ஆன்லைன் உணவு விநியோக நிறுவனங்களான ஸொமேட்டோ மற்றும் ஸ்விக்கி நியாமற்ற வணிக முறைகளைப் பின்பற்றி வருவதாக இந்திய தேசிய உணவக சங்கம் (NRAI) தாக்கல் செய்த புகாரைத் தொடர்ந்து, இந்நிறுவனங்களை விசாரிக்க இந்தியப் போட்டியியல் ஆணையம் (சிசிஐ) உத்தரவிட்டுள்ளது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்த இரண்டு நிறுவனங்களும் சில பிராண்டு உணவகங்களுக்கு மட்டும் கூடுதலாக உணவு விநியோகிக்கும் வசதியை வழங்குவதாகவும், அவர்களிடமிருந்து இதற்காகக் கூடுதல் கட்டணம் அல்லது கமிஷன் பெற்றுக் கொள்வதாகவும் குற்றசாட்டு எழுப்பப்பட்டது.
ஸொமேட்டோ டெலிவரி செய்வதற்காக மட்டும் உணவைத் தயாரிக்கும் கிளவுட் கிச்சன்களை உருவாக்க நுகர்வோர் தரவைப் பயன்படுத்தியதாகவும், அதே நேரத்தில் ஸ்விக்கி தனியார் லேபிள்களைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களின் ஆர்ட்டர்களைத் திசைதிருப்பி லாபம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

தனியார் பிராண்டுகளுக்கும் உணவகங்களுக்கும் இடையே ஏற்படும் போட்டியின் தாக்கம் குறித்து விரிவான ஆய்வுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று கூறிய கமிஷன், 60 நாள்களுக்குள் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.