Published:Updated:

நாணயம் பிட்ஸ்...

நாணயம் பிட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
நாணயம் பிட்ஸ்

பேடிஎம் பேமன்ட் பேங்க்கில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள தொகை முதல்முறையாக ரூ.1,000 கோடியைத் தாண்டியுள்ளது!

நாணயம் பிட்ஸ்...

பேடிஎம் பேமன்ட் பேங்க்கில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள தொகை முதல்முறையாக ரூ.1,000 கோடியைத் தாண்டியுள்ளது!

Published:Updated:
நாணயம் பிட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
நாணயம் பிட்ஸ்

கொரோனா கொடுமை... வேலை இழந்த 14 கோடிப் பேர்!

நாணயம் பிட்ஸ்...

கொரோனா நோய்த்தொற்றால் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக ஊரடங்கு நடைமுறையில் இருப்பதால், நம் நாட்டில் வேலை இழந்தவர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 26% அளவுக்கு உயர்ந்திருக்கிறது. கடந்த சில வாரங்களாக 23-24% என்ற அளவில் இருந்த வேலை இழப்பு, இப்போது 26% என்ற அளவுக்கு வளர்ந்துவிட்டது. வேலைவாய்ப்பு என்பது 40 சதவிகிதத்திலிருந்து 26 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது. அதாவது, 14% குறைந்ததன் மூலம் இந்தியா முழுக்க ஏறக்குறைய 14 கோடிப் பேர் வேலை இழந்திருக்கிறார்கள். இந்த வேலை இழப்பு என்பது நகர்ப்புறங்களைவிட கிராமப்புறங்களில் அதிகமாகவே இருக்கிறது. நகர்ப்புறங்களில் 25.1 சதவிகிதமாக இருக்கும் வேலை இழப்பு, கிராமப்புறங்களில் 26.7 சதவிகிதமாக இருக்கிறது.

#இத்தனை பேருக்கும் திரும்ப வேலை கிடைக்குமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தியாவுக்கு அழைத்துவரப்படும் விஜய் மல்லையா..!

நாணயம் பிட்ஸ்...

ரூ.9,000 கோடி வங்கிக் கடனைச் செலுத்தாமல், இங்கிலாந்தில் வசித்துவந்த விஜய் மல்லையாவை இன்னும் சில வாரங்களில் இந்தியாவுக்கு அழைத்து வரும் சூழல் உருவாகியிருக்கிறது. இந்தப் பிரச்னை தொடர்பாக, தன்னை இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தக் கூடாது என லண்டன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார் மல்லையா. இந்த வழக்கு அவருக்குப் பாதகமாக முடிந்த நிலையில், அவர் இந்தியாவுக்கு அழைத்துவரப்பட்டு, அவருடைய சொத்துகள் விற்கப்படும்.

#வாராக்கடன் பணம் திரும்பி வந்தா சரிதான்!

மாநிலங்களுக்குக் கூடுதல் கடன் தரும் ஆர்.பி.ஐ..!

ஆர்.பி.ஐ
ஆர்.பி.ஐ

கொரோனா நெருக்கடி நிலவும் நிலையில், அத்தியாவசியமான செலவுகளைச் செய்வதற்குக்கூட பணமில்லாமல் பல மாநில அரசாங்கங்கள் தவிக்கின்றன. வேறு வழியில்லாமல் கூடுதல் வட்டியில் கடன் வாங்குகின்றன. இந்த இக்கட்டான சூழ்நிலையைத் தவிர்க்க மாநிலங்களுக்குத் தேவையான நிதியை அவசரகாலக் கடனாகத் (Ways and Means) தருகிறது ஆர்.பி.ஐ. ரூ.1.20 லட்சம் கோடியை இப்படித் தர முடிவுசெய்திருந்த ஆர்.பி.ஐ., தற்போது ரூ.2 லட்சம் கோடி அளவுக்குத் தர முடிவு செய்திருக்கிறது. `இவற்றில் 60% பணத்தை கொரோனாநோய் பரவாமலிருக்கச் செலவு செய்யலாம்’ என்று சொல்லியிருக்கிறது ஆர்.பி.ஐ.

#மாநில அரசாங்கங்கள் இந்த நிதியைச் சரியாகப் பயன்படுத்துமா?

`நடு சீட் காலியா?’ அலறும் விமான கம்பெனிகள்!

விமானம்
விமானம்

கொரோனாநோய் பக்கத்தில் இருப்பவர்களுக்கு எளிதில் தொற்றிவிடும் என்பதால், `விமானத்தில் இருக்கைகளைக் காலியாக விட வேண்டும்’ என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. `கொரோனாநோய்த் தொற்றால் ஏற்கெனவே விமானத்துறை நொடிந்துபோயிருக்கிறது. இந்த நிலையில் சில இருக்கைகளைக் காலியாக விட்டால், விமான கம்பெனிகளுக்கான நஷ்டம் அதிகரித்துவிடும்’ என்று விமான நிறுவனங்கள் சொல்லியிருக்கின்றன. ` `கொரோனா பாதிப்பு வந்த ஒருவரிடமிருந்து சுமார் இரண்டு மீட்டர் தொலைவில் நிற்க வேண்டும்’ என்ற விதிமுறையை விமானத்தில் செயல்படுத்தினால், ஆறு பேர் உட்காரும் இருக்கையில் இரண்டு பேரை மட்டுமே உட்கார வைக்க முடியும். அதனால் விமான நிறுவனங்களுக்குப் பெரும் நஷ்டம் ஏற்படும். அதற்கு பதிலாக முகக் கவசம் அணிவது, கைகளைச் சுத்தமாக வைத்திருக்கத் தேவையான கிருமி நாசினிகளை பயன்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் மூலம் கொரோனாநோய்ப் பரவலைத் தடுக்க முடியும்’ என்று சொல்லியி ருக்கின்றன.

#நியாயம்தானே!

கொரோனா நிவாரணம்... ரூ.6-8 லட்சம் கோடி தேவை!

நாணயம் பிட்ஸ்...

கொரோனா பாதிப்புகளிலிருந்து மக்களை மீட்க ரூ.1.70 லட்சம் கோடி ரூபாய்க்கு பல்வேறு திட்டங்களை அறிவித்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இவற்றில் இதுவரை ரூ.36,659 கோடி தரப்பட்டுள்ளது. மீதமிருக்கும் நிதி எப்போது, எப்படி மக்களுக்குத் தரப்படும் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. என்றாலும், `இன்னும் அதிக அளவில் நிதி ஒதுக்க வேண்டும்’ என்று கோரிக்கை எழுந்திருக்கிறது. `நம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 3-4% அளவுக்கு ஒதுக்கி, நிவாரணத் திட்டங்களை அறிவிக்க வேண்டும். அதாவது, ரூ.6-8 லட்சம் கோடி நிவாரணத் திட்டங்களை அறிவிக்க வேண்டும்’ என்று கோரிகை விடுத்திருக்கிறார் எஸ்.பி.ஐ வங்கியின் ஆலோசகர் செளம்ய கந்தி கோஷ்.

#இதில் பாதியையாவது மத்திய அரசாங்கம் உடனே அறிவிக்க வேண்டும்!

ஊரடங்கு... குறைந்தது யூ.பி.ஐ., அதிகரித்தது ஆர்.டி.ஜி.எஸ்!

டந்த மார்ச் 24 முதல் ஊரடங்கு நடைமுறையில் இருப்பதால், யூ.பி.ஐ மூலம் பணம் செலுத்துவது குறைந்திருக்கிறது. கடந்த பிப்ரவரியில் ரூ.2.23 லட்சம் கோடி யூ.பி.ஐ மூலம் பரிமாற்றம் செய்யப்பட்டது. ஆனால், மார்ச்சில் ரூ.2.06 லட்சம் கோடி மட்டுமே பரிமாற்றம் செய்யப்பட்டது. இதேபோல, ஐ.எம்.பி.எஸ் மூலம் பரிமாற்றமான தொகையும் ரூ.2.14 லட்சம் கோடியிலிருந்து ரூ.2.01 லட்சம் கோடியாகக் குறைந்திருக்கிறது.

ஆர்.டி.ஜி.எஸ்
ஆர்.டி.ஜி.எஸ்

அதேநேரத்தில், ஆர்.டி.ஜி.எஸ் மூலம் கடந்த பிப்ரவரியில் ரூ.89.9 லட்சம் கோடி பரிமாற்றமானது; அது, மார்ச்சில் ரூ.120.47 லட்சம் கோடியாக அதிகரித்திருக்கிறது.

#ஊரடங்கின்போது உடனடியாகப் பணம் சேர வேண்டும் என்ற அக்கறைதான் காரணமோ!

பேடிஎம் பேமன்ட் பேங்க்கில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள தொகை முதல்முறையாக ரூ.1,000 கோடியைத் தாண்டியுள்ளது!