Published:Updated:

பிசினஸ் 2020: சாதித்த முகேஷ் அம்பானி... மோதிய டாடா - மிஸ்திரி!

முகேஷ் அம்பானி, ரத்தன் டாடா, சைரஸ் மிஸ்திரி
பிரீமியம் ஸ்டோரி
News
முகேஷ் அம்பானி, ரத்தன் டாடா, சைரஸ் மிஸ்திரி

கரூர் எல்.வி.பி-யை வாங்கிய சிங்கப்பூர் டி.சி.பி!

BUSINESS 2020

தொழில் துறையினருக்கு 2020-ம் ஆண்டு மறக்க முடியாத ஆண்டு. தொழில்களின் போக்கு, வாடிக்கையாளர்களின் மனநிலை, வீட்டிலிருந்தே வேலை எனப் பல மாறுதல்கள் இருந்தன. சில தொழில் களுக்குத் தேவையே இல்லாமல் போனது. சில தொழில்களுக்குக் கூடுதல் தேவை உருவானது. 2020-ம் ஆண்டு தொழில் துறையில் நடந்த முக்கியமான மாற்றங்களைப் பார்ப்போம்.

வீட்டிலிருந்து வேலை...

வீட்டிலிருந்து வேலை என்பதெல்லாம் சில ஐ.டி நிறுவனங்களுக்கு மட்டும் என்றிருந்த நிலையை அடியோடு மாற்றியது கோவிட்-19. அலுவலகம் என்பது குறைந்த பணியாளர்களுக்கு மட்டும் இருந்தால் போதும் என்னும் சூழல் உருவாகி யிருக்கிறது. சில ஐ.டி நிறுவனங்களும் ஆன்லைன் சேவை தரும் நிறுவனங் களும் 2021-ம் ஆண்டு பாதி வரையில் வீட்டிலிருந்து வேலை என்பதைப் பணியாளர்களுக்குத் தெரிவித்து விட்டன. சென்னையிலும்கூட இன்னும் சில மாதங்களுக்கு வீட்டிலிருந்தே வேலை என்பதைப் பல நிறுவனங்கள் அறிவித்துவிட்டன.இதனால் வர்த்தக ரீதியிலான ரியல் எஸ்டேட் கடுமையாகப் பாதிக்கப் பட்டிருக்கிறது. தவிர, சென்னையில் உள்ள பணியாளர்கள் தங்களது சொந்த ஊர்களிலிருந்து வேலை செய்வதால், பல பகுதிகள் டுலெட் பலகைகளைப் பார்க்க முடிகிறது.

முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானி

ரிலையன்ஸ்

கடந்த மார்ச் மாதத்தில் கடுமையாகச் சரிந்த பங்குச் சந்தை மீண்டும் உயர்வதற்கு பல காரணங்கள் இருந்தன. இதில் ரிலையன்ஸின் பங்கும் கணிசமானது. ஏப்ரல், மே மாதங்கள் இந்த நிறுவனம் திரட்டிய முதலீடு தொடர்பான தகவல்களை வெளியிடத் தொடங்கியது. ஜியோ நிறுவனத்தின் 33% பங்குகளை விற்று ரூ.1.52 லட்சம் கோடி அளவுக்கு நிதி திரட்டியது. கூகுள் உள்ளிட்ட 13 சர்வதேச முதலீட்டாளர்கள் ஜியோவில் முதலீடு செய்தார்கள். உலகமே முடங்கிக் கிடந்தபோது இத்தனை பெரிய முதலீட்டைத் திரட்டிய முகேஷைப் பார்த்து அனைவரும் ஆச்சர்யப்பட்டனர்.

ஜியோ பங்குகள் விற்பனையைத் தொடர்ந்து, ரீடெய்ல் நிறுவனத்தின் பங்குகளையும் விற்கத் தொடங்கினார் முகேஷ். ரீடெய்ல் நிறுவனத்தின் 10% பங்குகளை விற்பனை செய்ததன் மூலம் ரூ.47,000 கோடி அளவுக்கு நிதி திரட்டியது.

ரத்தன் டாடா
ரத்தன் டாடா

தவிர, சில ஸ்டார்ட்அப் நிறுவனங் களிலும் ரிலையன்ஸ் முதலீடு செய்தது. ஆகஸ்ட் மாதம் ஆன்லைன் பார்மஸி நிறுவனமான நெட் மெட்ஸின் பெரும்பான்மையான பங்குகளை வாங்கியது. நவம்பரில் அர்பன் லேடர் நிறுவனத்தின் பெரும் பான்மையான பங்குகளையும் ரிலையன்ஸ் வாங்கியது.

ஃப்யூச்சர் குழுமத்தின் ரீடெய்ல் பிரிவை வாங்கியது. ஆனால், ஃப்யூச்சர் குழுமத்தில் அமேசான் நிறுவனம் முதலீடு செய்திருந்ததால், இந்த முதலீட்டை எதிர்த்து வழக்கு தொடுத்தது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. இருந்தாலும் ரூ.15 லட்சம் கோடி சந்தை மதிப்பைத் தொட்ட முதல் நிறுவனமாக ரிலையன்ஸ் திகழ்கிறது.

லக்ஷ்மி விலாஸ் பேங்க் அலைஸ் டி.பி.எஸ்

96 ஆண்டுக்கால லக்ஷ்மி விலாஸ் வங்கி இந்த ஆண்டு தன்னுடைய அடையாளத்தை இழந்தது. சிங்கப்பூர் வங்கியான டி.பி.எஸ் வங்கியுடன் கரூரைச் சேர்ந்த லக்ஷ்மி விலாஸ் வங்கி இணைக்கப்பட்டது. சுமார் ரூ.2,500 கோடி முதலீடு செய்வதாக இருந்தாலும், இந்த வங்கியின் பங்குகள் மற்றும் அனைத்து சொத்துகளும் ‘ரைட் ஆப்’ செய்யப் பட்டன.

சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வாராக்கடன் அதிகரிக்கத் தொடங் கியது. இதனால் வங்கியை வேறு வங்கியுடன் இணைக்கும் நடவடிக்கை தொடங்கியது. ஆனால், சில முயற்சிகள் வெற்றிபெறவில்லை. சில முயற்சிகளுக்கு ரிசர்வ் வங்கியின் அனுமதி கிடைக்கவில்லை. இறுதியில் வாடிக்கையாளர்களுக்குச் சில கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டு, டி.பி.எஸ் வங்கி யுடன் இணைக்கப்பட்டது. டெபாசிட் தாரர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை யென்றாலும், இந்தப் பங்குகளில் முதலீடு செய்தவர்கள் மிகப்பெரிய நஷ்டத்தைச் சந்தித்தார்கள்.

சைரஸ் மிஸ்திரி
சைரஸ் மிஸ்திரி

ஆதித்ய பூரி போனார், பிரச்னை வந்தது...

ஆதித்ய பூரி வங்கி தொடங்கியதிலிருந்து ஓய்வு பெறும்வரை தலைமைச் செயல் அதிகாரியாக இருந்தார். கடந்த அக்டோபரில் 70 வயது பூர்த்தியடைவதை அடுத்து வங்கியில் இருந்து ஓய்வு பெற்றார். இந்தியாவில் வங்கிகள் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்கு ஒரு பென்ச்மார்க் அமைத்தார்.

ஆனால், அவர் வெளியேறிய அடுத்த சில வாரங்களில் ஹெச்.டி.எஃப்.சி வங்கி புதிய கிரெடிட் கார்டு விற்பனையில் இறங்கக் கூடாது என ரிசர்வ் வங்கி தடை விதித்தது. தொழில்நுட்பக் கோளாறுகளை சரிசெய்வதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி தெரிவித்திருக் கிறது. இனி இந்த வங்கியில் நடக்கும் ஒவ்வொரு விஷயமும் ஆதித்ய பூரியுடன் ஒப்பிட்டே அலசப்படும்.

யுனிகார்ன் கிளப்

ஊரடங்கு காரணமாக ஒரு சில ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் செயல்பட முடியவில்லை என்றாலும், அசாதாரண வளர்ச்சி பெற்றன. இந்த ஆண்டு பல ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் யுனிகார்ன் கிளப்பில் இணைந்தன. இந்த ஆண்டு 11 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் யுனிகார்ன் பட்டியலில் இணைந்திருக்கின்றன. அக் அகாடமி, போஸ்ட்மேன், ஃபர்ஸ்ட் க்ரை, ஜெரோதா, கார்ஸ் 24, ராசர்பே, நய்கா, பைன்லேப்ஸ், டெய்லிஹண்ட், க்ளான்ஸ், ஜெனோடி உள்ளிட்ட 11 நிறுவனங்களின் சந்தை மதிப்பு 100 கோடி டாலர் என்னும் அளவைத் தாண்டும் என்று மதிப்பிடப்படுகிறது. தவிர, பல ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு முதலீடும் கிடைத்திருக்கிறது.

யெஸ் பேங்க் மீதான கட்டுப்பாடுகள்...

யெஸ் வங்கியிலும் நிதிக் கட்டுப்பாடுகளைக் கடந்த மார்ச் மாதம் ரிசர்வ் வங்கி அறிவித்தது. எஸ்.பி.ஐ உள்ளிட்ட வங்கிகள் இந்த வங்கியில் முதலீடு செய்ய முன் வந்தன. அதனால் இந்த வங்கியின் பங்குதாரர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. ஆனால், பங்குகளில் 75% பங்குகளை மூன்று ஆண்டுகளுக்கு விற்க முடியாது என்று தடை விதிக்கப்பட்டது.

சீன நிறுவனங்களுக்குத் தடை...

இந்தியா - சீனா இடையே நடக்கும் எல்லைப் பிரச்னையின் காரணமாக சீன நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டுமெனில் அரசின் அனுமதி பெற்றே வழங்கப்பட வேண்டும் எனப் புதிய நடை முறை கொண்டுவரப்பட்டுள்ளது. சில முதலீடுகளுக்கு அனுமதி வழங்கப்படாமலே இருக்கிறது. எனினும், கடந்த ஏப்ரல் முதல் டிசம்பர் வரை 120 திட்டங்கள் மூலம் ரூ.12,000 கோடி முதலீடு சீனாவிலிருந்து அனுமதிக்கப் பட்டுள்ளது.

டாடா Vs மிஸ்திரி

கடந்த நான்கு ஆண்டுகளாக முடிவுக்கு வராத டாடா சைரஸ் மிஸ்திரியின் வழக்கு இந்த ஆண்டும் தொடர்ந்தது. டாடா குழுமத்திலிருந்து வெளியேற மிஸ்திரி முடிவெடுத்தாலும் பங்குகளின் சந்தை மதிப்பில் சிக்கல் இருக்கிறது. இதேபோல, ஹிந்துஜா குழுமத்தின் சகோதரர் களிடம் குடும்ப பிரச்னை ஏற்பட்டது. ஆனால், தமிழகத்தைச் சேர்ந்த டி.வி.எஸ் குழுமத்தில் நிறுவனங்கள் பிரிப்பு சுமுகமாக முடிந்திருக்கிறது!

பிட்ஸ்

டந்த டிசம்பர் 21-ம் தேதி வரை 3.75 கோடி வரிதாரர்கள் தங்கள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்திருக் கிறார்கள். ‘இதுவரை வரித் தாக்கல் செய்ய வில்லையா? உடனே செய்யுங்கள்’ என வருமான வரித் துறை ட்விட்டரில் செய்தி வெளியிட்டு உள்ளது!