின் பலம், பலகீனம், இலக்கு, வேலை பார்க்கும் விதம், தேவைகள் போன்றவற்றைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப நாம் வேலை செய்வதுதான் பாஸைப் புரிந்துகொண்டு செயல்படுவது ஆகும்.

அதற்காக இது பாஸை காக்காய் பிடித்தல் என்பதோ, அவருடைய வீக்னெஸ்களை உபயோகித்துக் கொள்வதோ என்று அர்த்தம் செய்து கொள்ளக் கூடாது. ஒரு புரஃபஷனலாக பணியிடத்தில் சரியான விஷயங்களைச் செய்ய இது உதவும் என்ற ரீதியில்தான் பாஸைப் புரிந்துநடப்பது என்பதை நீங்கள் மனதில் கொள்ள வேண்டும்.

அலுவலகத்தில் நெட்வொர்க் செய்து கொள்ள வேண்டியதன் அவசியம், நேரத்தை மேலாண்மை செய்தல், மேனேஜர் லீடராக என்ன செய்ய வேண்டும் என்பன போன்றவை குறித்தும் விளக்கமாகச் சொல்கிறது இந்தப் புத்தகம்.

புதியதாக மேனேஜர் பதவியை ஏற்கப்போகும் நபர்கள், தங்கள் பணியிடத்தில் சூப்பர் மேனேஜராகத் திகழ இந்தப் புத்தகத்தை நிச்சயம் படித்து பல விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம்!

பிட்ஸ்

இந்த ஆண்டில் இதுவரை 16 ஐ.பி.ஓ-க்கள் வெளிவந்து உள்ளன. இதன்மூலம் ரூ.31,000 கோடி முதலீடு திரட்டப்பட்டு உள்ளது. இது கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகம்!