Published:Updated:

சிறிய வேலை... பெரிய வருமானம்... வெற்றி ரகசியம்..!

சக்சஸ் ஃபார்முலா!
பிரீமியம் ஸ்டோரி
சக்சஸ் ஃபார்முலா!

சக்சஸ் ஃபார்முலா!

சிறிய வேலை... பெரிய வருமானம்... வெற்றி ரகசியம்..!

சக்சஸ் ஃபார்முலா!

Published:Updated:
சக்சஸ் ஃபார்முலா!
பிரீமியம் ஸ்டோரி
சக்சஸ் ஃபார்முலா!

என் நண்பரின் விளம்பர நிறுவனத்துக்கு அண்மையில் சென்றிருந்தேன். விளம்பரங்களை வெளியிடுதல், பிரவுச்சர் வடிவமைத்தல், அவற்றை அச்சிடுதல் உள்ளிட்ட பல்வேறு வேலைகளை அவர் செய்து வந்தார்.

இராம்குமார் சிங்காரம்
இராம்குமார் சிங்காரம்

மிகச் சிறிய அளவில் தொடங்கி, சில ஆண்டுகளிலேயே, ஆண்டுக்கு 40 கோடி ரூபாய் வரை விற்று வரவு செய்யும் அளவுக்கு பெரிய விளம்பர நிறுவனமாக அதை வளர்த்தெடுத் திருந்தார்.

அவரோடு பேசிக்கொண்டிருந்தபோது அவர் செல்போனில் ஒரு போன்கால் வந்தது. 500 ரூபாய் மதிப்புள்ள ஒரு விசிட்டிங் கார்டு ஆர்டர் அது. அதையும் சிரித்த முகத்துடன் ஏற்றுக் கொண்டு, அந்த வேலையை உடனே செய்து தருவதாக உறுதி அளித்தார். எனக்கு ஒரே ஆச்சர்யம்.

‘‘நீங்கதான் இப்ப பெரிய நிறுவனமா வளர்ந்துட்டீங்களே... திரும்பவும் இந்தச் சின்ன வேலைகளை எல்லாம் எடுக்கணுமா?’’ என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்ன காரணம்...

சிறிய வேலை... பெரிய வருமானம்... வெற்றி ரகசியம்..!

‘‘என்னுடைய பெரிய வாடிக்கையாளர் சிறிய, சிறிய வேலை களைத் தருகிறபோது அதை நான் மறுக்க மாட்டேன். காரணம், அந்தச் சிறிய வேலைகளை நான் செய்ய மாட்டேன் என்று சொன்னால், அவர் வேறு நிறுவனத்தைத் தேடிப் போவார். அந்த நிறுவனத்தின் சேவை பிடித்திருந்தால் அவர் களிடமே பெரிய வேலையையும் என் வாடிக்கையாளர் தந்துவிடுவார். இது நானே அவருக்கு போட்டியாளரைத் தேடிச் செல்ல வைப்பதைப்போல ஆகிவிடும். சிறிய வேலை களில் லாபம் குறைவுதான்; வேலையும் அதிகமே. இருந்தாலும், போட்டியாளர்களை நான் எப்போதும் அனுமதிக்க மாட்டேன்.

மேலும், இப்படி சிறிய வேலைகளை எடுத்துதான் ஒவ்வொரு பெரிய வாடிக்கையாளரையும் பெற்றேன். எனவே, புதிதாக ஒரு வாடிக்கையாளர் வந்து சிறிய வேலையைத் தந்தாலும் தயங்காமல் செய்வேன். காரணம், நாளை அவர் பெரிய வாடிக்கையாளராக மாறலாம் இல்லையா?’’ என்று கேட்டார்.

அவர் வெற்றி பெற்றதன் காரணம் எனக்குப் புரிந்தது!