Published:Updated:

சிறிய அட்டைப்பெட்டி தயாரிப்பிலும் அள்ளலாம் லாபம்!

அட்டைப்பெட்டி தயாரிப்பு
பிரீமியம் ஸ்டோரி
அட்டைப்பெட்டி தயாரிப்பு

தொழில் பழகுவோம் வாங்க! - 18

சிறிய அட்டைப்பெட்டி தயாரிப்பிலும் அள்ளலாம் லாபம்!

தொழில் பழகுவோம் வாங்க! - 18

Published:Updated:
அட்டைப்பெட்டி தயாரிப்பு
பிரீமியம் ஸ்டோரி
அட்டைப்பெட்டி தயாரிப்பு

ஒரு பொருளைத் தயாரிப்பதைக் காட்டிலும், அதைப் பாதுகாப்பான முறையில் வாடிக்கையாளர்களிடம் கொண்டு போய் சேர்ப்பது மிக முக்கியம். இந்த பேக்கேஜிங் தேவைக்காக நாம் பயன்படுத்தும் அட்டைப்பெட்டி உறுதியாக இருப்பதுடன், வாடிக்கை யாளர்களை ஈர்க்கும் வகையில் அதன் வடிவமைப்பு மற்றும் டிசைன் இருக்க வேண்டியதும் அவசியம்.

சிறிய அட்டைப்பெட்டி தயாரிப்பிலும் அள்ளலாம் லாபம்!

இது போன்ற தேவைகளுக்குப் பெரும்பாலும் அட்டைப் பெட்டி களே பயன்படுத்தப்படும் சூழலில், அழகு சாதனப் பொருள்கள், உணவு மற்றும் மருந்துப் பொருள்கள் போன்ற குறைவான எடை கொண்ட பயன்பாட்டுப் பொருள்களை பேக்கேஜிங் செய்ய உதவும் ‘Carton Box’ தயாரிப்புக்குக் கணிசமான தேவைகளும் தொழில் வாய்ப்பு களும் இருக்கின்றன. இதுகுறித்த வழிகாட்டுதல்களை இந்த வாரம் வழங்குகிறார், திருச்சியைச் சேர்ந்த தொழில் ஆலோசகரான ராமசாமி தேசாய்.

 ராமசாமி தேசாய்
ராமசாமி தேசாய்

கார்ட்டன் பாக்ஸுக்கான முக்கியத் துவம்...

காகித ஆலைகளில் தயாராகும் கிராஃப்ட் பேப்பரைக் கிடைமட்ட மாகவும் செங்குத்தாகவும் மாறி மாறி அடுக்கி, தடிமனான தாளைக் கொண்டு தயாரிக்கப் படுவதே Corrugated Box. இவை மிகவும் உறுதியுடன் இருப்பதால், ஃப்ரிட்ஜ், வாஷிங்மெஷின் உள்ளிட்ட அதிக எடையிலான பொருள்களை பேக்கேஜிங் செய்ய இந்த அட்டைப்பெட்டியைப் பயன்படுத்தலாம்.

ஆனால், கார்ட்டன் பாக்ஸ் எனப்படும் சிறிய அளவிலான அட்டைப் பெட்டியை, மிகவும் எடை குறைவான பொருள்களை பேக்கிங் செய்ய மட்டுமே பயன்படுத்த முடியும். சோப்பு, க்ரீம், ஷாம்பு, பற்பசை (Paste), உணவு மற்றும் மருந்துப் பொருள்கள் உள்ளிட்ட பயன்பாட்டுப் பொருள்கள் பலவும் கார்ட்டன் பாக்ஸைக் கொண்டே பேக்கேஜிங் செய்யப் படுகின்றன.

சுற்றுச்சூழலுக்கு உகந்தது...

காகிதத்தால் தயாராகும் பேப்பர் போர்டுதான், Carton Box தயாரிப்புக்கான பிரதான மூலப்பொருள் ஆகும். இதைக் கொண்டு தயாரிக்கப்படும் அட்டைப் பெட்டி களாலும், இதன் தயாரிப்பு முறையாலும் சுற்றுச்சூழலுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.

சந்தைத் தேவையைப் பொறுத்து, வித்தியாசமான வடிவம் மற்றும் அளவுகளில் இந்த பாக்ஸைத் தயாரிக்கலாம். தயாரிப்பின்போது நிராகரிக்கப்படும் காகித அட்டையை மீண்டும் மறுசுழற்சிக்கு உட்படுத் தலாம். Carton Box மற்றும் Corrugated Box தயாரிப்பு முறை வித்தியாசமானது என்பதால், இவ்விரண்டு உற்பத்தி முறை களும் வெவ்வேறானவை.

இயந்திரப் பயன்பாடு பிரபல மாகும் முன்பு, கைகளாலேயே அட்டைப்பெட்டி தயாரிக்கப் பட்டதால் அப்போது மனித உழைப்பு அதிகம் தேவைப் பட்டது. ஆனால், தற்போது தானியங்கி இயந்திரங்களின் மூலம் ஒரு மணி நேரத்தில் ஆயிரக்கணக்கான அட்டைப் பெட்டிகளைத் தயாரிக்க முடியும்.

சிறிய அட்டைப்பெட்டி தயாரிப்பிலும் அள்ளலாம் லாபம்!

தயாரிப்பு முறை...

200 ஜி.எஸ்.எம் (Gram per Square Meter) கொண்ட பேப்பர் போர்டு பயன்படும். அதில், பிரின்டிங் மற்றும் லேமினேஷன் செயல்பாடுகளை முடித்த பின்னர், டையிங் இயந்திரத்தைப் பயன்படுத்தி உரிய வடிவத்துக்கு ஏற்ப தேவையான பேப்பரை மட்டும் கட் செய்து, தேவையற்ற பாகத்தை நீக்கிவிடலாம்.

பிறகு, தேவையான நீள அகலத்துக்கு ஏற்ப அட்டையை மடித்து (Folding), Gluing செயல் முறைக்கு உட்படுத்துவதன் மூலம், பேப்பர் போர்டில் பசை தடவி, இறுதியில் அவை அட்டைப்பெட்டியாக மாற்றப் படும்.

சிறிய அட்டைப்பெட்டி தயாரிப்பிலும் அள்ளலாம் லாபம்!

விற்பனை வாய்ப்பு...

பலதரப்பட்ட பொருள்களை உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்களுக்கும், மார்க் கெட்டிங் விஷயத்தில் முக்கியத் துவம் வாய்ந்த செயல் முறையாக கார்ட்டன் பாக்ஸ் பயன்பாடு உதவுகிறது. இத்தகைய அட்டைப் பெட்டிக்கான தேவை நாள் தோறும் அதிகரித்துவரும் நிலையில், தமிழகத்தில் இந்த பாக்ஸ் தயாரிப்பு நிறுவனங்கள் குறைவாகவே இருக்கின்றன.

நுகர்வோர் பொருள்கள் (Fast Moving Consumer Goods) தயாரிக்கும் நிறுவனங்களுடன் தொழில் வாய்ப்பைப் பலப்படுத்தினால், தடையின்றி உற்பத்தியை மேற்கொண்டு பயனடையலாம்.

சிறப்பம்சங்கள்...

* Carton Box விலை குறை வானது.

* உற்பத்திப் பொருளுக்கு ‘ரிச் லுக்’ மதிப்பை உறுதி செய்யும்.

* தயாரிப்பு முறை எளிமை யானது.

வங்கிக் கடனுதவி...

பாரதப் பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP) மற்றும் ‘நீட்ஸ்’ திட்டத்தின் கீழ் 24 லட்சம் ரூபாய் கடனுடன் (Term Loan) 25% (5.87 லட்சம் ரூபாய்) மானியம் பெறலாம்.

மாதத்துக்கு ரூ.20 லட்சம் டேர்ன் ஓவர்...

இந்த புராஜெக்ட் அடிப்படை யில் தினமும் 30,000 பாக்ஸ் உற்பத்தி செய்ய முடியும். உதாரண மாக, ஒரு பாக்ஸை ரூ.2.75-க்கு விற்பனை செய்யும்பட்சத்தில், 30,000 பாக்ஸ்க்கு ரூ.82,500 வருமானம் கிடைக்கும். மாதத்தில் 25 தினங்களுக்கு உற்பத்தி நடைபெறுவதாகக் கணக்கிட்டால், ரூ.20,62,500 வருமானம் கிடைக்கும்.

முறையான பயிற்சி மற்றும் அனுபவத்துக்குப் பிறகு, இந்தத் தொழிலில் களமிறங்குவது நல்லது. உற்பத்தித் திறனைப் பொறுத்து, தினமும் 30,000 அட்டைப்பெட்டிக்கு அதிகமாகவும் தயாரிக்க முடியும் என்பதால், நிலையான ஆர்டர்களைக் கைவசம் வைத்திருப்பதுதான் முக்கியமானது.

எனவே, அதற்கான சரியான தொழில் வாய்ப்புகளை ஓரளவுக்கு உறுதிசெய்த பிறகு, இந்தத் தொழிலைத் தொடங்கினால், வெற்றி நிச்சயம்தான்!

(தொழில் பழகுவோம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism