Published:Updated:

நாணயம் பிட்ஸ்...

நாணயம் பிட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
நாணயம் பிட்ஸ்

கடந்த இரு மாதங்களாக ஊரடங்கால் நம் நாட்டில் 12 கோடிப் பேருக்கும் அதிகமானவர்கள் வேலையை இழந்தனர். ஆனால், கடந்த மாதம் முதல் ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டதால், மீண்டும் பலருக்குப் புதிதாக வேலை கிடைக்கத் தொடங்கியிருக்கிறது.

நாணயம் பிட்ஸ்...

கடந்த இரு மாதங்களாக ஊரடங்கால் நம் நாட்டில் 12 கோடிப் பேருக்கும் அதிகமானவர்கள் வேலையை இழந்தனர். ஆனால், கடந்த மாதம் முதல் ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டதால், மீண்டும் பலருக்குப் புதிதாக வேலை கிடைக்கத் தொடங்கியிருக்கிறது.

Published:Updated:
நாணயம் பிட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
நாணயம் பிட்ஸ்

டேர்ம் இன்ஷூரன்ஸைத் தேடிச் செல்லும் மில்லினியல்கள்!

நாணயம் பிட்ஸ்...

லகிலேயே மிக அதிக அளவில் இளம் வயதினர் இருப்பது நம் நாட்டில்தான். `ஆயுள் காப்பீடுத் திட்டங்கள் தொடர்பாக மில்லினியல்களின் அணுகுமுறை எப்படி..?’ என்று ஒரு சர்வே நடத்தியது மேக்ஸ் லைஃப் இந்தியா நிறுவனம். கடந்த 12 மாத காலத்தில் டேர்ம் இன்ஷூரன்ஸ் குறித்த விழிப்புணர்வு மில்லினியல்கள் மத்தியில் 45 சதவிகிதத்திலிருந்து 56 சதவிகிதமாகவும், டேர்ம் பாலிசி எடுப்பது 19 சதவிகிதத்திலிருந்து 27 சதவிகிதமாகவும் அதிகரித்திருக்கிறது. பெருநகரங்களில் வாழும் மில்லினியல்களில் 60% பேர் தங்கள் எதிர்காலத்துக்காகப் போதுமான அளவு சேமிக்க முடியவில்லை எனக் கவலைப்படுகின்றனர். காப்பீடு தொடர்பான தகவல்களைத் தேட ஆன்லைன் ஊடகத்தை 33% மில்லினியல்கள் பயன்படுத்துகிறார்கள்.

#சபாஷ் மில்லினியல்கள்..!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஊரடங்கு காலத்தில் கூகுள் தந்த 1,000 டாலர்!

நாணயம் பிட்ஸ்...

ரடங்கு காலத்தில் அமெரிக்காவில் தனது பணியாளர்கள் அனைவரையும் ‘ரிமோட் வொர்க்கிங்’ செட்டப்புக்கு மாற்றியது கூகுள். அலுவலகத்தில் மின்சாரம் பயன்படுத்தாதது, உணவகங்கள் செயல்படாமல் போனது எனப் பல வகைகளிலும் கூகுள் நிறுவனத்துக்குக் குறிப்பிட்ட அளவு பணம் மிச்சமானது. இதைப் பணியாளர்களுக்கே தர நினைத்த கூகுள், பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் 1,000 டாலர் தந்தது. அது பணமாகத் தரப்படவில்லை. பணியாளர்கள் விரும்பும் பொருள்கள் எதுவாக இருந்தாலும் இந்தப் பணத்திலிருந்து வாங்கிக்கொள்ளலாம் என்று சொல்ல, பணியாளர்கள் பல பொருள்களைத் தெம்பாக வாங்கியிருக்கிறார்கள்.

#கூகுள் கவனிப்பே தனி..!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

புதிதாக உருவான 2.1 கோடி வேலை..!

நாணயம் பிட்ஸ்...

டந்த இரு மாதங்களாக ஊரடங்கால் நம் நாட்டில் 12 கோடிப் பேருக்கும் அதிகமானவர்கள் வேலையை இழந்தனர். ஆனால், கடந்த மாதம் முதல் ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டதால், மீண்டும் பலருக்குப் புதிதாக வேலை கிடைக்கத் தொடங்கியிருக்கிறது. கடந்த மாதம் மட்டும் புதிதாக 2.1 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாகின. என்றாலும், வேலைவாய்ப்பின்மைக்கான விகிதம் இன்னும்கூட அதிகமாக அதாவது, 23.5% என்ற அளவிலேயே இருக்கிறது. இதனால் 10 கோடிக்கும் மேற்பட்டவர்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். என்றாலும், `25-29 வயதுக்கு உட்பட்டவர்கள் சம்பாதிக்கத் தொடங்குவது போன்ற வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படாமலேயே இருக்கின்றன’ என்று சொல்லியிருக்கிறது வேலைவாய்ப்பு தொடர்பான மத்திய அரசு அமைப்பு!

#டெல்லி மகாராஜாக்கள் என்னதான் செய்துகொண்டிருக்கிறார்களோ!

வேலை இழந்தவர்களுக்கும் பங்கு தந்த ரிதேஷ் அகர்வால்!

நாணயம் பிட்ஸ்...

கொரோனா காரணமாக உலக அளவில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட துறை ஹாஸ்பிட்டாலிட்டி. இந்தத் துறை நிறுவனமான ஒயோ கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் செயல்படவில்லை. வருமானம் குறைந்ததால், சம்பளக் குறைப்பு, வேலை நீக்க நடவடிக்கைகளை எடுத்தது. ஆனால், வேலை நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு அளிக்கப்பட்ட ஈசாப் (ESOP) பங்குகளை திரும்பப் பெறாமல், அவர்களுக்கே தந்திருக்கிறார் ஒயோவின் சி.இ.ஓ ரிதேஷ். இதன் மதிப்பு சுமார் ரூ.130 கோடி. `வேலை நீக்கம் செய்யப்பட்டவர்கள் வேறு வேலைக்குச் சேரலாம். என்றாலும், அவர்கள் ஓயோவின் பங்குதாரர்களாகவே இருப்பார்கள் என்று சொல்லியிருக்கிறார் ரிதேஷ்.

#வித்தியாசமான அறிவிப்பைத்தான் வெளியிட்டிருக்கிறார் ரிதேஷ்..!

85% வரை குறைந்த கார் விற்பனை!

நாணயம் பிட்ஸ்...

டந்த மே மாதம் முழுக்க ஊரடங்கு நடைமுறையில் இருந்ததால், கார் விற்பனை கடுமையாகக் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் 1,21,018 கார்களை விற்பனை செய்த மாருதி, இந்த ஆண்டு மே மாதத்தில் 13,865 கார்களையே விற்றிருக்கிறது. கடந்த ஆண்டு மே-யில் 42,502 கார்களை விற்ற ஹூண்டாய், இந்த ஆண்டு மே-யில் 6,883 கார்களை விற்றிருக்கிறது. கடந்த ஆண்டு மே மாதம் 20,608 கார்களை விற்ற மஹிந்திரா, இந்த ஆண்டு மே-யில் 3,867 கார்களையும், கடந்த ஆண்டு மே-யில் 12,138 கார்களை விற்ற டொயோட்டா இந்த ஆண்டு மே-யில் 1,639 கார்களையும் விற்றிருக்கின்றன.

#பொருளாதாரம் நசிந்திருக்கும் இந்த நேரத்தில் கார் வாங்கிய புண்ணியவான்கள் யாரோ!

விவசாய விளைபொருள் விற்பனை: தமிழக அரசு அதிரடி!

நாணயம் பிட்ஸ்...

`விவசாயிகள் விளைவிக்கும் விளைபொருள்களை உள்ளூர்ச் சந்தையில்தான் விற்க வேண்டும்’ என்ற நடைமுறையை மத்திய அரசாங்கம் சமீபத்தில் மாற்றியமைத்தது. இதைத் தொடர்ந்து தமிழக அரசாங்கம் இதை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தியிருக்கிறது. இனி தமிழகத்திலுள்ள விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் விவசாய விளைபொருள்களை உள்ளூரிலிருக்கும் பெரிய அளவில் மொத்தமாக வாங்கும் நிறுவனங்களுக்கோ, வெளிமாநிலங்களைச் சேர்ந்த நிறுவனங்களுக்கோ கூடுதல் விலைக்குத் தாராளமாக விற்கலாம். இதன் மூலம் உள்ளூர்ச் சந்தையில் இந்த விலைக்குத்தான் விவசாய விளைபொருள்களை விற்க வேண்டும் என்ற கட்டாயத்திலிருந்து விவசாயிகள் விடுதலை பெற்றிருக்கிறார்கள்.

#இனியாவது விவசாயிகளின் வருமானம் பெருகட்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism