Published:Updated:

NASDAQ-ல் களமிறங்கும் பைஜுஸ்; ₹28,000 கோடி நிதி திரட்ட முடிவு!

Byjus
News
Byjus

நல்ல வளர்ச்சியைக் கண்டு வரும் பைஜுஸ், அமெரிக்க பங்குச் சந்தைக்குள் நுழைய சர்ச்சில் கேப்பிட்டல் நிறுவனத்துடன் கைகோர்த்திருக்கிறது. பைஜுஸ் நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு 48 பில்லியன் டாலராக இருக்கும் என சர்ச்சில் கேப்பிட்டல் நிறுவனம் மதிப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்தியாவில் செயல்பட்டு வரும் பிரபல இணையவழி கல்வி கற்பிக்கும் நிறுவனம் பைஜுஸ். பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் இந்த நிறுவனம், அமெரிக்க பங்குச் சந்தையில் கால்பதிக்கத் திட்டமிட்டு, அதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கெனவெ ஒரு தனி நிறுவனத்தைத் தொடங்கி, அதன்மூலம் புதிதாக நிதி திரட்டும் நடவடிக்கையில் இறங்கி இருக்கிறது பைஜூஸ் நிறுவனம்.

கடந்த ஆண்டு முழுவதும் உலகையே கொரோனா வைரஸ் அச்சுறுத்தியபோது, பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டதால், மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாயினர்.

Online Class (Representational Image)
Online Class (Representational Image)
Pixabay

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்த நிலையில் , பல மாணவர்கள் ஆன்லைன் மூலம் கல்வி கற்க முயற்சி செய்ததால், பைஜுசின் வாடிக்கையாளர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துவிட்டது. 50 மில்லியன் பதிவு செய்யப்பட்ட மாணவர்கள் மற்றும் 3.5 மில்லியன் சந்தாதாரர்கள் கொண்ட நிறுவனமான பைஜூஸ் நிறுவனம் உயர்ந்திருக்கிறது.

இந்த நிறுவனம் அபாரமாக வளர்ந்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில், அமெரிக்க பங்குச் சந்தைக்குள் நுழைய சர்ச்சில் கேப்பிட்டல் நிறுவனத்துடன் கைகோர்த்திருக்கிறது. பைஜுஸ் நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு 48 பில்லியன் டாலராக இருக்கும் என சர்ச்சில் கேப்பிட்டல் நிறுவனம் மதிப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், சுமார் 4 பில்லியன் டாலர் அளவுக்கு புதிய நிதி உருவாக்கப்படும் நிறுவனத்தின் மூலம் திரட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கான பேச்சுவார்த்தைகள் ஒருபக்கம் நடந்துவரும் நிலையில், பைஜூஸ் நிறுவனம் இந்தியப் பங்குச் சந்தைக்குள் அடுத்த ஆண்டு நுழையவிருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன.

இந்த நிதியாண்டில் மட்டுமே இந்தியாவில் பேடிஎம், நைகா மற்றும் ஸொமேட்டோ போன்ற மிகப் பிரபலமான நிறுவனங்கள் தங்கள் பங்குகளை பங்குச் சந்தைக்குள் வெளியிட்டு இருக்கின்றன.

Stock Market
Stock Market
Photo by Nick Chong on Unsplash

இந்த ஆண்டின் முற்பகுதியில், பைஜுஸ் உடன் இணைந்து பல இந்திய ஸ்டார்ட்அப் தங்கள் நிறுவனங்களை நேரடியாக வெளிநாட்டு பங்குச் சந்தைகளில் பட்டியலிட அரசாங்கம் வழிவகை செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தைச் சேர்ந்த ஃப்ரெஷ்ஒர்க் நிறுவனம் சமீபத்தில் அமெரிக்கப் பங்குச் சந்தையில் தனது பங்கை பட்டியலிட்டது. பைஜூஸ் நிறுவனம் அப்படிச் செய்யாமல், சிறப்பு நிறுவனம் ஒன்றை உருவாக்கி, அதன்மூலம் நிதி திரட்ட முடிவு செய்துள்ளது. பைஜூஸின் இந்த முயற்சி வெற்றி பெறுமா என்பதைப் பொருத்திருந்து பார்ப்போம்.