Published:Updated:

இந்திய அரசின் 200 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கிய கெய்ர்ன் நிறுவனம்; அடுத்து என்ன?

Cairn Energy
Cairn Energy

கெய்ர்ன் தொடர்பான இந்தப் பிரச்னையில் இந்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதை பொருளாதார வல்லுநர்களும், உலக நாடுகளும் உற்று நோக்குகின்றன.

பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரிஸ் நகரில் இருக்கும் இந்திய நாட்டிற்கு சொந்தமான 20 சொத்துக்களைக் கையகப்படுத்த பிரான்ஸ் நாட்டு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாக கெய்ர்ன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து அந்த நிறுவனம் 20 மில்லியன் பிரிட்டன் பவுண்ட் மதிப்புள்ள இந்திய அரசின் சொத்துக்களைக் கையகப்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளது.

நீதிமன்றம்
நீதிமன்றம்

கெய்ர்ன் நிறுவனம், 2006-07-ம் நிதி ஆண்டில் தமது இந்திய சொத்துகளை மறுசீரமைப்பு செய்தபோது, அந்த நிறுவனம் ரூ.10,247 கோடி வரி செலுத்த வேண்டும் என்று இந்திய அரசு கணக்கிட்டுக் கூறியது. ஆனால், கெய்ர்ன் நிறுவனம் ஆரம்பத்திலிருந்தே இந்த வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தது. ``இந்திய அரசின் இந்தக் கணக்கீடு இரட்டை வரிவிதிப்பு விதிகளின்கீழ் வருகிறது. ஒரு ஆதாயத்துக்கு இரண்டு வரிகள் விதிக்கப்படக் கூடாது" என்று இதற்குத் தடை கோரியது.

ஆனால், இந்திய அரசு தடை விதிக்க மறுத்துவிட்டது. அதன் தொடர்ச்சியாக கெய்ர்ன் நிறுவனத்துக்கு இந்தியாவில் உள்ள சொத்துகளை விற்றும் அந்த நிறுவனத்தின் டிவிடெண்ட் தொகையை நிறுத்திவைத்தும், அந்த நிறுவனத்துக்குத் திருப்பி தரவேண்டிய வரித்தொகையை நிறுத்திவைத்தும் இந்த வரித் தொகையை இந்திய அரசு அந்த நிறுவனத்திடமிருந்து வசூலித்து விட்டது.

Cairn Energy
Cairn Energy
`உங்கள் சொத்துகளை கையகப்படுத்துவோம்!' - இந்திய அரசுக்கு மிரட்டல் விடுக்கும் கெய்ர்ன்... ஏன்?

இந்திய அரசு அவ்வாறு செய்தது தவறு என்று கூறி சர்வதேச நடுவர் தீர்ப்பாயத்தில் அந்த நிறுவனம் மேல்முறையீடு செய்தது. அந்த முறையீட்டுக்கான தீர்ப்பு கடந்த டிசம்பர் மாதம் 20-ம் தேதி வெளிவந்தது. `தி ஹேக்' நகரில் உள்ள மூன்று நீதிபதிகளைக் கொண்ட நடுவர் மன்றம் தமது தீர்ப்பை வழங்கியது. இதில், இந்திய அரசு வரி விதித்தது இந்தியா - ஐக்கிய ராஜ்ஜியம் (United Kingdom) நாடுகளுக்கான இரு நாட்டு ஒப்பந்தத்தின்படி தவறு என்று கூறி வட்டி மற்றும் நீதிமன்ற செலவுகளையும் சேர்த்து இந்திய அரசு கெய்ர்ன் நிறுவனத்துக்கு 1.4 பில்லியன் டாலர் வழங்க வேண்டும் என்று ஆணையிடப்பட்டது.

இதை எதிர்த்து இந்தியா மேல்முறையீடு செய்துள்ளது. இந்தக் காலதாமத்தை எதிர்த்தும் நிறுவனம் சார்பில் இந்திய அரசுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது

இதில் முக்கியமான திருப்பமாக இந்திய அரசின் சொத்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கெய்ர்ன் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பிரச்னை பற்றி கருத்து தெரிவித்துள்ள நமது நாட்டு அமைச்சகம் இந்த வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. இந்திய சொத்துக்களைக் கையகப்படுத்தியது பற்றி முழு தகவல்கள் இன்னும் தமக்கு கிடைக்கவில்லை. இந்த பிரச்னையை சட்ட ரீதியாக எதிர்கொள்ள இருப்பதாகவும் அமைச்சக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Cairn Energy
Cairn Energy

இந்தப் பிரச்னையில் இந்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதை பொருளாதார வல்லுநர்களும், உலக நாடுகளும் உற்று நோக்குகின்றன. இந்த நடவடிக்கையில் கெய்ர்ன் நிறுவனம் பெற்றுள்ள வெற்றி பல பெரிய கார்பரேட் நிறுவனங்கள் சட்டத்தில் உள்ள ஓட்டைகளைப்பபயன்படுத்தி வரி மோசடி செய்வதற்கு உதவி செய்யும். அதனால் இந்த பிரச்னையில் சட்ட ரீதியாக வெற்றி பெறுவது இந்திய அரசுக்கு மிகவும் முக்கியம் ஆகும்.

இந்திய அரசு தமது மேல்முறையீட்டில் வெற்றி பெறுவதே இந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்கு உதவிகரமாக இருக்கும்.

அடுத்த கட்டுரைக்கு