Published:Updated:

`தாய் வீடு' திரும்பிய ஏர் இந்தியா; அடுத்து என்ன செய்யப்போகிறது டாடா?

Air India ( Manish Swarup | AP Photo )

இப்போது டாடாவின் சவால்கள், அதன் பங்கான 15,300 கோடி ரூபாய் கடனை சமாளிப்பது மற்றும் நிறுவனத்தின் செலவினங்கள், நஷ்டத்தைக் குறைத்து அதை லாபப் பாதைக்கு திருப்புவது ஆகிய இரண்டும்தான். இதை எப்படி செய்யப்போகிறது டாடா?

`தாய் வீடு' திரும்பிய ஏர் இந்தியா; அடுத்து என்ன செய்யப்போகிறது டாடா?

இப்போது டாடாவின் சவால்கள், அதன் பங்கான 15,300 கோடி ரூபாய் கடனை சமாளிப்பது மற்றும் நிறுவனத்தின் செலவினங்கள், நஷ்டத்தைக் குறைத்து அதை லாபப் பாதைக்கு திருப்புவது ஆகிய இரண்டும்தான். இதை எப்படி செய்யப்போகிறது டாடா?

Published:Updated:
Air India ( Manish Swarup | AP Photo )
Note: The Subject Line நியூஸ்லெட்டரின் Explainer கட்டுரை இது. இதேபோல தினசரி நிகழ்வுகளை எளிமையாக, விரிவாகப் புரிந்துகொள்ள கீழே உங்கள் மெயில் ஐடி-யைக் கொடுத்து சப்ஸ்கிரைப் செய்யுங்கள். தினமும் காலை 7 மணிக்கு அன்றைய முக்கியமான அப்டேட்கள் உங்கள் இன்பாக்ஸுக்கே வந்துசேரும்!

அனைத்து அலுவல் வேலைகளையும் முடித்து, மொத்தமாக ஏர் இந்தியா நிறுவனத்தின் சாவிக்கொத்தை டாடா குழுமத்திடம் நேற்று ஒப்படைத்திருக்கிறது மத்திய அரசு. 68 ஆண்டுகளுக்குப் பிறகு, ஏர் இந்தியா மீண்டும் தாய் வீடு திரும்பியிருப்பதை மனப்பூர்வமாக மகிழ்ச்சியோடு வரவேற்றிருக்கிறார் டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன்.

சரி, இனி ஏர் இந்தியா என்னவாகும்?

ஏர் இந்தியாவை அரசு விற்க காரணமே அதிலிருந்து அரசால் வருவாய் ஈட்ட முடியாததும், தொடர்ந்து கடனையும் நஷ்டத்தையும் சந்தித்துக்கொண்டிருந்ததுதான்.

2009 - 10-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரைக்கும் 1,10,277 கோடி ரூபாயை ஏர் இந்தியாவின் கடன் பிரச்னைகளைத் தீர்க்க செலவளித்திருக்கிறது அரசு. கடந்த ஆண்டு நாளொன்றுக்கு 20 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கியது ஏர் இந்தியா (வருடத்துக்கு ~7,300 கோடி ரூபாய்).

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

  • இதனால்தான் 18,000 கோடிக்கு கடந்த ஆண்டு டாடா குழுமத்திடம் (முறையான ஏலத்துக்குப் பிறகு) விற்றது மத்திய அரசு. 💰

  • கடந்த ஆண்டு அக்டோபர் நிலவரப்படி ஏர் இந்தியாவின் மொத்த கடன், 61,562 கோடி ரூபாய். இதில் 15,300 கோடி ரூபாய்க்கு டாடா பொறுப்பேற்றுக்கொண்டுள்ளது. 2,700 கோடி ரூபாயை நேரடியாக அரசுக்கு செலுத்தியிருக்கிறது (மொத்தம் 18,000 கோடி). மீதமிருப்பது 43,562 கோடி ரூபாய்.

  • இதில் ஏர் இந்தியா சார்பாக இருக்கும் சொத்துகள் மூலம் அரசு 14,718 கோடி ரூபாயைத் திரட்டிவிடும். மீதமிருப்பது 28,844 கோடி ரூபாய். இதை அரசுதான் செலுத்தியாக வேண்டும்.

  • இப்போது டாடாவின் சவால்கள், அதன் பங்கான 15,300 கோடி ரூபாய் கடனைச் சமாளிப்பது மற்றும் நிறுவனத்தின் செலவினங்கள், நஷ்டத்தைக் குறைத்து அதை லாபப் பாதைக்குத் திருப்புவது ஆகிய இரண்டும்தான்.

இதை எப்படி செய்யப்போகிறது டாடா? 🛬

  1. புதிய முதலீடுகளை மேற்கொண்டு தற்போது இருக்கும் விமானங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி சந்தையில் புதிய வாடிக்கையாளர்களைப் பெறவேண்டும். இது எதிர்காலத்திற்கு ஏர் இந்தியா தயாராக உதவும்.

  2. இரண்டாவது, நிர்வாகச் செலவுகள். விஸ்தாரா, ஏர் ஏசியா, ஏர் இந்தியா ஆகிய மூன்றையும் சேர்த்து இந்திய விமானப் போக்குவரத்தில் சுமார் 27% சந்தையை வைத்திருக்கிறது டாடா. இண்டிகோவுக்கு அடுத்து இரண்டாவது பெரிய ஏர்லைன்ஸ் குடும்பமாக இந்தக் கூட்டணி மாறியிருக்கிறது. இதை வைத்து புதிய விமானங்கள், எரிபொருள்கள் போன்ற விஷயங்களில் பிற நிறுவனங்களுடன் டாடா கூடுதல் பலத்துடன் பேரம்பேசி, நிர்வாகச் செலவுகளைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும்.

இந்த இரண்டு மட்டும்தான் டாடாவின் நோக்கமா? இல்லை. டாடாவின் டி.சி.எஸ், இந்தியன் ஹோட்டல்ஸ் (தாஜ், விவான்டா குழும ஹோட்டல்கள்), டாடா கேப்பிடல்ஸ் என அந்தக் குழுமத்தின் பிற சேவைகளுக்கும் ஏர் இந்தியாவின் வரவு, `தனலாபம்’ என்கின்றனர் நிபுணர்கள்.

இந்த சவால்களைக் கடந்து, ஏர் இந்தியா அடுத்த சில வருடங்களில் சாதித்தால்தான், இது டாடாவுக்கு நல்வரவாக அமையும்.

Note: The Subject Line நியூஸ்லெட்டரின் Explainer கட்டுரை இது. இதேபோல தினசரி நிகழ்வுகளை எளிமையாக, விரிவாகப் புரிந்துகொள்ள கீழே உங்கள் மெயில் ஐடி-யைக் கொடுத்து சப்ஸ்கிரைப் செய்யுங்கள். தினமும் காலை 7 மணிக்கு அன்றைய முக்கியமான அப்டேட்கள் உங்கள் இன்பாக்ஸுக்கே வந்துசேரும்!