Published:Updated:

பிசினஸில் முன்னேற உங்களுக்குத் தேவை தொழில் தர்மம்..! புதிய நிறுவனங்களுக்கான பாடங்கள்!

BUSINESS

பிரீமியம் ஸ்டோரி

முத்து சோலையப்பன்

டாடா என்ற பெயரைச் சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றுகிறது? ‘அது ஒரு நம்பிக்கை மிக்க கம்பெனி. நல்ல முறையில் நிர்வாகம் செய்யப்படுகிறது. நிறைய சேவைகள் செய்கிறார்கள்...’ இப்படி எல்லாம் நமக்குத் தோன்றும். ஆனால், அதிக வட்டி தருவதாகச் சொல்லும் ஃபைனான்ஸ் கம்பெனி பெயரைச் சொன்னால் என்ன தோன்றும்? ‘கண்டிப்பாக இவன் ஏமாற்றுபவன்தான். நம்முடைய பணத்தை என்றைக்காவது ஒரு நாள் சுருட்டிக்கொண்டு ஓடிவிடுவான்’ - இப்படித்தான் நாம் நினைப்போம்.

முத்து 
சோலையப்பன்
முத்து சோலையப்பன்

அதேமாதிரி உங்களுடைய பெயரை அல்லது உங்களது நிறுவனத்தின் பெயரைக் கூறினால் மக்கள் என்ன சொல்வார்கள்? இதற்கான விடை... உங்களுடைய தொழிலை நீங்கள் எந்த வழிமுறையில் செய்கிறீர்களோ, எந்தத் தர்மத்தைக் கடைப்பிடிக்கிறீர்களோ, அதன்படியே உங்களைப் பற்றி மக்கள் சொல்வார்கள். நீங்கள் கடைப் பிடிக்கும் தொழில் தர்மம் உங்களை மேல்நோக்கி எடுத்துச் செல்லும் அல்லது கீழே தள்ளிவிடும்.

கன்ஸ்யூமர் எலெக்ட்ரானிக்ஸ் பிசினஸில் கொரியன் நிறுவனங்களோ, ஜப்பானிய நிறுவனங்களோ, நிறைய கஸ்டமர்களை வைத்திருக்கிறார்கள். ஏன் தெரியுமா? அவர்கள் மிகவும் நம்பிக்கை மிக்க கம்பெனிகள் என்று மக்களிடம் பெயர் வாங்கியிருக்கிறார்கள். இன்றைக்கு இங்கிருந்து பொருளை விற்ற பின், நாளைக்கு எங்காவது ஓடிப்போய்விட மாட்டார்கள். நாளைக்கு ஏதாவது ரிப்பேர் ஆகிவிட்டது. அதைச் சரிசெய்யச் சொன்னால், அதற்குத் தேவையான சர்வீஸைத் தருவார்கள்.

ஒரு கம்பெனியின் நம்பகத்தன்மை அவர்கள் தயாரிக்கும் பொருளில் இல்லை. அந்தப் பொருள் பழுதானால், அதை எப்படிச் சரி செய்து தருகிறார்கள். வாடிக்கையாளர்களை எப்படி மதிக்கிறார்கள் என்பதில் எல்லாம் அந்த நிறுவனங்கள் ஏற்படுத்தக் கூடிய நம்பிக்கையில்தான் இருக்கிறது. இந்த கம்பெனிகள் எல்லாம் இத்தனை வருடங்களாகப் பெரிய அளவில் வளர்ந்திருப்பதற்கான காரணம் இதுதான்.

இந்த நிறுவனங்கள் வாரன்டி அல்லது கேரன்டி கொடுத்து வாடிக்கையாளர் களிடம் இருக்கும் நம்பிக்கையைக் காப்பாற்றுகிறார்கள். அதனால் அந்த கம்பெனியின் மீது நம்பிக்கை உயரும். இதே, சீன கம்பெனி எனில், அந்த நிறுவனத்தை யாரும் நம்ப மாட்டார்கள்.

சென்னையில் எலெக்ட்ரானிக்ஸ் பொருள்கள் விற்கும் பகுதிக்குப் போனால் அங்கே மலிவான விலையில் பல பொருள்களைக் குவித்து வைத்திருப் பார்கள். ஆனால், நீங்கள் பொருள் வாங்கிய அடுத்த நிமிடம், ‘‘எங்களிடம் வாரன்டி இல்லை. பொருளை மாற்றித் தரவும் மாட்டோம்’’ என்பார்கள். இதனால்தான் மக்கள் யாரும் சீனத் தயாரிப்புகளை நம்பி வாங்குவதில்லை.

உங்கள் நிறுவனம் நம்பிக்கை யானதுதானா என்று கேட்டால், அதற்கு உறுதியான பதில் உங்களிடம் இருந்து வர வேண்டும். ஏனென்றால், நம் மீது வைத்திருக்கும் நம்பிக்கைதான் நம் வெற்றிக்கு அடிப்படை.

தொழில்
தொழில்

விலைக் குறைவு என்ற ஆபத்தான யுக்தி...

நீங்கள் ஒரு தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் எனில், முதலில் அந்தத் தொழில் சார்ந்த ஏதாவது ஒரு நிறுவனத்தில் வேலை செய்வீர்கள். அங்கே வேலை செய்துகொண்டு தொழில் பற்றிய விஷயங்களை எல்லாம் கற்றுக்கொள்வீர்கள். கற்றுக் கொண்டு நீங்கள் சொந்தமாக ஒரு தொழில் ஆரம்பிப்பீர்கள்.

இப்படிச் செய்யும்போது உங்களுக்கென புதிய வாடிக்கை யாளர்களைப் பிடிக்க பல விதமான உத்திகளைக் கையாள் வீர்கள். பெரிய அளவில் செயல்படும் ஆன்லைன் நிறுவனங்கள் முதல் சில லட்ச ரூபாயில் தொடங்கப்பட்ட சிறு கடைகள் வரை இந்த உத்தியைப் பின்பற்றி வருகின்றன.

அது, லாபத்தைக் கணிசமாகக் குறைத்துக்கொள்வதன் மூலம் பொருளின் விலையைக் குறைவாக வைத்து விற்பது. இப்படிச் செய்வதன்மூலம் வாடிக்கையாளர் கூட்டம் உங்களுக்கு உடனடியாகக் கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆனால், இரண்டு பிரச்னை களை நீங்கள் சந்தித்தே ஆக வேண்டும். ஒன்று, லாபத்தைக் குறைவான அளவில் நீங்கள் வைத்திருப்பதால், உங்களால் தொடர்ந்து வியாபாரம் செய்ய முடியாத நிலை உருவாகும்.

இரண்டாவது, நீங்கள் இப்போது விற்கும் விலையை விடக் குறைவான விலையில் வேறு எங்காவது பொருள்கள் கிடைத்தால், அங்கு வாங்கு வதற்காக மக்கள் சென்று விடுவார்கள். அப்போது புதிய வாடிக்கையாளர்களைப் பெறுவதற்கு மீண்டும் புதிய யுக்தியை நீங்கள் கையாள வேண்டியிருக்கும்.

இன்றைக்கு இந்த யுக்தியை மிகப்பெரிய அளவில் கையாளும் ஆன்லைன் நிறுவனங்கள் இனிவரும் காலத்தில் இந்தப் பிரச்னையைச் சந்தித்தே ஆக வேண்டும் என்பதற்கான அறிகுறி இப்போதே தெரிய ஆரம்பித்து விட்டது.

வாக்குக் கொடுத்தால் மீறக்கூடாது

பத்து, இருபது ஆண்டுகளுக்கு முன்பு வந்த தமிழ் சினிமாக்களில் ஒரு டயலாக் அடிக்கடி வரும். ‘நான் வாக்கு கொடுத்து விட்டேன், அதை மீற மாட்டேன்’ என்பது தான் அந்த டயலாக். தனிமனிதர்களுக்கு மட்டுமல்ல, நிறுவனங்களின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான விஷயமாக இருப்பது இந்த டயலாக்கில் சொல்லப்படும் விஷயம்தான்.

ஆனால், இன்றைக்குப் பல நிறுவனங்களிடம் கொடுத்த வாக்கை காப்பாற்றியாக வேண்டும் என்கிற எண்ணம் குறைந்துகொண்டே வருகிறது. ஒரு நிறுவனத்திடம் ஒரு பொருளையோ, சேவையையோ பெறும்போது நிறுவனங்கள் தரும் வாக்குறுதியை நம்பித்தான் வாங்குகிறார்கள். பொருள் வாங்கிய பின் கொடுத்த வாக்குறுதி காப்பாற்றப்படாமல் போனால், வாடிக்கையாளர்கள் நம்பிக்கை இழந்து விடுவார்கள்.

இப்படி நம்பிக்கை இழக்கும் வாடிக்கையாளர்கள் வாயை மூடிக் கொண்டு சும்மா இருக்க மாட்டார்கள். தனக்குத் தெரிந்தவர்களிடம் எல்லாம் சொல்வார்கள். இந்தக் காலத்தில் அனைவரும் ஆன்லைனில் தங்கள் கருத்துகளை வெளியிட முடியும் என்பதால், குறிப்பிட்ட நிறுவனத்துக்கு எதிராகக் கருத்துகளைப் பதிவு செய்ய முடியும். இந்தக் கருத்து பலரையும் சென்றடைந்தால், அந்த நிறுவனத்தின் பொருளை வாங்குபவர்களின் எண்ணிக்கை குறையும். ஆனால், நீங்கள் கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் தீர்மானமாக இருந்தால், வாடிக்கை யாளர்கள் உங்களுடன் எப்போதும் சேர்ந்தே இருப்பார்கள்.

நீங்கள் செய்யும் தொழில் சிறிய அளவில் இருந்தாலும் அதை நியாயமாக, வாடிக்கையாளர்களை ஏமாற்றாமல் சேவை செய்ய நினைத்தாலே போதும், உங்கள் பிசினஸ் மென்மேலும் வளரும் என்பதில் சந்தேகமே இல்லை!

பிட்ஸ்

டந்த 21 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரக்கு மற்றும் சேவை வரி மூலம் ரூ.1.19 லட்சம் கோடி மத்திய அரசாங் கத்துக்குக் கிடைத்துள்ளது. 2019-ல் ஏப்ரலில் ரூ.1.13 லட்சம் கோடி வசூலானது!

பிட்ஸ்

ஞ்சலக வங்கியான இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க் வங்கியானது இன்னும் சிறப்பாகச் செயல்படு வதற்காக ரூ.2,000 கோடி புதிய மூலதனத்தை அளிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு