Published:Updated:

அலிபாபாவுக்கு அபராதம் விதித்த சீன அரசு... ஜாக் மா தப்பித்தாரா, இல்லையா?

ஜாக் மா

சீன அரசாங்கம் குறித்து அலிபாபா நிறுவனர் ஜாக் மா செய்த விமர்சனத்தால் கடந்த ஆறு மாதங்களில் அந்தக் குழுமம் பெரும் சிக்கல்களை சந்தித்தது.

அலிபாபாவுக்கு அபராதம் விதித்த சீன அரசு... ஜாக் மா தப்பித்தாரா, இல்லையா?

சீன அரசாங்கம் குறித்து அலிபாபா நிறுவனர் ஜாக் மா செய்த விமர்சனத்தால் கடந்த ஆறு மாதங்களில் அந்தக் குழுமம் பெரும் சிக்கல்களை சந்தித்தது.

Published:Updated:
ஜாக் மா

கடந்த சில மாதங்களாக அலிபாபா நிறுவனம் குறித்த எந்தச் செய்தியும் வரவில்லையே என்று யோசித்த சில நாட்களிலேயே அலிபாபாவுக்கு அபராதம் என்னும் செய்தி வெளியாகியிருக்கிறது. சில வாரங்களுக்கு முன்பு அலிபாபா குழும நிறுவனம் ஒன்றின் ஐ.பி.ஓ வெளியாக இருந்தது. சர்வதேச அளவில் மிகப்பெரிய ஐ.பி.ஓ.வாக அது இருக்கும் என கருதப்பட்ட சூழலில், ஐ.பி.ஓ வெளியாக இருக்கும் சில தினங்களுக்கு முன்பு அந்த ஐ.பி.ஓ தள்ளிவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அலிபாபா குழுமத்தின் தலைவர் ஜாக் மா தலைமறைவு என்னும் செய்தி வெளியானது. மேலும், அலிபாபா குழுமம் சந்தையில் தனக்கு இருக்கும் சாதகமான போக்கினைப் பயன்படுத்தி போட்டியாளர்களை நசுக்குகிறது என சீன ஒழுங்குமுறை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

Alibaba Group headquarters
Alibaba Group headquarters
AP Photo/Ng Han Guan

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

280 கோடி டாலர் அபராதம்!

கடந்த டிசம்பர் முதல் இதற்கான விசாரணை தொடங்கபட்டு நடந்து வந்தது. ஒரு விற்பனையாளர்கள் அலிபாபா தளத்தில் பொருளை விற்கவேண்டும் என்றால், இதர இ-காமர்ஸ் தளங்களைப் பயன்படுத்தக் கூடாது என அலிபாபா வைத்திருந்த விதி தவறானது என சீன ஒழுங்குமுறை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி விசாரணையைத் தொடங்கியது.

இதனை அடிப்படையாகக் கொண்டு கடந்த திங்கள் அன்று புதிய உத்தரவு வெளியானது. இதில் அலிபாபா நிறுவனத்துக்கு 280 கோடி டாலர் அளவுக்கு அபாரதம் விதிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. `மோனோபோலி' என்பது சந்தைப் பொருளாதாரத்துக்கு எதிரானது என்பதால் இதனை அனுமதிக்க முடியாது என்றும் சீன ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்திருந்தது. 2020-ம் ஆண்டில் கடைசி மூன்று மாதங்களில் மட்டும் 1,200 கோடி டாலர் வருமானத்தை அலிபாபா ஈட்டியிருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

12 நிறுவனங்களுக்கு அபராதம்

2019-ம் ஆண்டு உள்நாட்டு வருமானத்தில் 4% அளவுக்கு அபராதமாக விதிக்கப்பட்டது. மேலும், தொழில் குறித்த விதிமுறைகளை மாற்றி அமைத்து முழுமையான அறிக்கையை மூன்று ஆண்டுகளுக்குள் தாக்கல் செய்யவேண்டும் என்றும் சீனா உத்தரவிட்டிருக்கிறது.

கடந்த மாதம் 12 நிறுவனங்களுக்கு சீனா அபராதம் விதித்தது. டென்சென்ட், பாய்டு உள்ளிட்ட நிறுவனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. அலிபாபாவுக்கு அடுத்து டென்சென்ட் நிறுவனத்தில் சீனா அதிக கவனம் செலுத்துவதாக சீன சந்தையை கவனிப்பவர்கள் கூறுகிறார்கள்.

Chairman of Alibaba Group Jack Ma
Chairman of Alibaba Group Jack Ma
AP Photo/Firdia Lisnawati, File

அலிபாபா ஏற்றம் ஏன்?

சீன ஒழுங்குமுறை ஆணையம் விதித்த அபாரத்தை ஏற்றுக்கொள்வதாக அலிபாபா நிறுவனம் அறிவித்திருக்கிறது. ஆனால் இந்த அபராதம் குறைந்த தொகை என முதலீட்டாளர்கள் கருதுகிறார்கள். சீன விதிமுறைகளின் படி மோனோபோலி வழக்குக்கு அதிகபட்சம் 10% வரை அபராதம் விதிக்கப்படும் என முதலீட்டாளர்கள் கருதியிருக்கிறார்கள். ஆனால் 4% மட்டுமே அபராதம் என்பது குறைவான தொகை என்பதால் 6.5% அளவுக்கு அலிபாபா பங்குகள் உயர்ந்தன. இதனால் அலிபாபா நிறுவனர் ஜாக் மா சொத்து மதிப்பு 2.3 பில்லியன் டாலர் உயர்ந்து 52.1 பில்லியன் டாலராக மாறி இருப்பதாக புளூம்பெர்க் தெரிவித்திருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அபராத்தை தவிர, வேறு எந்தக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை என்பதையும் முதலீட்டு உலகம் சாதகமாகவே பார்க்கிறது. 2015-ம் ஆண்டு குவால்காம் நிறுவனத்துக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை சந்தை வல்லுநர்கள் நினைவுகூருகின்றனர். அதனால் தற்போது விதிக்கப்பட்டிருக்கும் அபராதம் பெரிய தொகை இல்லை என்பதால், அலிபாபா பங்கு உயரந்திருக்கிறது.

Ant Group
Ant Group
Chinatopix Via AP

ஆன்ட் ஐ.பி.ஒ மீண்டும் வருமா?

``அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையால் எந்த பாதிப்பும் இருக்காது. அதேசமயம் அரசாங்கம் அறிவித்துள்ள விதிமுறைகளை நாங்கள் கடைபிடிப்போம். சட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப நாங்கள் செயல்படுவோம். சீனாவில் உள்ள சிறிய நகரங்களுக்கும் அடுத்து செல்ல இருக்கிறோம்" என அலிபாபா தலைமைச் செயல் அதிகாரி டேனியல் ஜாங் தெரிவித்திருக்கிறார்.

சீன அரசாங்கம் குறித்து அலிபாபா நிறுவனர் ஜாக் மா செய்த விமர்சனத்தால் கடந்த ஆறு மாதங்களில் அந்தக் குழுமம் பெரும் சிக்கல்களை சந்தித்தது. தற்போது இந்த சிக்கல்கள் முடிவுக்கு வந்திருப்பதாக தெரிகிறது. அலிபாபா குறித்த நிச்சயமற்றத்தன்மை முடிவுக்கு வந்திருப்பதால் இனி ஆன்ட் ஐ.பி.ஓ குறித்து அலிபாபா திட்டமிடக்கூடும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism