Published:Updated:

`எல்.ஐ.சி பங்கு விற்பனையால் ரூ.90,000 கோடி திரட்ட முடியும்!' - தலைமைப் பொருளாதார ஆலோசகர்

பொருளாதார ஆலோசகர் கே.வி.சுப்ரமணியன்
பொருளாதார ஆலோசகர் கே.வி.சுப்ரமணியன்

2020-21 பட்ஜெட்டில், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகளில் அரசாங்கத்தின் பங்களிப்பை குறிப்பிட்ட அளவு விலக்குவதன்மூலம் சுமார் ரூ.2.10 லட்சம் கோடி திரட்டுவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

மத்திய அரசின் வசமுள்ள எல்.ஐ.சி பங்குகளில், 6-7% பங்குகளை விற்பனை செய்வதன்மூலம் 90,000 கோடி ரூபாயைத் திரட்ட முடியுமென்று தலைமைப் பொருளாதார ஆலோசகர் கே.வி.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். அரசின் வசமுள்ள எல்.ஐ.சி நிறுவனப் பங்குகளில், குறிப்பிட்ட பகுதியை விற்பனை செய்யவுள்ளதாக நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவித்தபின்பு, அரசு தரப்பில் வெளிவந்துள்ள முதல் கருத்து இதுவாகும்.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்
vikatan

நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாட்டை ஊக்குவிக்கும்பொருட்டு, அவற்றின் பங்குகளைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தனியாருக்கு விற்பனைசெய்து, தனியாரின் பங்களிப்பை அதிகரிக்கும் செயல்திட்டத்தை தொடர்ச்சியாக மத்திய அரசு முன்னெடுத்துவருகிறது. அருண் ஜெட்லி நிதியமைச்சராகப் பொறுப்பேற்றபோதே அதற்கான அறிவிப்பை வெளியிட்டார். பொதுத்துறை நிறுவனங்கள் மூடப்பட்டால், ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலை இழப்பை சந்திக்கக்கூடும். அதைத் தவிர்ப்பதற்காக, அவற்றைத் தனியார்மயமாக்குவதே சிறந்த முடிவென்று தெரிவித்தார்.

எல்.ஐ.சி  ஐ.பி.ஓ... சரியா, தவறா?

அப்போதிருந்தே பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுவருகிறது. அவரைப்போன்றே நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் தனியார்மயமாக்குவதில் தீவிரம்காட்டிவருகிறார். தற்போது, நல்ல நிலையில் இயங்கும் எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்குகளில் கணிசமான பகுதியை விற்பனை செய்வதன்மூலம் நிதி திரட்ட முடிவெடுக்கப்பட்டுள்ளது.

எல்.ஐ.சி
எல்.ஐ.சி
vikatan

அதன்படி, 2020-21 பட்ஜெட்டில், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகளில் அரசாங்கத்தின் பங்களிப்பை குறிப்பிட்ட அளவு விலக்குவதன்மூலம், சுமார் ரூ. 2.10 லட்சம் கோடி திரட்டுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் ஒருபகுதியாக, அரசின் வசமுள்ள எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்குகளில் 6-7% பங்குகளை விற்பதன்மூலம் ரூ.90,000 கோடிவரை நிதி திரட்டமுடியுமென்று மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் தனது கணிப்பை வெளியிட்டுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு