Published:Updated:

நாணயம் பிட்ஸ்...

இந்த ஆண்டில் நம் நாட்டில் விவசாய உற்பத்தி மிகச் சிறப்பாக இருக்கும்’ என்று மத்திய அரசின் விவசாயத்துறை சொல்லியிருக்கிறது.

பிரீமியம் ஸ்டோரி

ஃப்ளாட் பில்டர்களுக்கு நிதின் கட்கரியின் யோசனை..!

 நிதின் கட்கரி
நிதின் கட்கரி

ந்தியா முழுக்க ஏறக்குறைய 4.5 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு விற்கப்படாத நிலையிலிருக்கின்றன. இந்த வீடுகளை விற்பதற்கு ஒரு நல்ல யோசனையைச் சொல்லியிருக்கிறார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி. அண்மையில் ஆன்லைன் மூலம் பேசிய நிதின் கட்கரி, ‘‘கட்டி முடிக்கப்பட்டு விற்காத நிலையிலுள்ள வீடுகளை லாப நஷ்டம் பார்க்காமல் உடனே விற்றுவிடுங்கள். இதன் மூலம் உங்களுக்குப் பணம் வரும். அதைக்கொண்டு அடுத்த ரியல் எஸ்டேட் புராஜெக்ட்டைத் தொடங்கலாம்’’ என்று யோசனை தந்திருக்கிறார்.

#அமைச்சர் சொன்ன யோசனை, மக்களுக்கும் பில்டர்களுக்கும் நல்லது!

தேவை குறைவதால், குறையும் மின் உற்பத்தி!

மின் உற்பத்தி
மின் உற்பத்தி

கொரோனா தொற்றுநோய் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், மின் உற்பத்தித்துறை கடுமையாக பாதிப்படைந்திருக்கிறது; மின்சாரத்துக்கான தேவை கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்திருக்கிறது. கொரோனாநோய்த் தொற்றுக்கு முன்னரே 25 கிகாவாட் அளவுக்கு மின் தேவை குறைந்தது; ஊரடங்கு நடைமுறைக்கு வந்த பிறகு 50 கிகாவாட் அளவுக்கு மின் தேவை மேலும் குறைந்திருக்கிறது. இதனால், `மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு சுமார் ரூ.30,000-40,000 கோடி வரை வருமான இழப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது’ என இந்தியத் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு கணித்துள்ளது.

#தொழில் நிறுவனங்களுக்குத் தடையில்லா மின் சேவை இனியாவது கிடைக்கட்டும்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஏர் இந்தியாவை விற்கும் கெடு தேதி நீட்டிப்பு!

ஏர் இந்தியா
ஏர் இந்தியா

மிகப்பெரிய நஷ்டத்தில் இயங்கிவரும் ஏர் இந்தியா நிறுவனத்தை எப்படியாவது தனியாருக்கு விற்றுவிட வேண்டும் என்று மத்திய அரசாங்கம் முயன்றுவருகிறது. `ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க விரும்புபவர்கள் தங்கள் விருப்பத்தை மார்ச் 17-ம் தேதிக்குள் தெரிவிக்கலாம்’ என்று சொல்லியிருந்தது. மார்ச் மாதத்தில் கொரோனோநோய்த் தாக்கம் அதிகமானதால், ஏப்ரல் 30-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது. தற்போதுவரை கொரோனா பாதிப்பு நீடிப்பதால், `ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க விரும்புபவர்கள் தங்கள் விருப்பத்தை வரும் ஜூன் 30-ம் தேதி வரை தெரிவிக்கலாம்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. கொரோனா பாதிப்பால் விமானத் துறை ஏற்கெனவே கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஏர் இந்தியாவை யார் வாங்குவார்கள் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

#ஏர் இந்தியா பிரச்னைக்கு எப்போதுதான் தீர்வு கிடைக்குமோ!

நாணயம் பிட்ஸ்...

கச்சா எண்ணெய்க் கப்பல் வாடகை கிடுகிடு உயர்வு!

கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய்

லகமே ஊரடங்கில் சிக்கிக்கொண்டிருக்க, கச்சா எண்ணெய்க்கான தேவை கடுமையாகக் குறைந்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய் பெரிய அளவிலான சூப்பர் டேங்க்கர்களில் சேமித்துவைக்கப்படுவதால், அதற்கான வாடகை ஏகத்துக்கும் உயர்ந்திருக்கிறது. கடந்த மார்ச் மாதம் 27-ம் தேதி அன்று 1.18 லட்சம் டாலராக இருந்த இந்த சூப்பர் டேங்க்கர்களின் வாடகை, மூன்று நாள்களுக்குப் பிறகு அதாவது, மார்ச் 28-ம் தேதி அன்று 1.87 லட்சம் டாலராக உயர்ந்தது. ஏப்ரல் 9-ம் தேதி அன்று 1.29 லட்சம் டாலராகக் குறைந்தது; ஏப்ரல் 11-ம் தேதி அன்று மீண்டும் 1.70 லட்சம் டாலராக உயர்ந்தது. `கச்சா எண்ணெய்க்கான தேவை குறையக் குறைய, சூப்பர் டேங்க்கர்களின் வாடகை அதிகரித்துக்கொண்டே செல்லும்’ என்கிறார்கள் நிபுணர்கள்.

#பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்தால் தேவை அதிகரிக்கும் என்பது அரசுக்குத் தெரியாதா?

விவசாய உற்பத்தி மிகச் சிறப்பாக இருக்கும்!

விவசாயம்
விவசாயம்

`இந்த ஆண்டில் நம் நாட்டில் விவசாய உற்பத்தி மிகச் சிறப்பாக இருக்கும்’ என்று மத்திய அரசின் விவசாயத்துறை சொல்லியிருக்கிறது. கொரோனாநோய்த் தொற்றால் உற்பத்தித்துறையும் சேவைத்துறையும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், `விவசாய உற்பத்தி நன்றாக இருக்கும்’ என்று மத்திய அரசு சொல்லியிருப்பது பலருக்கும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது. ஊரடங்கு உத்தரவு நடைமுறையிலிருந்த ஏப்ரலில் மட்டும் உரங்கள் விற்பனை 5% அதிகரித்திருக்கிறது. இதேபோல, விதைகள் விற்பனை 20% உயர்ந்திருக்கிறது. `இது விவசாய உற்பத்தி நன்றாக இருக்கும் என்பதற்கு நல்லதொரு எடுத்துக்காட்டு’ என்று சொல்லியிருக்கிறது மத்திய அரசாங்கம்.

#மக்களின் வருமானம் குறைந்திருக்கும் நிலையில், உணவுப் பொருள்களின் விலை உயராமல் இருந்தால் சரிதான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு