பிரீமியம் ஸ்டோரி

இருபது ஆண்டுகளுக்கு முன் புதிதாகத் தொழில் தொடங்கியவர்கள் தங்களின் புதிய நிறுவனம் பற்றி எல்லோ பேஜஸ் (Yellow pages) டைரக்டரியில் பட்டியலிடுவார்கள். ஏன்? புதிதாகத் தகவல் தேடுபவர்களின் கண்களில் சட்டென்று படவேண்டும் என்பதற்காக!

இராம்குமார் சிங்காரம்
இராம்குமார் சிங்காரம்

ஆனால், இன்று இணைய வசதி வந்துவிட்ட பிறகு, மக்கள் வாங்க விரும்பும் பொருள்களைத் தேடும் முறை முற்றிலும் மாறிவிட்டது. உலக மக்கள் தொகை ஏறக்குறைய 790 கோடி பேரில், சுமார் 490 கோடி பேரிடம் இணைய வசதி இருக்கிறது. எதிர்காலத்தில் இது இன்னும் உயரும்.

புதிய பொருளை வாங்க விரும்புவோரில் 81% பேர், தற்போது இணையத்தில் உள்ள கூகுள் தேடுபொறியில்தான் முதலில் தேடுகிறார்கள். எனவே, உங்கள் நிறுவனத்துக்குப் புதிய வாடிக்கையாளர்கள் வர வேண்டுமென்றால், உங்கள் நிறுவனம் பற்றிய தகவல் இணையதளத்தில் இடம் பெற்றிருப்பதுடன், கூகுள் தேடுபொறியில் முதல் பக்கத்தில் வர வேண்டும். அது எப்படிச் சாத்தியமாகும்?

கூகுளுடன் பிசினஸ் கூட்டணி!

எஸ்.இ.ஓ (Search Engine Optimization) மூலம் இது சாத்தியமாகும். எஸ்.இ.ஓ என்பது, கூகுள் ‘தேடுபொறியைத் தன்வயப்படுத்துதல்’ என்று அர்த்தம். ‘திருச்சியில் பட்டுப் புடவையை எங்கு வாங்கலாம்’ என்று தேடினால், உடனடி யாக 7, 8 பட்டுப்புடவைக் கடைகளின் இணையதளங்கள் முதல் பக்கத்தில் வரும். கூகுளுக்குப் புரிகிற மாதிரியான தொழில்நுட்ப வார்த்தைகளை ஆங்காங்கே பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட இணையதளங்களே முதல் பக்கத்தில் இடம்பெறும். அதாவது, கீ வேர்டஸ் (Keywords), பேக் லிங்க் (Backlink), ரிவியூ (Review) போன்றவற்றில் முக்கியமான கவனம் செலுத்தினால் கூகுள் முதல் மரியாதை தரும்.

‘எங்களுக்கு நிறைய வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். அவர்களே போதும்’ என்று நினைக்கக் கூடாது. பழைய வாடிக்கையாளர்களை இழக்காமல் இருப்பது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் புதிய வாடிக்கையாளர் களைச் சென்றடைவது. இந்த பிசினஸ் சீக்ரெட்ஸ்தான் வெற்றி பெற்ற நிறுவனங்களின் சக்சஸ் ஃபார்முலா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு