மாற்றத்துக்கு ஏற்றவாறு மாறிக்கொண்டே இருந்தால்தான் வியாபாரத்தில் நிலைத்து நிற்க முடியும். ஏனெனில், உலகம் முன்பைவிட வேகமாக மாறிக்கொண்டே இருக்கிறது. நிரூபிக்கப்பட்ட கோட்பாடுகளையெல்லாம் தொழில்நுட்பம் மாற்றி எழுதிக்கொண்டிருக்கிறது. ஐந்து வருடங்களுக்கு முன்னர் செல்லுபடியான அணுகுமுறை இப்போது செல்லுபடியாகவில்லை. இந்தச் சூழலில் பிசினஸ் செய்வது எப்படி என்பது குறித்த ஒரு கருத்தரங்கை மெட்ராஸ் மேனேஜ்மேன்ட் அசோசியேஷன் (MMA) ஏற்பாடு செய்திருந்தது.

இந்தியாவின் முக்கியமான நிறுவனங்களை நடத்திவருபவர்கள் இந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசினார்கள். இன்ஃபோசிஸ் நிறுவனம் தொடங்கி, இந்தியாவின் பல பெரிய நிறுவனங்களின் போக்கை நிர்ணயித்த மோகன்தாஸ் பை (Mohandas Pai) இந்தக் கருத்தரங்கில் பேசிய பேச்சு பலரையும் நிமிர்ந்து உட்காரவைத்தது.

“ரிலையன்ஸின் ஜியோ, நம் நாட்டில் ஒரு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்திவிட்டது. நம் நாட்டில் பாதிக்குப் பாதிபேர், அதாவது 62 கோடி பேர் இன்டர்நெட் இணைப்பைப் பயன்படுத்துகிறார்கள். இவர்களில் 50 கோடி பேர் ஸ்மார்ட்போன் வைத்திருக்கிறார்கள். அதனால், மக்களிடையே இ-காமர்ஸின் பயன்பாடு வேகமாக அதிகரித்துவருகிறது. கடந்த ஆண்டு மட்டும் நம் நாட்டில் ரூ.3.27 லட்சம் கோடி அளவுக்கு இ-காமர்ஸ் மூலமாக வியாபாரம் நடந்திருக்கிறது. சதவிகிதக் கணக்கில் சொன்னால், இது 32%. வரும் காலங்களில் இது மேலும் அதிகரிக்கும். அதனால் இ-காமர்ஸில் கவனம் செலுத்தாத வியாபார நிறுவனங்கள் காணாமல் போய்விடும்’’ என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.

மெக்கின்ஸியைச் சேர்ந்த அங்கூர் பூரி ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ், பிசினஸ் உலகில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விளக்கினார். “ `இது ஏதோ தொழில்நுட்பம் சார்ந்த விஷயம்... நமக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை’ என யாரும் இதை ஒதுக்கிவைத்துவிட முடியாது. இன்னும் மூன்று வருடங்களில் இந்தத் துறை ரூ.50 லட்சம் கோடி மதிப்புள்ள துறையாக மாறிவிடும். 2.2 கோடி பேருக்கு இந்தத் துறை வேலை வாய்ப்பளிக்கும். சமூகத்திலும், நம் பொருளாதாரத்திலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்” என்றார் அவர்.

புகழ்பெற்ற பொருளாதார வல்லுநர் டாக்டர் அஜித் ரானடே இந்தக் கருத்தரங்கில் பேசினார். “எந்த ஒரு நன்மையிலும் தீமையுண்டு. தீமையிலும் நன்மையுண்டு. இது பொருளாதாரத்துக்கும் பொருந்தும். ‘சர்ஜிக்கல் மாஸ்க் தேவை. விலையைப் பற்றிக் கவலை இல்லை’ என்று சீனாவிலிருந்து போன் கால்கள் நம் நாட்டுக்கு இப்போது வந்தவண்ணம் இருக்கின்றன. கொரோனா வைரஸ் சீனாவின் பொருதாளாரத்தை மட்டுமல்ல, உலகப் பொருளாதாரத்தையே பாதிக்கக்கூடும் என்ற அச்சம் ஒருபுறம் இருந்தாலும், இன்னொருபுறம் அது இந்தியாவுக்குப் பெரிய வாய்ப்பாகவும் மாறலாம் என்பதற்கு இது ஒரு சிறிய உதாரணம்” என்றார்.

அப்படியென்றால் இது போன்ற சவாலான காலகட்டத்தில் நடுத்தர வர்க்கத்தினர், எதில் முதலில் முதலீடு செய்யலாம் என்ற கேள்விக்கு அவர் சொன்ன பதில், `கல்வி.’ அதற்கான காரணத்தையும் அவர் விளக்கினார். “சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் நீங்கள் வீடு, நிலம், நகை என்று எதில் முதலீடு செய்திருந்தாலும், அதிலிருந்து உங்களுக்கு என்ன வருமானம் கிடைக்கிறது என்று பாருங்கள். அடுத்ததாக, அதே போன்ற ஒரு தொகையை நீங்கள் கல்வியில் முதலீடு செய்திருந்தீர்கள் என்றால், அது உங்களுக்கு எந்த அளவுக்கு வருமானம் தருகிறது என்று பாருங்கள். நீங்கள் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் வாங்கிய சம்பளத்தைவிட, உங்களின் சம்பளம் இப்போது பன்மடங்கு அதிகம் என்பதுதானே உண்மை! கல்விதானே அந்த வேலையை உங்களுக்குப் பெற்றுத் தந்தது. அதனால் கல்வியே மிகச் சிறந்த முதலீடு” என்றார்.

“வரும் காலங்களில் இ-காமர்ஸில் கவனம் செலுத்தாத வியாபார நிறுவனங்கள் காணாமல் போய்விடும்!”

மாறிவிட்ட இந்தக் காலத்தில், குடும்ப உறுப்பினர்கள் நிர்வகிக்கும் பிசினஸ் எந்த மாதிரியான சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று ஒரு விவாதம் நடைபெற்றது. இதில் ஹீரோ என்டர்பிரைஸைச் சேர்ந்த சுனில் காந்த் முஞ்சால், அப்போலோ மருத்துவமனையைச் சேர்ந்த ப்ரீத்தா ரெட்டி, ஹேவல்ஸ் நிறுவனத்தின் அனில் ராய் ஆகியோர் தங்கள் குடும்பத்தையே உதாரணமாகக் காட்டி, பல கேள்விகளுக்கு பதில் சொன்னார்கள்.

ஹீரோ என்டர்பிரைஸ் என்பது பல கோடி ரூபாய் புரளும் நிறுவனம் என்றாலும், அதைத் தொடங்கிய சுனில் காந்த் முஞ்சாலின் அப்பா பாகிஸ்தான் பிரிவினையின்போது தன் சகோதரர்களுடன் அகதியாக இந்தியா வந்தவர். டெல்லி, ஆக்ரா என்று சுற்றிவிட்டு, கடைசியில் அவர் குடியேறிய இடம் பஞ்சாப் மாநிலத்தில் லூதியானா. அவர் பலத்த போராட்டங்களுக்கு இடையில் வியாபாரத்தை நல்ல நிலைக்குக் கொண்டுவந்த கதையை சுனில் பகிர்ந்துகொண்டார் .

அண்ணன், தம்பிகள் ஒற்றுமையாக பிசினஸ் நடத்துவது எப்படி, அடுத்த சந்ததியினர் தலையெடுக்கும்போது அதே கட்டுக்கோப்புடன் பிசினஸ் நடத்துவது எப்படி என்பது பற்றியும் இந்த அமர்வில் சுனிலும் அனிலும் பகிர்ந்து கொண்டார்கள். சகோதரிகளும் அவர்களின் வாரிசுகளும் தலைமுறைகள் தாண்டி ஒன்றாக இணைந்து பிசினஸ் நடத்துவது பற்றி ப்ரீத்தா ரெட்டி தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

பிசினஸ் வெற்றி சூட்சுமங்களைச் சொல்வதாக இருந்தது இந்தக் கருத்தரங்கு!

வேல்ஸ் - படங்கள்: வருண்குமார்