Published:Updated:

நாணயம் பிட்ஸ்...

நாணயம் பிட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
நாணயம் பிட்ஸ்

கொரோனா நீண்டுகொண்டே போவதைப் பார்த்தால், அரசு வருமானம் இன்னும் குறையும்!

கொரோனா... வெளிநாடுகளுக்குப் பணம் அனுப்புவது குறைந்தது!

பணம்
பணம்

வெளிநாடுகளில் படிக்கும் லட்சக்கணக்கான இந்திய மாணவர்களுக்கு நம் நாட்டினர் அனுப்பும் தொகை, கொரோனா காரணமாக கடந்த ஏப்ரலில் பாரதூரமாகக் குறைந்திருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் நம் நாட்டிலிருந்து பல்வேறு நாடுகளுக்கு அனுப்பப்பட்ட பணம் 499.14 மில்லியன் டாலர் மட்டுமே. ஓராண்டுக்கு முன்னர் இதே காலத்தில் 1,287 மில்லியன் டாலர் பணம் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது. `கடந்த 50 மாதங்களில் இந்த அளவுக்குக் குறைவான தொகையை நம்மவர்கள் வெளிநாட்டவர்களுக்கு அனுப்பியதே இல்லை’ என்கிறது ஆர்.பி.ஐ புள்ளிவிவரங்கள்.

கடந்த 2018-ம் ஆண்டுக் கணக்கின்படி, நம் நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்று படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை சுமார் ஏழு லட்சத்துக்குமேல்!

வெளிநாட்டு அரசாங்கம் பண உதவி செய்யும்போது, நாம் ஏன் அனுப்ப வேண்டும் என்று நம்மவர்கள் நினைத்திருப்பார்களோ!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

உங்களை மாதிரி கஸ்டமர்களை இழப்பதில் மகிழ்ச்சியே..!

ஜெஃப் பெசோஸ்
ஜெஃப் பெசோஸ்

அமெரிக்கா முழுவதும் புயலைக் கிளப்பியிருக்கிறது நிறவெறிக்கு எதிரான போராட்டம். முக்கிய நிறுவனங்களின் தலைவர்கள் அனைவருமே இந்த நிறவெறிக்கு எதிராகக் குரலெழுப்ப, அமேஸான் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் பெசோஸும் கறுப்பின மக்களுக்கு ஆதரவு தந்திருந்தார். இதை விரும்பாத சில வெள்ளை இனத்தவர்கள், ‘ஜெஃப், உங்கள் கருத்தை மாற்றிக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால், இனி நாங்கள் அமேஸானில் பொருள்களை வாங்க மாட்டோம்’ என்று அச்சுறுத்தியிருந்தார்கள். அதற்கு ஜெஃப், ‘உங்களைப் போன்ற வாடிக்கையாளர்களை இழப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்’’ என்று சொல்லியிருக்கிறார்!

சபாஷ் ஜெஃப்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வங்கிகள் தரும் கடன்... தமிழக எஸ்.எம்.இ-க்களுக்கு ஏகத்துக்கும் அதிகரித்தது!

வங்கி கடன்
வங்கி கடன்

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கொரோனா ஊரடங்கால் நொடிந்துபோயிருக்க, இந்த நிறுவனங்களுக்கு எமர்ஜென்ஸி கிரெடிட் லைன் கேரன்டி ஸ்கீம் மூலம் தரப்படவிருந்த கடன்களை தற்போது வங்கிகள் வேகமாகத் தந்துவருகின்றன. இந்தத் திட்டத்தின்கீழ், கடந்த 1-ம் தேதிவரை ரூ.3,892 கோடி மட்டுமே தரப்பட்டிருந்தது. ஆனால், கடந்த 5-ம் தேதிக்குள் இந்தத் திட்டத்தின்கீழ் அளிக்கப்பட்ட கடன் அளவு ரூ.8,320 கோடியாக உயர்ந்திருக்கிறது. நான்கு நாள்களுக்குள் ஏறக்குறைய 113% அதிகமாகக் கடன் தரப்பட்டிருக்கிறது. இதில் எஸ்.பி.ஐ வங்கி ரூ.6,084 கோடியும், யூனியன் பேங்க் ரூ.435 கோடியும், கனரா பேங்க் ரூ.430 கோடியும், பேங்க் ஆஃப் இந்தியா 257 கோடியும், பஞ்சாப் நேஷனல் பேங்க் ரூ.242 கோடியும் கடனாக அளித்துள்ளன. இந்தக் கடன்களில் கணிசமான பகுதியை தமிழகத்திலுள்ள எஸ்.எம்.இ-க்களே பெற்றுள்ளனர். ஏறக்குறைய 33,725 கணக்குகள் மூலம் ரூ.2,018 கோடி கடன் தரப்பட்டிருக்கிறது.

எஸ்.எம்.இ-க்கள் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்குக் கிடைத்த பரிசு இது..!

நந்தனின் வேண்டுகோள்...`ஆன்லைன் கிளாஸ் வேணாமே!’

நந்தன் நிலேகனி
நந்தன் நிலேகனி

கொரோனோ ஊரடங்கு ஏறக்குறைய முடிவுக்கு வந்த பிறகும் பள்ளி, கல்லூரியைத் திறப்பதற்கான சூழல் இன்னும் வரவில்லை. இந்த நிலையில், `நாள்களை வீணாகக் கழிக்க வேண்டாம்’ என்று நினைத்த சில பள்ளிகள் தற்போது ஆன்லைனில் பாடங்களை நடத்திவருகின்றன. ‘‘இப்படி ஆன்லைனில் வகுப்புகளை நடத்துவதைத் தற்காலிகமாக வேண்டுமானால் செய்யலாம். ஆனால், எப்போதுமே இந்த ஆன்லைன் வகுப்புகளை மட்டுமே நம்பி நாம் இருந்துவிடக் கூடாது. நமது கல்விமுறை எல்லாவிதமான கஷ்டங்களிலிருந்தும் தப்பித்து வரும் பயிற்சியை நம் மாணவர்களுக்கு அளிப்பதாக இருக்க வேண்டும்’’ என்று சொல்லியிருக்கிறார் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைவர் நந்தன் நிலேகனி.

`பள்ளிகள் எப்போது திறக்கும்...’ என்றுதானே குழந்தைகள் அனைவரும் காத்துக் கிடக்கின்றனர்!

வரிச் சலுகைகள்...குறைகிறது அரசின் வருமானம்!

வரிச் சலுகை
வரிச் சலுகை

`வரி வருமானம் தொடர்பாக செய்யப்பட்ட சில சீர்திருத்தங்கள், ரூ.5 லட்சம் வரை வருமான வரிச் சலுகை எனப் பல சலுகைகளை மத்திய அரசாங்கம் அறிவித்ததன் காரணமாக மத்திய அரசின் வரி வருமானம் இந்த நிதியாண்டில் கணிசமாகக் குறையும்’ என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. `2020-21-ல் வர்த்தக நிறுவனங்கள் மூலம் கிடைக்கும் வரி வருமானம் ரூ.1.45 கோடியும், தனிநபர் வரி வருமானம் மூலம் ரூ.23,200 கோடியும் அரசுக்கு வருமானம் கிடைக்காமல் போக வாய்ப்புண்டு’ என நிதியமைச்சகம் மதிப்பிட்டிருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் வரி வருமானம் மூலம் மத்திய அரசுக்குக் கிடைக்கும் மொத்த வருமானம் ரூ.24.50 லட்சம் கோடிக்குமேல். இதில் சுமார் ரூ.1.68 லட்சம் கோடி வருமானம் குறைய வாய்ப்புண்டு என்பது இப்போதைய கணக்கு..!

கொரோனா நீண்டுகொண்டே போவதைப் பார்த்தால், அரசு வருமானம் இன்னும் குறையும்!

முகேஷின் சாதனை... ஒரு லட்சம் கோடி திரட்டிய ஜியோ!

முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானி

ன்னும் ரூ.2,215 கோடி வந்தால், குறுகியகாலத்தில் ரூ.1 லட்சம் கோடியைத் திரட்டிய பெருமை முகேஷ் அம்பானிக்குக் கிடைத்துவிடும். ஜியோ நிறுவனத்தின் 9.99% பங்குகளை விற்று, ரூ.43,574 கோடியைத் திரட்டத் தொடங்கிய முகேஷ் அம்பானி, தற்போது லேட்டஸ்ட்டாக ஜியோவின் 1.61% பங்குகளை அபுதாபி இன்வெஸ்ட்மென்ட் அத்தாரிட்டி நிறுவனத்துக்கு ரூ.5,683 கோடிக்கு விற்றிருக்கிறார். ஜியோவின் 21.06% பங்குகளை இதுவரை விற்று ரூ.1 லட்சம் கோடியைத் திரட்டியிருக்கிறார். `ஜியோவின் மூலதன மதிப்பு ரூ.4.91 லட்சம் கோடி’ என்றும், `அந்த நிறுவனத்தின் மதிப்பு ரூ.5.16 லட்சம்’ என்றும் மதிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த ஒரு லட்சம் கோடியுடன் இன்னொரு லட்சம் கோடியை கூடிய சீக்கிரத்தில் முகேஷ் அம்பானி திரட்டினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை..!