Published:Updated:

சின்ன மீனைப் போட்டு பெரிய மீன்..?

சக்சஸ் ஃபார்முலா!
பிரீமியம் ஸ்டோரி
சக்சஸ் ஃபார்முலா!

சக்சஸ் ஃபார்முலா!

சின்ன மீனைப் போட்டு பெரிய மீன்..?

சக்சஸ் ஃபார்முலா!

Published:Updated:
சக்சஸ் ஃபார்முலா!
பிரீமியம் ஸ்டோரி
சக்சஸ் ஃபார்முலா!

அண்மையில் என்னுடைய காரை சர்வீஸ் விட ஒரு முன்னணி பிராண்டின் சர்வீஸ் சென்டருக்குச் சென்றிருந்தேன். காரை நன்கு பார்த்த பிறகு, தோராய மாக 22,000 ரூபாய் வரை செலவாகும் என்றார்கள்.

இராம்குமார் சிங்காரம்
இராம்குமார் சிங்காரம்

நான் அதிர்ந்துபோனேன். “அவ்வளவு ஆகுமா?’’ என்று கேட்ட பின், ஒவ்வொன்றுக்கும் உத்தேசமாக ஆகும் செலவு பற்றிச் சொன்னார்கள். அதில் சிலவற்றை நான் வேண்டாம் என்று சொல்ல, இறுதியில் 17,000 ரூபாய் என்று சொல்ல, நானும் சரி என்று சொல்லிவிட்டு வந்தேன்.

சின்ன மீனைப் போட்டு பெரிய 
மீன்..?

மறுநாள் மாலையில் எனக்கு போன் வந்தது. “கார் ரெடி. 15,400 ரூபாய் பில் கட்டிவிடுங்கள்” என்றார்கள். எனக்கு ஆச்சர்யம். “17,000 ரூபாய் ஆகும் என்றீர்களே” என்றேன். “ஆமாம் சார், ஆனால், உங்களுக்காகக் கட்டணத்தை சற்று குறைத்திருக்கிறோம்” என்றார்கள்.

மகிழ்ச்சியுடன் வாகனத்தை டெலிவரி எடுத்து வந்தேன். பிறகு, அங்கே காரை சர்வீஸ் விட்ட இன்னொரு நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தபோதுதான் தெரிந்தது... அது அவர்களது வர்த்தக உத்தி என்று. எப்போதுமே ஆரம்பத்தில் கூடுதல் தொகை செலவாகும் என்று கொட்டேஷன் கொடுத்துவிட்டு கடைசியில் செலவைச் சற்றே குறைத்துக் காண்பிக்கும்போது வாடிக்கையாளர் அகமகிழ்ந்து போவார் என்ற உத்தியை அவர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள்.

இதே உத்தியை சில நகைக்கடை நிறுவனங்களும் சில பட்டுப்புடவைக் கடைகளும் சில சூப்பர் மார்க்கெட் நிறுவனங்களும் வெற்றிகரமாகப் பின்பற்றுகின்றன.

சற்று யோசித்துப் பாருங்கள். இந்த மாதிரி தள்ளுபடிகளால் நிறுவனத்துக்குக் கூடுதல் செலவுதான். ஆனால், இந்த செலவைச் செய்யத் தயங்கினால், வாடிக்கையாளரைத் திரும்பத் திரும்ப கடைக்கு வரச் செய்ய இன்னும் அதிகம் செலவு செய்ய வேண்டியிருக்கும்.

சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிக்கும் இந்த சக்சஸ் ஃபார்முலாதான் அவர்களை வாடிக்கையாளர்கள் தேடிவரக் காரணமாக இருக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism