Published:Updated:

சக்சஸ் ஃபார்முலா!

சக்சஸ் ஃபார்முலா
பிரீமியம் ஸ்டோரி
சக்சஸ் ஃபார்முலா

உங்கள் சிந்தனைக்கு

சக்சஸ் ஃபார்முலா!

உங்கள் சிந்தனைக்கு

Published:Updated:
சக்சஸ் ஃபார்முலா
பிரீமியம் ஸ்டோரி
சக்சஸ் ஃபார்முலா

இராம்குமார் சிங்காரம்

அண்மையில், சென்னையில் உள்ள ஒரு பிரபல ரீடெயில் ஸ்டோரின் உரிமையாளரைப் பார்க்க எங்கள் அலுவலக முக்கிய நிர்வாகிகளுடன் சென்றிருந்தேன். அங்கு தனி ஒரு கேபினில் ஸ்டோரின் ரிலேஷன்ஷிப் மேனேஜர் ஒருவர், கடைக்கு வரும் வி.ஐ.பி கஸ்டமர்களை வரவேற்று அமரவைத்து உபசரித்து, தனி ஊழியரை ஒதுக்கி, அவர்கள் வாங்க நினைத்து வந்த பொருள்களை எடுத்துக் கொடுக்கச் சொல்லிக் கொண்டிருந்தார்.

இராம்குமார் சிங்காரம்
இராம்குமார் சிங்காரம்

பொருள்களை வாங்கிய பிறகு, அவர்களுக்கு ஒரு சிறிய தொகையையும் டிஸ்கவுன்டாக வழங்கி அன்போடு அனுப்பி வைத்தார். வந்தவர்கள் உண்மையிலேயே வி.ஐ.பிதானா என்று அவர் ஒரு முறைகூட சரிபார்க்கவே இல்லை. அவரது செயல் களைக் கண்ணாடி தடுப்பு வழியாகப் பார்த்துக்கொண்டிருந்த எங்களுக்கு இது ஆச்சர்யத்தைத் தந்தது.

சக்சஸ் ஃபார்முலா!

இது பற்றி அந்த ஸ்டோரின் உரிமையாளரிடம் கேட்டோம். ‘‘வி.ஐ.பி என்ற ஈகோவோடு வருபவர்கள்தான் எங்களது முக்கியமான கஸ்டமர்கள். அவர்களை சந்தேகப்பட்டால் எங்கள் வியாபாரம் போய்விடும். அவர்கள் உண்மையிலேயே வி.ஐ.பி-ஆக இல்லாமல் இருந்தாலும்கூட, நாங்கள் அவர்களுக்குத் தரும் முக்கியத்துவத்தைப் பார்த்து ஒரு வி.ஐ.பி போல அதிக பொருள்களை வாங்குவார்கள்.அவர்களுக்கு சிறப்பு டிஸ்கவுன்ட் தரும்போது அதைப் பெருமையாகச் சொல்லி மகிழ்வார்கள். திரும்பத் திரும்ப எங்கள் கடைக்கே வருவதுடன், எங்களது விசிட்டிங் கார்டைக் கொடுத்து வேறு சிலரையும் அனுப்பி வைப்பார்கள். வி.ஐ.பி என்ற அவர்களது ஈகோதான் எங்களுக்கு வியாபாரமே’’ என்றார்.

விற்பனை என்பது, வாடிக்கையாளர்கள் விரும்பும் பொருள்களை வழங்குவதில் மட்டுமல்ல, அவர்கள் சுமந்துவரும் ஈகோவைத் திருப்திப்படுத்துவதிலும் இருக்கிறது. இந்த சக்சஸ் ஃபார்முலாவைப் புரிந்துகொண்ட தால், திரும்பத் திரும்ப வரும் பல ஆயிரம் வாடிக்கை யாளர்களை அந்த நிறுவனம் பெற்றுள்ளது. உங்கள் வாடிக்கையாளர்களின் ஈகோவை மதித்து நடத்துகிறீர்களா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism