Published:Updated:

தலைமுறை தாண்டிய வெற்றி... சென்னையில் கலக்கும் 90’ஸ் கிட்ஸ் ஷாப்!

கிருஷ்ண கார்த்திக், கிருஷ்ண சைதன்யா
பிரீமியம் ஸ்டோரி
கிருஷ்ண கார்த்திக், கிருஷ்ண சைதன்யா

வியாபாரம்

தலைமுறை தாண்டிய வெற்றி... சென்னையில் கலக்கும் 90’ஸ் கிட்ஸ் ஷாப்!

வியாபாரம்

Published:Updated:
கிருஷ்ண கார்த்திக், கிருஷ்ண சைதன்யா
பிரீமியம் ஸ்டோரி
கிருஷ்ண கார்த்திக், கிருஷ்ண சைதன்யா

பென்சில் மிட்டாய், புளிப்பு மிட்டாய், எடைக்கல் மிட்டாய், இலந்தவடை... நம்மைக் குழந்தைப் பருவத்துக்கு அழைத்துச் செல்லும் இதுபோன்ற தின்பண்டங்கள், விற்பனையில் பெரிதாக என்ன வருமானம் தரும் என்ற எண்ணமே நம்மில் பலருக்கும் இருக்கக்கூடும். ஆனால், சென்னையில் பாரிமுனையிலுள்ள சாய் கிருஷ்ணா ஸ்டோருக்குச் சென்றால், ‘‘இந்தத் தொழிலுக்கு இப்படியொரு வரவேற்பா?’’ என்று திகைப்போம். இந்தக் கடையில் மொத்த விற்பனை, சில்லறை வர்த்தகம் எனக் கூட்டம் நிரம்பி வழிகிறது. வியாபாரத்தில் மும்முரமாக இருந்தார் கடையின் நிர்வாகியான கோபால கிருஷ்ணா. அவரின் மகன்களான கிருஷ்ண சைதன்யாவும், கிருஷ்ண கார்த்திக்கும் இந்தத் தொழிலில் தாங்கள் வளர்ந்ததைப் பற்றி விவரித்தனர்.

“எங்க தாத்தா 1980-ம் வருஷத்துல 50 சதுர அடியில இதே பாரீஸ்ல கற்கண்டு தயாரிச்சு விக்கிற தொழிலை ஆரம்பிச்சார். கடையை எங்க தாத்தா கவனிச்சுக்க, வாடிக்கையாளர்கள்கிட்ட பணம் வசூல் பண்ண எங்க அப்பா எப்பவும் சுத்திகிட்டே இருப்பார். அப்படிப் போகிற இடங்கள்ல வித்தியாசமான தின்பண்டங்கள் இருந்தா, அதை மொத்த விலைக்கு வாங்கிட்டு வருவார். இப்படி வித்தியாசமான தின்பண்டங்களோட எண்ணிக்கை கூடிகிட்டே போக, நிறைய வியாபாரிகளும் பொதுமக்களும் எங்களைத் தேடி வந்தாங்க” என்று தொழிலில் காலூன்றியதை சைதன்யா சொல்ல, கார்த்திக் தொடர்ந்தார்.

கிருஷ்ண கார்த்திக், கிருஷ்ண சைதன்யா
கிருஷ்ண கார்த்திக், கிருஷ்ண சைதன்யா

“சூப்பர் மார்க்கெட்டெல்லாம் பிரபலமாகாத அந்தக் காலத்துல, தெருவுக்குத் தெரு பெட்டிக்கடைகளோட தேவை அதிகமா இருந்துச்சு. ஸ்கூல் படிக்கிற குழந்தைங்கதான் அந்தக் கடைகளோட பிரதான கஸ்டமர்ஸ். தொழில்நுட்ப வளர்ச்சியால உலகம் எவ்ளோ முன்னேறினாலும், குழந்தைகளை மையப்படுத்தின தின்பண்டங் களுக்கான வரவேற்பு குறையாதுங்கிறதை உறுதியா நம்பினோம். அதனால, காலேஜ் முடிச்சதும் என் அண்ணனும் நானும் இந்தத் தொழில்ல இறங்கினதும், புதுப்புது உத்திகளைக் கையாண்டோம்.

எந்தப் பொருளா இருந்தாலும், அதுல டிரெண்ட்டுக்கு ஏத்த மாதிரி, சினிமா ஸ்டார்ஸ், சினிமா படங்களின் பெயர்கள், விளை யாட்டுப் பிரபலங்களின் பெயரைப் பயன்படுத்தி விற்பனை செய் வோம். அதனால, ‘90’ஸ் கிட்ஸ் ஷாப்’னு எங்க கடை பிரபலமாச்சு. வெளிநாடுகள்ல இருந்து மிட்டாய் உள்ளிட்ட உணவுப் பொருள்களை அதிக அளவுல இறக்குமதி செஞ்சு வித்திருக்கோம். ‘மேக் இன் இந்தியா’வுக்கான வரவேற்பு அதிகரிச்சதும், நம்ம நாட்டுலயே தயாரிக்கப்படுற வித்தியாசமான உணவுப் பொருள்களைத் தேடித் தேடி வாங்குறோம். எங்ககிட்ட எந்தப் பொருள் வாங்கினாலும், எம்.ஆர்.பி விலையைவிட 30% - 40% குறைவான விலைக்கு நாங்க விற்பனை செய்வோம். அதைச் சில்லறை விலையில கொஞ்சம் கூடுதலான விலைக்கு வியாபாரிகள் விற்பனை செய்யலாம். அந்த வகையில 4,000-க்கும் அதிகமான பொருள்களை இப்ப விற்பனை செய்றோம்” என்று பெருமிதத்துடன் கூறுகிறார்.

சென்னை, பாரிமுனையில் இரண்டு கடை களையும், கோயம்பேட்டில் ஒரு கடையையும் இவர்கள் நடத்தி வருகின்றனர். அவற்றில், தின்பண்டங்கள், குழந்தைகளுக்கான விளை யாட்டுப் பொருள்கள், வீட்டுப் பயன்பாட்டுப் பொருள்களை, சில்லறை மற்றும் மொத்த விலைக்கு விற்பனை செய்கின்றனர். ஒவ்வொரு கடையிலும் தினமும் பல லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெறும் நிலையில், இவர்களின் பொருள்கள் இந்தியா முழுக்க விற்பனையாகின்றன.

தலைமுறை தாண்டிய வெற்றி... 
சென்னையில் கலக்கும் 90’ஸ் கிட்ஸ் ஷாப்!

“2018-ல் ஆரம்பிக்கப்பட்ட ‘பல்ஸ் கேண்டி’ சாக்லேட் கம்பெனி, ஒரே வருஷத்துல 300 கோடி வியாபாரம் பண்ற அளவுக்குப் பெரிசா வளர்ந்துச்சு. இதேபோல, இன்னும் எவ் வளவோ உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் பிர பலாகியிருக்கு. இந்தியா முழுக்க பல லட்சம் பெட்டிக் கடைகளும் மளிகைக்கடைகளும் இருக்கு. அவற்றுல ஒவ்வொரு நாளும் பல கோடிக்கு வர்த்தகம் நடக்குது.

தேவைதான் சந்தை வாய்ப்பை உறுதி செய்யும்னு சொல்வாங்க. அதுபோல 10,000 ரூபாய் இருந்தாகூட போதும். நேரடியா அல்லது பகுதி நேரமா இந்த பிசினஸை ஆரம்பிச்சு, போட்டிச் சூழலுக்கு மத்தியிலும் வளர முடியும். சென்னையிலுள்ள ஆயிரக்கணக்கான பெட்டிக் கடை வியாபாரிகள் ரெகுலரா எங்ககிட்டதான் பொருள்கள் வாங்குவாங்க. எங்களால குடிசைத் தொழில் பண்றவங் களுக்குத் தொடர்ந்து வேலை வாய்ப்பு கொடுக்க முடியுது.

கொரோனாவுக்குப் பிறகு, பழைய பாரம்பர்ய தின்பண்டங் களுக்கான வரவேற்பு அதிகமா கிடுச்சு. உழைப்பை நம்பி இறங்கினா, இந்தத் தொழில்ல நிச்சயம் வெற்றிதான்’’ எனப் பேசி முடித்தனர் சகோதரர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism