Published:Updated:

ஜி.எஸ்.டி வரி இழப்பீடாக ₹75,000 கோடியை வழங்கிய மத்திய அரசு; தமிழகத்திற்கு எவ்வளவு?

ஜி.எஸ்.டி
ஜி.எஸ்.டி

தற்போது வழங்கப்பட்டுள்ள 75,000 கோடி ரூபாயில், அதிகபட்சமாக, கர்நாடகம் மாநிலத்துக்கு ரூ.8,542 கோடியும் மஹாராஷ்ராவுக்கு ரூ.6,501 கோடியும், குஜராத் மாநிலத்துக்கு ரூ.6,151 கோடியும் வழங்கப்பட்டிருக்கிறது.

கடந்த 2017-ம் ஆண்டு, மத்திய அரசு ஜி.எஸ்.டி வரியை (சரக்கு மற்றும் சேவை வரி) அமல்படுத்தியது. இந்த புதிய வரி அமைப்பின் காரணமாக, மாநில அரசுகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடு செய்யும் விதமாக 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்கும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.

அதன்படி ஒவ்வொரு ஆண்டும் இழப்பீட்டுத் தொகையை மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு வழங்கி வருகிறது. நடப்பு 2021-2022ம் நிதி ஆண்டுக்கான இழப்பீட்டுத் தொகை ரூ.2.59 லட்சம் கோடியை மாநில அரசுகளுக்கு வழங்க, கடந்த மே மாதம் 28-ம் தேதி நடந்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

ஜி.எஸ்.டி
ஜி.எஸ்.டி
8 மாதங்களில் இல்லாத அளவு சரிந்த ஜி.எஸ்.டி வரி வசூல்; என்ன காரணம்?

அந்த கூட்டத்தில், மத்திய அரசின் ஜி.எஸ்.டி. இழப்பீட்டு நிதித் தொகுப்பில் போதுமான நிதி இல்லாத காரணத்தால், ரூ.1 லட்சம் கோடியை மட்டும் ஜி.எஸ்.டி வருவாயிலிருந்தும், மீதமுள்ள ரூ.1.59 லட்சம் கோடியை மத்திய அரசு கடனாக வாங்கி, அதை மாநிலங்களுக்கு வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.

அதனடிப்படையில், முதல் தவணையாக ரூ.75,000 கோடியை கடனாகப் பெற்று, அதை மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. மீதமுள்ள ரூ.84,000 கோடியை நடப்பு நிதி ஆண்டின் 2-வது அரையாண்டில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்
GST: “நன்கொடையாளராக மத்திய அரசு செயல்பட முடியாது!“- பி.டி.ஆர் சரவெடி... பின்னணி என்ன?

தற்போது வழங்கப்பட்டுள்ள ரூ.75,000 கோடியில், அதிகபட்சமாக, கர்நாடகம் மாநிலத்துக்கு ரூ.8,542 கோடியும், மஹாராஷ்ராவுக்கு ரூ.6,501 கோடியும், குஜராத் மாநிலத்துக்கு ரூ.6,151 கோடியும் வழங்கப்பட்டிருக்கிறது. தமிழகத்துக்கு ரூ.3,818 கோடியும், கேரளத்துக்கு ரூ.4,122 கோடியும், புதுச்சேரிக்கு ரூ.517 கோடியும் வழக்கப்பட்டிருக்கிறது. இதே போல கடந்த 2020-2021-ம் நிதி ஆண்டில் ரூ.1.10 லட்சம் கோடியை மத்திய அரசு கடனாகப் பெற்று, மாநில அரசுக்கு வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு