Published:Updated:

கோதுமை உட்பட 7 விளை பொருள்களின் கமாடிட்டி ஃப்யூச்சர்ஸ் வர்த்தகத்திற்கு தடை; என்ன காரணம்?

கோதுமை
News
கோதுமை

அதிகரித்து வரும் விலைவாசி உயர்வுக்காக மத்திய அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடி வருகின்றன. இந்நிலையில்தான், பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வர மத்திய நிதி அமைச்சகம் இந்த முடிவை எட்டியுள்ளது.

மத்திய நிதி அமைச்சகம், நெல் (பாசுமதி தவிர்த்து), கோதுமை, கொண்ட கடலை, சோயா பீன்ஸ், கச்சா பாமாயில், கடுகு, பச்சை பயிறு உள்ளிட்ட ஏழு விவசாய பொருட்களை ப்யூச்சர்ஸ் வர்த்தகம் மேற்கொள்ள தடை விதித்துள்ளது. இந்த தடை உடனடியாக அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த இரண்டு மாதங்களாக வழக்கத்துக்கு மாறாக கனக மழை பெய்து வருகிறது. இதனால் காய்கறிகள், பயிர் வகைகள் நாசமாகியுள்ளன. இதனால், காய்கறிகள் மற்றும் தானியங்களின் விலை அதிகரித்துள்ளது. இதனால். பணவீக்கம் அதிகரித்துள்ளது.

மழையில் மூழ்கிய பயிர்கள் (File Pic)
மழையில் மூழ்கிய பயிர்கள் (File Pic)

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அதிகரித்து வரும் விலைவாசி உயர்வுக்காக மத்திய அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடி வருகின்றன. இந்நிலையில்தான், பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வர மத்திய நிதி அமைச்சகம் இந்த முடிவை எட்டியுள்ளது.

இந்த ஏழு கமாடிட்டிகளின் மீது இன்னும் ஒரு ஆண்டுக்கு எந்தவித புதிய ஒப்பந்தங்களும் போடக்கூடாது. இப்போதுள்ள ஒப்பந்தங்களில் புதிய நடைமுறைகள் எதையும் சேர்க்கக்கூடாது. மேலும் அந்த ஒப்பந்தகளில் முன்பிருந்தப்படிதான் வர்த்தகம் நடக்க வேண்டும் என்று செபி அமைப்பு தெரிவித்துள்ளது.

பொருளாதாரம்
பொருளாதாரம்

நுகர்வோர் விலை பணவீக்கம் கடந்த மூன்று மாதங்களை அதிகரித்து நவம்பரில் 4.91 சதவீதமாக உயர்ந்துள்ளது. மொத்த விலை பணவீக்கம் கடந்த எட்டு மாதங்களாக இரண்டு இலக்கங்களாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் அக்டோபர் மாதத்தில் 12.54 சதவீதமாக இருந்த மொத்த விலை பணவீக்கம் நவம்பரில் 14.23 சதவீதமாக உயர்ந்துள்ளது.