Published:Updated:

விரைவில் ₹1 லட்சத்தைத் தொடுமா ஒரு பவுன் தங்கம் விலை; புதிய கணிப்பு சொல்வது என்ன?

``தற்போதைய நிலையில், தங்கம் உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் தொழிலாளர் பற்றாக்குறை, தொழிலாளர்களுக்கு உண்டான செலவு, மூலதனப் பற்றாக்குறை, அதிகரிக்கும் இதர செலவுகள் உள்ளிட்ட பல காரணிகளினால், தங்கத்துக்கான உற்பத்திச் செலவு கணிசமாக அதிகரிக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது."

தற்போது விழாக்காலம் என்பதால், தங்கத்தின் விலை ஏற்றத்தில் உள்ளது. ஒன்றன்பின் ஒன்றாக அலுமினியம், இயற்கை எரிவாயு ஆகிய கமாடிட்டிகளின் விலையானது கொரோனா தாக்கத்திற்குப்பின்பு பெரிய அளவில் அதிகரித்து வருகிறது.

கனடாவின் கோல்டு மைனிங் நிறுவனமான `கோல்டுகார்ப் இன்க்' நிறுவனத்தின் முன்னாள் தலைவர்களான டேவிட் கரோஃபாலோ மற்றும் ராப் மெக்வென், ``உலகில் தற்போது பணவீக்கமானது அதிகரித்து வருகிறது. பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளும் இதனை உன்னிப்பாக கவனித்துவரும் நிலையில், இந்தப் பணவீக்கமானது பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு ஆதரவாக அமைய வாய்ப்பு இருக்கிறது. அதனால் தங்கத்தின் விலை அதிகரிக்கும்.

GoldCorp
GoldCorp
Twitter Image

ஒரே மாதத்தில் ரூ.57,000-ஐ தொடும்?

தங்கத்தின் விலையானது தொடர்ந்து மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ள நிலையில், நீண்ட கால நோக்கில் இன்னும் அதிகரிக்கலாம் என்றும், தற்போது 1 டிராய் அவுன்ஸ் (31.10 கிராம் தங்கம்) 1,800 டாலர்களாக உள்ள நிலையில், ஒரே மாதத்தில் 3,000 டாலர்களாக (ரூ.2,25,450) உயர வாய்ப்புள்ளது என்றும், இது நீண்டகால நோக்கில் 5,000 டாலர்களாக (ரூ.3,75,750) அதிகரிக்கலாம்" என்றும் தெரிவித்துள்ளனர்.

இவர்களது கணிப்பின்படி, இன்னும் ஒரு மாதத்தில் ஒரு கிராம் தங்கத்தின் விலை சுமார் ரூ.7,250 வரையும், ஒரு சவரன் தங்கம் (8 கிராம்) சுமார் ரூ.57,990 வரையும் (27.10.2021-ல் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.36,064) உயரும் என்றும் தெரிகிறது.

`100 ரூபாய்க்கும் தங்கம் வாங்கலாம்!' - முதலீட்டாளர்களுக்கு வரப்பிரசாதமா டிஜிட்டல் கோல்டு?

நீண்டகால அடிப்படையில் சொல்லியிருக்கும் கணிப்பின்படி கணக்கிட்டால், ஒரு சவரன் தங்கம் சுமார் ரூ.97,000-யைத் தொடும் என்றும் தெரிகிறது. அதனால்தான் இந்த செய்தி தங்கம் துறை சார்ந்தவர்களின் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

``தற்போதைய நிலையில், தங்கம் உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் தொழிலாளர் பற்றாக்குறை, தொழிலாளர்களுக்கு உண்டான செலவு, மூலதனப் பற்றாக்குறை, அதிகரிக்கும் இதர செலவுகள் உள்ளிட்ட பல காரணிகளினால், தங்கத்துக்கான உற்பத்திச் செலவு கணிசமாக அதிகரிக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. இதனால் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை நோக்கிக் கொண்டு செல்லும்" என்று டேவிட் கரோஃபாலோ குறிப்பிடுகிறார்.

Gold (Representational Image)
Gold (Representational Image)
Photo by vaibhav nagare on Unsplash
Sovereign Gold Bond: தொடங்கிய தங்க கடன் பத்திர விற்பனை; வாங்குவதால் என்ன நன்மை?

தங்கம்விலைபுதிய உச்சத்தைத்தொடுமா?

தங்கம் விலை இனி என்ன ஆகும், புதிய உச்சத்தைத் தொடுமா என சென்னை தங்க நகை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஜெயந்திலால் ஜலானியிடம் கேட்டோம்.

``கடந்த 2020-ம் ஆண்டு உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை, பிறகு கொஞ்சம் குறைந்தாலும், அதிகளவில் குறைந்துவிடல்லை. கொரோனா காலகட்டத்தில் 30-35% வரையில் தங்கத்தின் விலை அதிகரித்தது. இனிவரும் நாட்களிலும் தங்கத்தின் விலை ஏற்றத்தில்தான் இருக்கும். குறிப்பாக, 2022-ம் ஆண்டின் ஜூன் மாதத்துக்குப்பிறகு தங்கத்தின் விலை மீண்டும் ஒரு புதிய உச்சத்தைத் தொடும். தற்போதைய நிலையில் ஒரு பவுன் தங்கம் விலை அதிகபட்சமாக ரூ.43,330 வரை உயர்ந்திருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உலக நாடுகளின் அமைதியின்மை, போர்ச் சூழல், அரசியல் பதற்றம், இயற்கை சீற்றங்களினால் பேரழிவு போன்ற பல்வேறு காரணிகள் தங்கத்தின் விலையில் நிச்சயம் பிரதிபலிக்கும். இது போன்ற அசாதாரணமாக சூழ்நிலைகளில் தங்கம் விலை அதிகரிக்கத்தான் வாய்ப்புள்ளதே தவிர இறங்காது. இன்னும் சொல்லப் போனால், கொரோனா, மக்களுக்கு தங்கம் மற்றும் தங்கம் சார்ந்த முதலீடுகளின் மீது நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது.

ஜெயந்திலால்
ஜெயந்திலால்

உலகத்தின் உண்மையான கரன்சி என்றால் அது தங்கம்தான். ஒரு நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் சக்தி தங்கத்திற்கு இருப்பதால், என்றைக்குமே தங்கத்திற்கு மவுசு அதிகம்தான்" என்றார் ஜெயந்திலால் ஜலானி.

நீண்ட காலத்துக்குத் தங்கம் வாங்க நினைப்பவர்கள், மேற்சொன்ன விஷயங்களை எல்லாம ஆராய்ந்து பார்த்து முடிவெடுக்கலாமே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு