Published:Updated:

நாணயம் பிட்ஸ்...

விஜய் சேகர் சர்மா
பிரீமியம் ஸ்டோரி
விஜய் சேகர் சர்மா

அஞ்சா நெஞ்சம்கொண்டவர் இவர்தான்!

நாணயம் பிட்ஸ்...

அஞ்சா நெஞ்சம்கொண்டவர் இவர்தான்!

Published:Updated:
விஜய் சேகர் சர்மா
பிரீமியம் ஸ்டோரி
விஜய் சேகர் சர்மா

கொரோனா பயம்: களைகட்டும் ஓ.டி.டி படங்கள்!

நாணயம் பிட்ஸ்...

கொரோனா காரணமாக திரையரங்குகள் இன்னும் திறக்கப்படாமலேயே இருக்கின்றன. இந்த நேரத்தைப் பயன்படுத்தி, ஆன்லைனில் அடுத்தடுத்து ஓ.டி.டி திரைப்படங்களை வெளியிடுவது அதிகரித்து வருகிறது. அமிதாப் பச்சன் நடித்த `குலோபோ சிதாபோ’ என்னும் இந்தியப் படம் சில நாள்களுக்கு முன்னர் அமேஸான் பிரைம் வீடியோவில் வெளியாகி, கணிசமான வசூலை அள்ளிக்குவித்தது. இதைத் தொடர்ந்து அக்‌ஷய் குமார் நடித்த `லஷ்மி பாம்’, அஜய் தேவ்கான் நடித்த `புஜ்: தி பிரைடு ஆஃப் இந்தியா’ ஆகிய படங்கள் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வெளியாகவிருக்கின்றன. தமிழிலும் தெலுங்கிலும் உருவாக்கப்பட்டிருக்கும் `பென்குவின்’ படம் ரூ.60 கோடிக்கு அமேஸான் பிரைமால் வாங்கப்பட்டிருக்கிறதாம். இதேபோல, நான்கு பிராந்திய மொழிப் படங்கள் தலா ரூ.30 கோடிக்கு வாங்கப்பட்டிருக்கின்றனவாம்!

ஓ.டி.டி நிறுவனங்களுக்குக் கொண்டாட்டம்தான்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

செலவு ரூ.2,000 கோடி வரவு ரூ.360 கோடி..!

ரயில்வே துறை
ரயில்வே துறை

ரடங்கு காரணமாக நாடு முழுக்கப் பல்வேறு நகரங்களில் சிக்கித் தவித்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 60 லட்சம் பேரை 4,450 சிறப்பு ரயில்கள் மூலம் தங்களின் சொந்த மாநிலங்களிலுள்ள நகரங்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்த்ததற்காக நபர் ஒருவருக்கு ரூ.600 வீதம் ரூ.360 கோடியை வருமானமாகப் பெற்றிருக்கிறது ரயில்வே துறை. ஆனால், இதற்காக நபர் ஒருவருக்கு ரயில்வே நிர்வாகம் ரூ.3,400 வீதம் செலவு செய்திருக்கிறதாம். இதன் மூலம் ரயில்வே நிர்வாகத்துக்கு ரூ.2,000 கோடிக்குமேல் செலவாகியிருக்கிறது.

ரயில்வே துறையைப் பாராட்டுவோம்!

21 மாடியில் புதிய கட்டடம்... கலக்கல் விஜய் சேகர் சர்மா..!

விஜய் சேகர் சர்மா
விஜய் சேகர் சர்மா

கொரோனா ஊரடங்கு காரணமாகப் பல வர்த்தக நிறுவனங்கள் விரிவாக்க நடவடிக்கைகளை இப்போதைக்கு வேண்டவே வேண்டாம் என்று ஒத்திப்போட, பே-டிஎம் விஜய் சேகர் ஷர்மா மட்டும் நொய்டாவில் 21 மாடிக்குப் புதிய கட்டடம் ஒன்றைக் கட்ட முடிவெடுத்திருக்கிறார். ஐந்து லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த கட்டடத்தில் 5,000 பேர் வரை தாராளமாக உட்கார்ந்து வேலை பார்க்கலாம். ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், ஹோட்டல் என நவீன வசதிகளுடன் இதைக் கட்டிவருகிறார் விஜய் சேகர்.

அஞ்சா நெஞ்சம்கொண்டவர் இவர்தான்!

அமெரிக்காவில் அதிகரிக்கும் இந்திய கம்பெனிகளின் முதலீடு!

நிறுவனங்கள்
நிறுவனங்கள்

‘‘வெளிநாட்டினருக்கு வேலை தரக் கூடாது; மண்ணின் மைந்தர்களான அமெரிக்கர்களுக்கே வேலையில் முன்னுரிமை தர வேண்டும்’’ என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தொடர்ந்து சொல்லிவரும் நிலையில், இந்தியத் தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்வது தொடர்ந்து அதிகரித்துவருகிறது.

ஏறக்குறைய 155 இந்திய நிறுவனங்கள் அமெரிக்காவில் 22 பில்லியன் டாலர் அளவுக்கு முதலீடு செய்திருக்கின்றன. தவிர, 1.25 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பையும் அளித்திருக்கிறது. இவற்றில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத் தொடர்புத்துறை சார்ந்த நிறுவனங்கள் 27 சதவிகிதமும், மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் 24 சதவிகிதமும் முதலீடு செய்துள்ளன. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்திய நிறுவனங்கள் இன்னும் அதிகமாக முதலீடு செய்து, பிசினஸை விரிவாக்கம் செய்யப் போகின்றனவாம்!

இந்திய நிறுவனங்கள் ரொம்பத்தான் ‘மாத்தி’ யோசிக்கின்றனவோ!

கொரோனா: மருத்துவச் செலவு மூன்று மடங்கு அதிகரித்தது!

கொரோனா
கொரோனா

கொரோனாநோய்த் தொற்றின் காரணமாக மத்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் செலவு மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரலில் இந்தத் துறை செய்த செலவு ரூ.4,327 கோடி மட்டுமே. ஆனால், இந்த ஆண்டு ஏப்ரலில் இந்தத் துறை செய்த செலவு ரூ.13,000 கோடிக்குமேல். இதில் பெரும்பகுதி சோதனைகளைச் செய்யவும், சோதனைகளுக்குத் தேவையான உபகரணங்களை வாங்குவதற்குமே செலவாகியிருக்கிறதாம். இதுதவிர, ஒவ்வொரு மாநில அரசாங்கமும் பெரும் தொகையைச் செலவு செய்துவருகின்றன.

கொரோனாநோய் நமது அரசாங்கங்களை போண்டி ஆக்கிவிடும்போல!

அந்நிய நேரடி முதலீடு... இந்தியாவுக்கு 9-வது இடம்!

முதலீடு
முதலீடு

லக நாடுகளிடமிருந்து அந்நிய நேரடி முதலீட்டைப் பெறுவதில் 9-வது இடத்தில் இருக்கிறது நமது இந்தியா. கடந்த ஆண்டு (2019) ஏறக்குறைய 51 பில்லியன் டாலர் அளவுக்கு அந்நிய நேரடி முதலீட்டைப் பெற்றிருக்கிறது. கடந்த 2018-ல் 43 பில்லியன் டாலர் அளவுக்கு மட்டுமே அந்நிய நேரடி முதலீட்டைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 2019-ல் உலக அளவில் 1.54 ட்ரில்லியன் டாலர் அளவுக்கு அந்நிய நேரடி முதலீடு நிகழ்ந்தது. ஆனால், 2019 உச்சத்திலிருந்து 40% அளவுக்குக் குறைந்து 2020-ல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2005-ம் ஆண்டுக்குப் பிறகு இப்போதுதான் அந்நிய நேரடி முதலீடு ஒரு ட்ரில்லியன் டாலருக்கும் கீழே செல்லும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

அந்நிய நேரடி முதலீடு ரிலையன்ஸ் ஜியோவைத் தேடி எக்கச்சக்கமாக வந்திருக்கிறதே!