Published:Updated:

`மாநிலங்களுக்கான ஜி.எஸ்.டி இழப்பீடு' - 19,950 கோடி ரூபாயை வழங்கியது மத்திய அரசு

ஜி.எஸ்.டி இழப்பீடு
ஜி.எஸ்.டி இழப்பீடு ( vikatan )

ஏற்கெனவே கடந்த ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் வழங்கப்படவேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீடு தாமதமானதால் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்கள் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்தனர். அதையடுத்து ரூ.35,298 கோடியை மத்திய அரசு வழங்கியது.

அக்டோபர் - நவம்பர் மாதங்களில் மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் தரவேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீட்டுத்தொகை ரூ.19,950 கோடியை அளித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதன்மூலம் இதுவரை, 1.2 லட்சம் கோடி ரூபாயை மாநிலங்களுக்கு வழங்கியுள்ளது.

ஜி.எஸ்.டி இழப்பீடு
ஜி.எஸ்.டி இழப்பீடு
vikatan

ஏற்கெனவே கடந்த ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் வழங்கப்படவேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீடு தாமதமானதால் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்கள் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்தனர். அதையடுத்து ரூ.35,298 கோடியை மத்திய அரசு வழங்கியது. 2019-20 நிதியாண்டில் ஜி.எஸ்.டி இழப்பீட்டு வரி வசூல் ரூ.1.09 லட்சம் கோடியாக இருக்குமென்று கணிக்கப்பட்டு, பின்னர் ரூ.98,327 கோடியாகக் குறைக்கப்பட்டது. எனினும் அந்தத் தொகையைக்கூட எட்டாது என்றே தெரிகிறது.

2017, ஜூலை மாதத்தில் ஜி.எஸ்.டி வரி அமல்படுத்தப்பட்டபின், மாநிலங்களுக்குக் கிடைக்கும் வரித்தொகையில் மத்திய அரசும் பங்கெடுப்பதால் மாநிலங்களுக்கு வரி இழப்பு ஏற்படுவதாகக் குற்றம்சாட்டப்பட்டது. எனவே, இந்த இழப்பை ஈடுசெய்வதற்காக சிகரெட், புகையிலை, விலையுயர்ந்த கார் உள்ளிட்ட சில தயாரிப்புகளின் விற்பனையில் ஜி.எஸ்.டி இழப்பீட்டு வரி விதிக்கப்பட்டது. அதில் வசூலாகும் தொகையிலிருந்து மாநிலங்களுக்கு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை இழப்பீடு வழங்கப்படும் என்று ஜி.எஸ்.டி சட்டத்தில் கூறப்பட்டது.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்
vikatan

ஆனால், இந்த இழப்பீட்டு வரி வசூல் எதிர்பார்த்த அளவு இல்லையென்றுகூறி, இழப்பீடு வழங்குவதை ஒவ்வொருமுறையும் மத்திய அரசு தாமதப்படுத்தியே வந்தது. தற்போது, அக்டோபர் - நவம்பர் மாதங்களில் மாநிலங்களுக்கு அளிக்கவேண்டிய ரூ.19,950 கோடியைப் பகிர்ந்தளித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

2020, ஜனவரி 31 வரை, மக்களிடமிருந்து வசூலான ஜி.எஸ்.டி இழப்பீட்டு வரி வருமானம் ரூ.78,874 கோடியாக உள்ளதாகத் தெரிவித்துள்ளது. இது, கணித்திருந்ததைவிடக் குறைவாகும்.

அடுத்த கட்டுரைக்கு