தங்கத்துக்கு இனி இவே பில்..!

ஜி.எஸ்.டி நடைமுறைக்கு வந்தபின்பு தங்கத்துக்கும் ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படுகிறது. பொதுவாக, 50,000 ரூபாய்க்கும் அதிக மதிப்பு கொண்ட பொருள்களுக்கு இவே பில் முறை பின்பற்றப்பட வேண்டும். அப்போதுதான் அந்தப் பொருள் எந்த மாநிலத்திலிருந்து எந்த மாநிலத்துக்குச் செல்கிறது என்று கண்டுபிடிக்க முடியும். இந்த இவே பில் முறை தங்கத்துக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. இப்போது, சில மாநில அரசுகளின் வரி வருமானம் குறைவதால், தங்கத்துக்கும் இவே பில் முறை கொண்டுவரப் பட வேண்டும் என கேரளா உட்பட சில மாநிலங்கள் கோரிக்கை வைக்கத் தொடங்கியிருக்கின்றன. ஆனால், பா.ஜ.க ஆளும் குஜராத் போன்ற மாநிலங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தற்போது இதுபற்றி அமைச்சர்கள் குழு விவாதிக்கத் தொடங்கியிருப்பதால், கூடிய விரைவில் தங்கத்துக்கும் இவே பில் வரலாம்!

தங்கம் விலை எப்போது குறையும் என்பதுதான் மக்களின் கவலை!

வோல்வோ பஸ் பிசினஸை வாங்கியது எய்ச்சர்!

உலகப் புகழ்ப்பெற்ற பஸ் தயாரிப்பு நிறுவனம் வோல்வோ. இந்த நிறுவனத்தின் பஸ்களே பணக்கார மேலைநாடுகளில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இந்த நிறுவனம் இந்தியாவில் பஸ்களைத் தயாரிக்க பெங்களூருக்குப் பக்கத்தில் ஒரு பெரிய தொழிற்சாலை அமைத்திருந்தது. இந்த நிலையில், கனரக வாகனம் மற்றும் இரு சக்கர வாகனத் தயாரிப்பில் புகழ்பெற்ற நிறுவனமான எய்ச்சர் நிறுவனம், வோல்வோ நிறுவனத்தின் இந்தியாவில் கார் தயாரிக்கும் பிசினஸை ரூ.100 கோடி தந்து வாங்கியிருக்கிறது. வோல்வோ இந்தியா நிறுவனத்துக்குக் கடன் எதுவும் இல்லை. தவிர, கடந்த ஆண்டில் இந்த நிறுவனம் ரூ.270 கோடிக்கு பிசினஸும் செய்துள்ளது முக்கியமான விஷயமாகும்.

#வோல்வோவின் உதவியுடன் இனி எய்ச்சரும் பஸ் தயாரிப்பில் கலக்கட்டும்!

ஆன்லைன் சர்வீஸ்... முதல் மரியாதை இந்தியாவுக்கே!

உலக அளவிலான டெக்னாலஜி நிறுவனங்கள் புதிதாக அறிமுகப்படுத்தும் சேவைகளை முதலில் இந்தியாவில் அறிமுகம் செய்து, சோதித்துப் பார்க்கும் களமாக இந்தியா மாறியிருக்கிறது. கூகுள் நிறுவனம் சமீபத்தில் ‘பீப்பிள்ஸ் கார்ட்’ என்ற சேவையை முதன்முதலாக இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கிறது. இந்தச் சேவையைப் பயன்படுத்துபவர்கள் தங்களைப் பற்றி முழுத் தகவல்களையும் புகைப்படத்துடன் இதில் பதிவேற்றம் செய்துகொள்ளலாம். சமீபத்தில் இன்ஸ்டாகிராம் ‘ரீல்’ என்ற பெயரில் சிறிய வீடியோக்களை அளிக்கும் சேவையைத் தொடங்கியது. இதுவும் இந்தியாவில்தான் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது!

உலகச் சந்தையின் நுழைவாயில் இனி இந்தியாதான்!

குறைந்த வாடகை.... சென்னைக்கு மூன்றாம் இடம்!

உலக அளவில் குறைவான வாடகைகொண்ட நகரங்களின் பட்டியலை வெளியிட்டிருக்கிறது ‘ப்யூர்லி டைமண்ட்’ என்ற நிறுவனம். இந்த நிறுவனம் அளித்திருக்கும் பட்டியலில் முதலிடத்தில் ஹோசிமுன் நகரமும், இரண்டாம் இடத்தில் டெல்லியும், மூன்றாம் இடத்தில் சென்னையும் இருக்கிறது. சென்னையில் மாத வாடகை சராசரியாக ரூ.37,394 என்கிற அளவில் இருக்கிறது. ஆனால், ஹோசிமின் நகரத்தில் ரூ.33,825-ஆகவும், டெல்லியில் ரூ.34,854 -ஆகவும் மாத வாடகை இருக்கிறது.மிக அதிகமான வாடகை வசூலிக்கப்படும் நகரங்களில் முதலிடத்தில் நியூயார்க் (மாத வாடகை ரூ.4,69,149), இரண்டாம் இடத்தில் லாஸ் ஏஞ்சல்ஸும் (மாத வாடகை ரூ.3,73,946), மூன்றாம் இடத்தில் வெனிஸும் (மாத வாடகை ரூ.3,29,763) வசூலிக்கப்படுகிறது.

சென்னையில் குறைந்த வாடகையா..?!

பைஜு ரவீந்திரன் இனி பில்லியனர்!

ஆன்லைன் மூலம் கல்வி தரும் ஸ்டார்ட்அப் நிறுவனமான பைஜுவின் வருமானம் அடுத்த ஆண்டில் ஒரு பில்லியன் டாலர் வருமானத்தை எட்டப்போகிறது. இதனால் பில்லியனர் பட்டியலில் இன்னும் சில ஆண்டுகளில் இடம்பிடிக்கவிருக்கிறார் இதன் சி.இ.ஓ-வான ரவீந்திரன். இந்த ஆண்டில் இதுவரை ரூ.2,800 கோடி வருமானம் ஈட்டியிருக்கிறது இந்த நிறுவனம். இது, கடந்த ஆண்டைவிட 100% அதிகம். கோவிட்-19 காரணமாக ஆன்லைன் மூலம் கல்வி கற்கும் வழக்கம் நாடு முழுக்க அதிகரித்து வருவதால், பைஜுவின் வருமானமும் ஏகமாக உயர்ந்திருக்கிறது.

கலக்குங்க ரவி..!

பங்குகளைப் பிரித்தார் டெஸ்லாவின் எலான் மஸ்க்!

ஒரு நிறுவனத்தின் பங்கு விலை மிக அதிகமாக உயரும்போது அந்தப் பங்கை இரண்டாகவோ, அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையிலோ பிரிப்பது வழக்கம். அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனத்தின் பங்கு விலை 1,440 என்ற அளவில் வர்த்தகமாவதால், அந்தப் பங்கைப் பலராலும் வாங்க முடிவதில்லை. இதனால் இந்தப் பங்கை 1-க்கு 5-ஆக உடைத்திருக்கிறார் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க். வருகிற ஆகஸ்ட் 21-ம் தேதி டெஸ்லா நிறுவனத்தின் ஒரு பங்கை வைத்திருந்தால், நான்கு பங்குகள் இலவசமாகக் கிடைக்குமாம். சமீபத்தில் ஆப்பில் நிறுவனம் 1-4 என்ற அளவில் பங்குகளைப் பிரித்ததைத் தொடர்ந்து டெஸ்லாவின் பங்கையும் பிரித்திருக்கிறார் எலான்.

பலே ஐடியாதான்!