Published:Updated:

உங்கள் பிசினஸை வளர்க்க உதவும் கிளப்ஹவுஸ் ஆப்! செலவில்லாமல் பிராண்ட் பில்டிங்

கிளப்ஹவுஸ்
பிரீமியம் ஸ்டோரி
கிளப்ஹவுஸ்

C L U B H O U S E

உங்கள் பிசினஸை வளர்க்க உதவும் கிளப்ஹவுஸ் ஆப்! செலவில்லாமல் பிராண்ட் பில்டிங்

C L U B H O U S E

Published:Updated:
கிளப்ஹவுஸ்
பிரீமியம் ஸ்டோரி
கிளப்ஹவுஸ்

ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டா கிராம் வரிசையில் மக்களிடம் இப்போது அதிக வரவேற்பைப் பெற்ற சமூக வளைதளமாக கிளப்ஹவுஸ் இருக் கிறது. பலரும் அதில் மணிக்கணக்கில் நேரம் செலவிடுகிறார்கள். பயன் பாட்டுக்கு வந்த சில வாரங்களிலேயே கிளப்ஹவுஸின் பயனாளர்கள் பல மடங்கு அதிகரித்துள்ளனர்.

பொதுவாக, புதிய சமூக வலை தளங்கள் பயன்பாட்டுக்கு வந்தாலே அதை சார்பாகக் கொண்டு பிசினஸ் களும் வளர்ச்சி அடையும். அந்த வகையில் கிளப்ஹவுஸ் என்பது என்ன, அதை பிசினஸுக்கு ஏற்ற ஒரு தளமாக மாற்றிக்கொள்வது எப்படி என்பது பற்றி விளக்கமாக எடுத்துச் சொல்கிறார் மார்க்கெட்டிங் நிபுணர் சக்திவேல் பன்னீர்செல்வம்.

சக்திவேல் 
பன்னீர் செல்வம்
சக்திவேல் பன்னீர் செல்வம்

கிளப்ஹவுஸ் எனும் புதிய வலைதளம்...

கொரோனா முதல் அலையின் போது ஐ.ஓ.எஸ்ஸில் மட்டும் பயன் படுத்தும் வகையில் வடிவமைக்கப் பட்ட கிளப்ஹவுஸ் ஆப்ளிகேஷன், இப்போது ஆண்ட்ராய்டு வெர்ஷ னிலும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதில் ஒரே நேரத்தில் ஐந்தாயிரம் பேர் வரை பங்கேற்று, கேட்க முடியும்.

இதில் பேசுபவரின் குரலை (ஆடியோ) மட்டுமே அனைவராலும் கேட்க முடியும். சமூக வலைதளங்களில் முகம் காட்ட விரும்பாதவர்களுக்கு இது பெஸ்ட் ஆப்ளிகேஷன். கூகுள் பிளே ஸ்டோரில் இதை டவுன்லோடு செய்து பயன்படுத்த இயலும். இதில் ஒருவர் பேசிய தகவல்கள் எங்கேயும் ரெக்கார்டு செய்யப்படுவதில்லை என்பது இதன் ப்ளஸ். அதே நேரம், நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்பதைக் கவனமாக யோசித்து பேசுவது அவசியம்.

உங்கள் பிசினஸை வளர்க்க உதவும் கிளப்ஹவுஸ் ஆப்! செலவில்லாமல் பிராண்ட் பில்டிங்

எப்படிப் பயன்படுத்துவது..?

கிளப்ஹவுஸ் ஆப்ளிகேஷனுக்குள் நீங்கள் நுழைந்தவுடன் உங்களுக்கு எதில் அதிக ஆர்வம் மற்றும் எதைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்கள் என்பதைப் பொறுத்து பல்வேறு துறைகளில் ஏதாவது ஒன்றை நீங்களே தேர்வு செய்துகொள்ள முடியும்.

ஒரு முறை தேர்வு செய்துவிட்டால், நீங்கள் கிளப்ஹவுஸ் ஆப்புக்குள் நுழைந்தவுடன், நீங்கள் தேர்வு செய்த தலைப்பு தொடர்பாக நடக்கும் கலந்துரையாடல்கள் உங்களுக்கு நோட்டிஃபிகேஷனாக வரும். விருப்பம் இருந்தால், அந்தக் கலந்துரையாடலில் நீங்கள் கலந்து கொள்ளலாம்.

ஆப்பை டவுன்லோடு செய்த வுடன், உங்கள் தொலைபேசி கான்டாக்ட்டில் இருக்கும் நபர்கள் யாரெல்லாம் கிளப்ஹவுஸ் பயன் படுத்துகிறார்கள் என்று காட்டும். யாரையெல்லாம் நீங்கள் ஃபாலோ செய்ய விரும்புகிறீர்களோ, அவர்களை எல்லாம் நீங்கள் ஃபாலோ செய்யலாம். ஃபாலோ செய்த பின் அவர் எந்த சாட் ரூம் கலந்துரை யாடலில் பங்கேற்கிறார் என்பதையும் நீங்கள் பார்க்கலாம். அந்தக் குழுவின் கலந்துரையாடலில் நீங்களும் கலந்து கொள்ளலாம். முதல்முறை நீங்கள் ஒருவரை ஃபாலோ செய்யவில்லை எனில், அதன்பின் சர்ச் பட்டனில் சம்பந்தப்பட்டவரின் பெயரைத் தேடியும் அதன்பின் ஃபாலோ செய்யலாம்.

கிளப்ஹவுஸ் சாட் ரூம் மூன்று காலங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கும். முதல் காலத்தில் கூட்டத்தை வழிநடத்துபவர்களும், பேச்சாளர் களும் (மாடரேட்டர்கள் மற்றும் ஸ்பீக்கர்கள்) இருப்பார்கள். கூட்டத்தை வழிநடத்துபவர்களின் பெயர்கள் பக்கத்தில் பச்சை நிறத்தில் நட்சத்திரம் போன்ற குறியீடு இருக்கும்.

இரண்டாவது காலத்தில் அந்த பேச்சாளர்களை ஃபாலோ செய்பவர் களும், மூன்றாவது காலத்தில் பொது பயனாளர்களும் இருப்பார்கள்.

நீங்கள் கலந்துரையாடலில் பேச நினைத்தால், கையைத் தூக்கி ஹேண்ட் ரைஸிங் செய்யலாம். ஆனால், கூட்டத்தை வழிநடத்துபவர் அனுமதித்தால் நீங்களும் அந்தக் கலந்துரையாடலில் பேச இயலும். குழுவில் ஒருவர் தேவையில்லாத கருத்து களைப் பகிர்ந்தால், அவரை மியூட் செய்யும் ஆப்ஷனும் வழி நடத்துபவருக்கு உண்டு.

ஒரு குழுவின் கலந்துரையாடல் பயனுள்ளதாக இருக்கிறது எனில், உங்கள் ஃபாலோயர்களை அந்தக் கலந்துரை யாடலில் பங்கேற்க வைக்க நீங்கள் அவர்களுக்கு இன்வைட் அனுப்பலாம்.ஒரு கலந்துரையாடல் உங்களுக்குப் பிடிக்கவில்லை எனில், எப்போது வேண்டுமானாலும் ‘லீவ் கொயட்லி’ என்ற ஆப்ஷனைத் தேர்வு செய்து வெளியே வந்துவிடலாம்.

நீங்கள் மாடரேட்டர் ஆகலாம்...

ஸ்டார்ட் ரூம் ஆப்ஷன் மூலம் நீங்களே ஒரு புது சாட் ரூமை அமைக்கலாம். அதில் யாரெல்லாம் பங்கேற்கலாம், என்ன தலைப்பில் பேசலாம் என்பதை நீங்கள் தேர்வு செய்யலாம். இவ்வாறு குழு அமைக்கும்போது, ஓப்பன், சோஷியல், குளோஸ்டு என்று மூன்று ஆப்ஷன்கள் இருக்கும். ஓப்பன் என்பதைத் தேர்வு செய்தால், அதில் உங்களுக்கு அறிமுகம் இல்லாத யார் வேண்டுமனாலும் பங்கேற்பார்கள், சோஷியல் என்பதைத் தேர்வு செய்தால் குழுவில் உள்ளவர்களும், குழுவில் உள்ளவர்களை ஃபாலோ செய்பவர்களும் கலந்துரையாடலில் பங்கேற்கலாம். குளோஸ்டு என்பதைத் தேர்வு செய்தால் நீங்கள் தேர்வு செய்தவர்கள் மட்டுமே கலந்துரை யாடலில் பங்கேற்க முடியும்.

புரொஃபைல்...

மற்ற சமூக வலைதளங்கள்போல, கிளப்ஹவுஸிலும் உங்களின் புரோ ஃபைலுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். உங்களுக்கு எதிலெல்லாம் ஆர்வம் உண்டு என்பதை சில வார்த்தைகளில் பதிவிடுங்கள். ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற உங்களின் சமூக வலை தளப் பக்கங்களை இதில் நீங்கள் இணைத்து வைக்கலாம். இதன் மூலம் உங்களுக்கு சமூக வலை தளங்களில் ஃபாலோயர்கள் அதிகரிக்க வாய்ப்புண்டு. மேலும், இதன் மூலம் உங்கள் துறை சார்ந்து நிறைய நபர்கள் உங்களுக்கு அறிமுகம் ஆவார்கள்.

பிசினஸாக மாற்றுவது எப்படி..?

முதலில், உங்கள்துறை சார்ந்து உலகில் நடக்கும் அனைத்தும் தெரிந்துகொண்டு, நீங்கள் உங்களின் பிசினஸை அப்டேட் செய்துகொள்ள முடியும். பொது வாக, உலக அளவில் நடக்கும் கருத்தரங்குகளுக்கு பல ஆயிரம் கட்டி செலவு செய்ய வேண்டி யிருக்கும். ஆனால், கிளப்ஹவுஸ் மூலம் அந்த அனுபவங்களை இலவசமாகவே பெற முடியும்.

ஒரு துறை சார்ந்து நீங்கள் அதிகமான கருத்துகள் பேசும் போது, அதில் நீங்கள் நிபுணர் ஆவீர்கள். உங்களுக்கான விளம்பரத்தை இலவசமாக உலகம் முழுவதும் நீங்களே செய்துகொள்வது போன்றுதான் இது. மேலும், உங்களின் சமூக வலைதளங்களை அதிக நபர்கள் ஃபாலோ செய்யத் தொடங்கு வார்கள். அதன் மூலம் உங்கள் தொடர்பு அதிகரிக்கும். அடுத் தடுத்து அவர்களின் கான் டாக்ட்டை நீங்கள் பிசினஸாக மாற்றிக்கொள்ள முடியும். மேலும், உலகில் யாருடன் வேண்டு மானாலும் எளிதாக பிசினஸ் பேசும் வாய்ப்பையும் கிளப்ஹவுஸ் வழங்குகிறது’’ என்றார்.

நீங்களும் கிளப்ஹவுஸ் மூலம் முயன்று பார்க்கலாமே!