கொரோனாவுக்கு மருந்து... பதஞ்சலிக்குத் தடை!

உடல்நலத்துக்கு உதவும் மற்றும் நொறுக்குத்தீனி வகைகளுக்கான பொருள்களைத் தயாரித்து கடந்த ஐந்தாண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சிகண்ட பதஞ்சலி நிறுவனம், கொரோனாவுக்கு இரண்டு வகை மருந்துகளைத் தயாரித்து வெளியிட்டிருக்கிறது. ஆயுர்வேத அடிப்படையில் தயார் செய்யப்பட்ட இந்த மருந்துகளுக்கு மத்திய அரசின் ஆயூஷ் அமைச்சகம் ஒப்புதல் அளிக்க மறுத்திருக்கிறது. `இந்த மருந்துகள் எந்தெந்தப் பொருள்களைக் கொண்டு உருவாக்கப்பட்டவை, இவற்றால் கொரோனாநோய் எப்படி குணமாகும்?’ என்று பதஞ்சலி நிறுவனத்திடம் விளக்கம் கேட்டிருக்கிறது ஆயூஷ் அமைச்சகம். ஆனால், இந்த மருந்தை டெல்லி, மீரட், அகமதாபாத் நகரங்களில் தந்து சோதித்துப் பார்த்த பிறகே வெளியிட்டிருப்பதாகச் சொல்கிறது பதஞ்சலி. இந்த நிலையில், பீகார் மாநிலத்தில் பாபா ராம்தேவ்மீது எஃப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளது.

கொரோனா மருந்தில் பதஞ்சலி தேறிவருமா?

கோவிட்-19 உதவி... நீட்டாவுக்குப் பெருமை!

உலக அளவில் கொரோனாநோய்க்காக உதவி செய்தவர்களின் பெயர்ப் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. `டவுன் அண்ட் கன்ட்ரி’ என்ற அமைப்பு வெளியிட்டுள்ள இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்தியர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் மனைவி நீட்டா அம்பானிதான். நம்பிக்கைதரும் நடவடிக்கைகளுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. டிம் குக் (Tim Cook), ஓபரா வின்ஃப்ரே, லியானார்டோ டி கேப்ரியோ ஆகியோரின் பெயர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

அசத்தும் அம்பானி குடும்பம்!

கூகுள் பே... மோதவரும் வாட்ஸ்அப் பே!

இன்றைய தேதியில் செல்போன் மூலமான ஆன்லைன் பணப் பரிவர்த்தனை செய்வதற்குப் பல நிறுவனங்கள் உதவுகின்றன. இவற்றில் கூகுள் பேதான் முதலிடத்தில் இருக்கிறது. இந்திய ஆன்லைன் பணப் பரிவர்த்தனையில் 38.4% கூகுள் பே மூலம் நடந்திருக்கிறது. போன் பே மூலம் 19.8% பரிவர்த்தனை நடந்திருக்கிறது. அமேசான் பே மூலம் 16 சதவிகிதமும், பேடிஎம் மூலம் 15.1 சதவிகிதமும், வாட்ஸ்அப் பே மூலம் 10.7 சதவிகிதமும் நடந்துள்ளது. தற்போது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் வாட்ஸ்அப் நிறுவனமும் கூட்டணி அமைத்திருப்பதால், கூடிய விரைவில் ஜியோ மூலம் வாட்ஸ்அப் பே நம் நாட்டில் செயல்படத் தொடங்கும். அப்படித் தொடங்கினால், கூகுள் பே-யின் பங்களிப்பு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சபாஷ், சரியான போட்டிதான்!

ஊரடங்கு பாதிப்பு... கம்பெனிகள் தொடங்குவது குறைந்தது!

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தொடங்கப்பட்ட புதிய கம்பெனிகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்திருக்கிறது. காரணம், கொரோனா காரணமாக வந்த ஊரடங்கால் ஏற்பட்ட பாதிப்பு. கடந்த ஆண்டு மார்ச்சில் மொத்தம் 10,570 கம்பெனிகள் பதிவு செய்யப்பட்டன. ஆனால், இந்த ஆண்டு 5,789 கம்பெனிகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. இதேபோல, கடந்த ஆண்டு ஏப்ரலில் மொத்தம் 10,383 கம்பெனிகள் தொடங்கப்பட்டன. ஆனால், கடந்த ஏப்ரலில் 3,209 கம்பெனிகளே தொடங்கப்பட்டுள்ளன. கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள கம்பெனிகள் குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. என்றாலும், `இரு மாதங்களில் 10,000 புதிய கம்பெனிகள் தொடங்கப்பட்டிருக்கலாம்’ என்கிறார்கள். ஏற்கெனவே பொருளாதாரம் மந்தநிலையில் இருந்ததால், புதிய கம்பெனிகள் தொடங்கப்படுவது குறைந்தது, இப்போது கொரோனாவும் சேர்ந்துவிட்டது.

இப்போது கம்பெனி தொடங்கினால், நல்ல எதிர்காலம் உண்டு என்பது நிச்சயம்!

சைபர் அட்டாக்... சென்னைக்கு முதலிடம்!

ஆன்லைன் மூலம் தாக்குதல் நடத்துவது இந்தியாவிலேயே மிக அதிகமாக சென்னையில்தான் நடந்திருக்கிறது. கடந்த நிதியாண்டின் நான்காம் காலாண்டில் நம் நாட்டில் நடந்த சைபர் அட்டாக்குகளில் 42% சென்னையைக் குறிவைத்து நடந்திருக்கிறது. ஒடிசா தலைநகர் பாட்னாவில் 38 சதவிகிதமும், ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நகரங்களில் தலா 35 சதவிகிதமும் சைபர் அட்டாக் குற்றங்கள் நடந்துள்ளன. சிறிய நிறுவனங்களைத் தாக்கி, அவர்களிடமிருக்கும் தகவல்களை நாசம் செய்துவிட்டு, பிறகு அவர்களிடமே இது மாதிரி நடக்காமல் இருக்கும் சாஃப்ட்வேர்களை விற்பதை சைபர் அட்டாக் செய்யும் மோசடி நிறுவனங்கள் பழக்கமாக்கிக்கொண்டு வருவதாகச் சொல்கிறது கே7 கம்ப்யூட்டிங் நிறுவனம். கோவிட்-19 என்ற பெயரில் இனி சைபர் அட்டாக்குகள் நடக்க வாய்ப்பிருப்பதாகவும் அந்த நிறுவனம் எச்சரித்திருக்கிறது.

நிறுவனங்கள் உஷார்!

சீனப் பொருள்களுக்குத் தடை... நமக்கு நன்மை கிடைக்காது!

`சீனாவில் தயாராகும் பொருள்களை வாங்கக் கூடாது’ என்ற கோஷத்தை பா.ஜ.க.வினர் எழுப்பிவரும் வேளையில், ‘‘இப்படிச் செய்வதால் நம் நாட்டுக்கு எந்த நன்மையும் கிடைக்காது’’ என்று சொல்லியிருக்கிறார் பிரதமர் மோடியின் முதன்மைப் பொருளாதார ஆலோசகரான கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன். ‘‘நம் நாட்டிலேயே அதிகமான பொருள்களை உற்பத்தி செய்ய வேண்டும். ஆனால், மற்ற நாடுகளை நாம் ஒதுக்கிவைக்கும்பட்சத்தில் நமக்கு எந்த நன்மையும் கிடைக்காது. எனினும், நம் எல்லைப் பகுதியில் நமக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நாடுகளுடன் நாம் வர்த்தக உறவைத் தொடர வேண்டும் என்று சொல்ல மாட்டேன்’’ என்று கூறியிருக்கிறார் அவர்.

நம் நாட்டில் எல்லாப் பொருள்களையும் தயாரிக்க மத்திய அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?