Published:Updated:

மார்க்கெட்டிங் பணியின் அதிரடி சவால்கள், எதிர்கொள்ளும் உத்திகள்! உங்களை வெற்றியாளர் ஆக்கும் புத்தகம்

MBA Books

பிரீமியம் ஸ்டோரி

இன்றைய இளைஞர்களுக்கு மார்க்கெட்டிங் துறை என்பது மிகவும் சிறந்த வருமானம் ஈட்ட வழிவகை செய்யும் துறை. ஆனால், அதிக சவால்கள் நிறைந்த துறையும் கூட. மார்க்கெட்டிங் துறை சார்ந்த நுணுக்கங்கள் குறித்துத் தெரிந்து கொள்ள சந்தையில் கிடைக்கும் பல புத்தகங்களும் மார்க்கெட்டிங் துறையில் நேரடியாகப் பணியில் இருக்கும் நபர்களால் எழுதப்பட்டவை அல்ல. அதனால் அவை பிராக்டிக் கலான புத்தகங்களாக இருப்பதில்லை என இந்தப் புத்தகம் எழுத நேர்ந்ததற் கான காரணத்தைச் சொல்கிறார் ஆசிரியை.

மார்க்கெட்டிங் பணியின் அதிரடி சவால்கள், எதிர்கொள்ளும் உத்திகள்! உங்களை வெற்றியாளர் ஆக்கும் புத்தகம்

மார்க்கெட்டிங் என்பது...

மார்க்கெட்டிங் என்றால் என்ன? நிறுவனங்கள் தயாரிக்கும் பொருள் கள் குறித்து மக்களுக்கு விளக்கிச் சொல்லவும், வாடிக்கையாளர்களின் எண்ணத்தை மாற்றவும், நடவடிக்கை களில் மாறுதல்களைக் கொண்டு வரத்தான் மார்க்கெட்டிங். இந்த மாற்றத்தையும் வளர்ச்சியையும் கொண்டு வர அதீத பலம் பொருந்தியவர்கள் தேவை.

மார்க்கெட்டிங் துறையில் இருப்பவர்கள் சிறப்பாகப் பணிபுரிய நிறுவனங்களின் தயாரிப்புகள்/சேவைகள் குறித்தத் துறைசார்ந்த டெக்னிக்கல் அறிவு என்பது 50% அளவே உதவுகிறது. மார்க்கெட்டிங் செய்பவர் எப்படி அவருடைய செயல்பாடுகளை அமைத்துக் கொண்டு வெற்றி பெற முயல்கிறார் என்பதிலும் (மார்க்கெட்டிங் சார்ந்த டெக்னிக்கல் அறிவு) அவருடைய மனநிலை மற்றும் அவருடைய திறன் மீது அவர் கொண்டிருக்கும் நம்பிக்கை போன்றவை எல்லாமே துறைசார்ந்த டெக்னிக்கல் அறிவைத் தாண்டி வெற்றி பெறத் தேவையான மீதமிருக்கும் 50% விஷயங்களாகும்.

மார்க்கெட்டிங் என்பது ஒரு சப்போர்ட்டிங் பிரிவாக இருந்த நிலை மாறி காலப்போக்கில் விற்று வரவை (turnover) நிர்ணயிக்கும் ஒரு முக்கிய பிரிவாக மாறிவிட்டது என்பதே நிதர்சனமான உண்மை. இதனாலேயே இந்தத் துறையில் இன்றைய மற்றும் எதிர்காலத்தில் வரப்போகிற மாற்றங்கள் குறித்து சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் எப்போதுமே இருந்து வருகிறோம்’’ என்கிறார் ஆசிரியை.

வாடிக்கையாளர்களின் தேவையை உணர்த்துங்கள்...

வேகமாக மாறிவரும் மார்க் கெட்டிங் உலகில் மார்க்கெட்டிங் பணியாளர் என்பவர் (அவர் சீஃப் மார்க்கெட்டிங் ஆபீஸராக இருந் தாலும் சரி, களப்பணியில் இருக்கும் ஆரம்பநிலை மார்க்கெட்டிங் பணியாளராக இருந்தாலும் சரி) ஒரு ஆர்ட்டிஸ்ட் போல கிரியேட்டி விட்டியைப் பயன்படுத்துவதில், ஒரு விஞ்ஞானியைப்போல எக்கச் சக்கமான டேட்டாவை ஆராய்வதில், ஒரு அரசியல்வாதியைப்போல தனது கருத்துக்களைத் தொடர்ந்து உணர்த்துவதில் என மூன்றின் கலவையாகச் செயல்பட வேண்டி யுள்ளது. ஏனென்றால், வாடிக்கை யாளரின் தேவையை அறிந்து அதற்கான தயாரிப்புகளை/சேவைகளை வழங்கி வந்த காலம் மாறி, வாடிக்கையாளருக்கு இது போன்ற தயாரிப்புகள் / சேவைகளை எங்களால் தரமுடியும், இதை உபயோகித்துப் பாருங்கள், நிச்சயம் இது உங்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்று அவர்களின் தேவையை முன்னரே முழுமையாக உணர்ந்து வாடிக்கையாளர்களை உணரவைக்க வேண்டிய கால கட்டத்தில் இன்றைய மார்க்கெட்டிங் பணியாளர்கள் இருக்கின்றனர்.

மார்க்கெட்டிங் பணியின் அதிரடி சவால்கள், எதிர்கொள்ளும் உத்திகள்! உங்களை வெற்றியாளர் ஆக்கும் புத்தகம்

பன்முகத் திறமை வேண்டும்...

மார்க்கெட்டிங் பணியாளர்களுக்கு வெறுமனே சந்தைப்படுத்துதல்தான் வேலை என்ற நிலை முழுவதுமாக மாறி நிறுவனத்தின் நீண்டகால வர்த்தக நோக்கத்தை (business strategy) நிர்ணயிக்கவும், எதிர்காலத் திட்டங்களை வகுக்கவும் உதவ வேண்டிய நிலை இன்றைக்கு உருவாகிவிட்டது. முன்பெல்லாம் மார்க்கெட்டிங் துறைக்கு சம்பந்தம் இல்லாத துறையினர் தயாரிப்புகளை உருவாக்கினர். பின்னர், மார்க் கெட்டிங் பிரிவு இந்தத் தயாரிப்பு களுக்கான கதை, வசனத்தை எழுதி, சந்தைப்படுத்துதலில் ஈடுபட்டு வந்தனர். ஆனால், இன்றைக்கோ பல பொருள்கள் உருவாக்கப்படும் நிலையிலேயே மார்க்கெட்டிங் பணியாளர்களின் பங்களிப்பு இருக்கிற சூழல் நிலவுகிறது.

இன்றைக்கு மார்க்கெட்டிங் பணியாளர்களுக்கு உற்பத்திப் பிரிவில் ஆரம்பித்து வாடிக்கையாளர் சேவை மற்றும் லாப நஷ்டக் கணக்கு வரையிலான ஏரியாக்களிலும் பொறுப்பு உண்டாக்கப் பட்டுவிட்டது. இதனாலேயே மார்க் கெட்டிங் துறையில் பணிபுரிபவர்கள் டெக்னிக்கல் தகுதிகளின் எல்லை விரிவாகிக்கொண்டே போய்விட்டது. மார்க்கெட்டிங் துறையில் நீண்ட அனுபவம் கொண்டவர்களுக்கு இந்த நிலை கொஞ்சம் சிக்கலான சூழலையே உருவாக்குகிறது. ஏனென்றால், அவர் களுடைய கரியர் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் வெறும் மார்க்கெட்டிங் என்பது மட்டுமே அவர்களுடைய பணியாகவும் அதில் சிறப்பாகச் செயல்பட்டால் போதும் என்கிற அளவில் மட்டுமே இருந்தது என்ற சூழலும் நிறுவனத்தினுள் நிலவியிருக்கும்.

பின்னர், கொஞ்சம் கொஞ்சமாக நிறுவனத்தின் பல பிரிவுகள் எப்படிச் செயல்படுகிறது என்பது குறித்த அறிவு தேவைப்படும் சூழல் உருவானபோது ஒரு சிலர் அதை தங்கள் திறனை வளர்க்க உதவும் ஒரு விஷயமாகப் பார்த்தனர். பலர், ‘இதென்ன கொடுமை. நானோ மார்க்கெட்டிங் பிரிவு ஆசாமி. கஷ்டமான மற்றும் எனக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாதவற்றை எல்லாம் நான் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறதே’ என்று வருந்த ஆரம்பித்தனர்.

எதுவானலும் மார்க்கெட்டிங் பணி யாளர்கள் திடீரென அதிகப்படியான வேலைப் பொறுப்புகளை எதிர்கொள்ள ஆரம்பித்துள்ளனர் என்பதுதான் நிஜம். இந்தப் புதிய பொறுப்புகள் அதிக வேலை நேரத்தையும், அதிக வேலைப் பளுவையும், புதிய டெக்னிக்கல் திறமை களையும் கற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்தையும் மார்க்கெட்டிங் பணியாளர்கள் மத்தியில் திணிக்க ஆரம்பித்து விட்டது கசப்பான உண்மை’’ என்கிறார் ஆசிரியை.

செல்ஃப் டெஸ்ட்...

இந்தவித மாற்றங்கள் என்னென்ன என்பதைப் பட்டிய லிட்டு, அவற்றில் மார்க்கெட்டிங் துறையில் பணிபுரிபவர்கள் முன்பு என்னென்ன விஷயங் களைச் செய்துகொண்டிருந்தனர், இப்போது என்னென்ன விஷயங்கள் அவர்களிடமிருந்து எதிர்ப்பார்க்கப்படுகின்றன என்பதைத் தந்திருக்கும் ஆசிரியை இவை அனைத்திலும் உங்களுக்கு இருக்கும் திறனுக்கு மதிப்பெண் களை வழங்கிப் பார்க்கும் நடைமுறையையும் சொல்லி யுள்ளார். மதிப்பெண்களை வழங்கிய பின்னால், அந்த மதிப்பெண்கள் அடிப்படையில் உங்களை நீங்களே கேட்டுக் கொள்ள வேண்டிய பின்வரும் சில கேள்விகளையும் தொகுத்துத் தந்துள்ளார். இதுவரை நான் எந்தவித திறன்களைக் கொண்டு சிறப்பாகச் செயல்பட்டு வந்தேன், இன்றைக்கு என்னுடைய பணிக்குத் தேவைப்படும் திறன்கள் என்னென்ன, இதில் எவற்றையெல்லாம் முயற்சி செய்து பார்க்கலாம், மதிப்பெண்கள் அடிப்படையில் எதிலெல்லாம் நான் ஸ்ட்ராங்காக இருக்கிறேன், எதிலெல்லாம் நான் வீக்காக இருக்கிறேன் என்பது போன்ற கேள்விகளை நீங்கள் கேட்டுக்கொண்டு உங்களை மாற்றிக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும் என்கிறார் ஆசிரியை.

மாற்றங்களுக்கேற்ப மாறுதல்...

எல்லா நிறுவனங்களும் அந்த நிறுவனங்களினுள் செயல்படும் பல்வேறு பிரிவுகளுக்கு மார்க் கெட்டிங் பணியாளர் களிடம் இருந்து ஒரே அளவிலான பங்களிப்பை எதிர்பார்ப்ப தில்லை. ஏனென்றால், ஒவ்வொரு நிறுவனமும் செயல்பாட்டில் தனக்கென ஒவ்வொரு விதமான நோக்குநிலை பாணியை (orientation) அமைத்துக் கொண்டுள்ளது. ஒரு நிறுவனம் தயாரிப்புகளை முன்னிலைப் படுத்தி செயல்படுதல் (product orientation), விற்பனை என்பதை முன்னிலைப்படுத்தி செயல் படுதல் (sales orientation) மற்றும் சந்தைப்படுத்துதலை முன்னி லைப்படுத்தி செயல்படுதல் (marketing orientation) போன்ற மூன்று வகைகளில் செயல் படுகின்றன. இந்த ஒவ்வொரு வகை செயல்பாட்டிலும் நீண்ட நாள் அடிப்படையிலான ஸ்ட்ராட்டஜிகள் வடிவமைக்கப் படும் முறை என்பது பல்வேறு மாறுதல்களைக் கொண்டதாக இருக்கிறது.

இதில் இருக்கும் இன்னொரு சிக்கல், நீங்கள் பணிக்கு சேரும்போது ஒரு நோக்கு நிலை பாணியில் செயல் பட்டுவந்த உங்கள் நிறுவனம் கொஞ்சம் கொஞ்சமாக அதை மாற்றி மற்றொரு நோக்குநிலைக்கு சென்றிருக்கும். இப்படி நிறுவனங்கள் மாறும்போதுபோது ஒரு பணியாளராக உங்களுடைய திறமையும் அந்தந்த பாணிக்கு ஏற்றாற்போல் மாறும் வழிமுறை களையும் சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.

முன்னேற்றத்துக்கான ஸ்ட்ராட்டஜி...

ஒரு மார்க்கெட்டிங் பணியாளராக உங்களுக்கென ஒரு நீண்ட நாள் அடிப்படையிலான ஸ்ட்ராட்டஜியை அமைத்துக்கொள்வது பற்றித் தனி அத்தியாயத்தில் சொல்லியிருக்கிறார். இந்த ஸ்ட்ராட்டஜிகளை ஆண்டுக்கு ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டமாக மாற்றுவது எப்படி, அதற்கான தந்திரங்கள் என்னென்ன என்பதையும் மற்றொரு அத்தியாயம் தெளிவுபடுத்து கிறது. ஒரு மார்க்கெட்டிங் பணியாளராக கமர்ஷியல் செயல்பாட்டுத் திட்டம் ஒன்றை வகுத்துக்கொண்டு அந்தத் திட்டத்தின்படி, எப்படி உங்களை நீங்கள் எடைபோட்டுப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதையும் விளக்கமாகச் சொல்கிறது இந்தப் புத்தகம்.

‘‘மார்க்கெட்டிங் பணியாளராக நீங்கள் தான் உங்களுடைய பிராண்டையும் நிறுவனத்தையும் மக்களிடத்தில் கொண்டு சேர்க்கிறீர்கள் என்பதில் பெருமைப்படுங்கள். ஏனென்றால், ஒரு நிறுவனத் தின் வெற்றிக்கு இந்த இரண்டும் மிக மிக அவசியம். இவை அனைததையும் சரியாகப் புரிந்துகொண்டு உங்களுடைய சக்தியை முழுமையாக உபயோகித்து செயல்பட்டு, உங்கள் கரியரில் வெற்றி பெற்றீர்கள் எனில், சந்தோஷம் மிக்க மனிதராக நீங்கள் வலம் வருவீர்கள்’’ என்று முடிக்கிறார் ஆசிரியை.

மார்க்கெட்டிங் பிரிவில் ஏற்பட்டுவரும் மாறுதல் களைப் புரிந்துகொண்டு வெற்றியடைய நினைப் பவர்கள் இந்தப் புத்தகத்தை அவசியம் ஒருமுறை படிக்கலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு