Published:Updated:

மார்ச் 26-ம் தேதி துபாய் கண்காட்சிக்கு செல்லும் ஸ்டாலின்; என்ன திட்டம்?

MK Stalin ( Photo: Twitter / MKStalin )

தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு, மு.க.ஸ்டாலின் முதன் முறையாக வெளிநாடு சுற்றுப்பயணம் செல்ல உள்ளார். துபாய் கண்காட்சியில் கலந்துகொள்வதன் வாயிலாக வெளிநாட்டு முதலீடுகளை அதிகம் ஈர்ப்பதற்கு அரசு திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.

மார்ச் 26-ம் தேதி துபாய் கண்காட்சிக்கு செல்லும் ஸ்டாலின்; என்ன திட்டம்?

தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு, மு.க.ஸ்டாலின் முதன் முறையாக வெளிநாடு சுற்றுப்பயணம் செல்ல உள்ளார். துபாய் கண்காட்சியில் கலந்துகொள்வதன் வாயிலாக வெளிநாட்டு முதலீடுகளை அதிகம் ஈர்ப்பதற்கு அரசு திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.

Published:Updated:
MK Stalin ( Photo: Twitter / MKStalin )

துபாயில் நடக்கும் சர்வதேச கண்காட்சியில் தமிழகத்தின் சார்பில் அரசு துறைகள் பங்கேற்க தமிழக அரசு ஏற்கெனவே ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருந்த நிலையில், கண்காட்சியில் பங்கேற்க மார்ச் 26, 27-ம் தேதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

கடந்த 2021-ம் ஆண்டின் அக்டோபர் மாதம் 1-ம் தேதி தொடங்கிய `துபாய் எக்ஸ்போ 2020', நடப்பு 2022-ம் ஆண்டின் மார்ச் மாதம் 31-ம் தேதி முடிவடைகிறது. இந்தக் கண்காட்சியில் இந்தியா, அமெரிக்கா, ஆப்கானிஸ்தான், சீனா, பங்களாதேஷ், குரோஷியா உட்பட மொத்தம் 192 நாடுகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு நாட்டுக்கும் பிரத்யேகமாக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

Dubai Expo
Dubai Expo

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தக் கண்காட்சியில் இந்தியாவுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள அரங்கில், தமிழக அரசு சார்பில், அரங்குகள் அமைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு, மு.க.ஸ்டாலின் முதன்முறையாக வெளிநாடு சுற்றுப்பயணம் செல்ல உள்ளார். துபாய் கண்காட்சியில் கலந்துகொள்வதன் வாயிலாக வெளிநாட்டு முதலீடுகளை அதிகம் ஈர்ப்பதற்கு அரசு திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

முதலில், இந்த உலகக் கண்காட்சி 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2021-ம் ஆண்டின் ஏப்ரல் மாதம் வரையிலான ஆறு மாதங்களுக்குத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அந்த ஆண்டு உலகம் முழுவது கொரோனா தொற்று பரவல் அதிக அளவில் இருந்ததால், கண்காட்சிக்கான தேதிகள் தள்ளிவைக்கப்பட்டன. பின்னர் 2021-ம் ஆண்டின் அக்டோபர் 1-ம் தேதி முதல் மார்ச் 31-ம் தெதி 2022 வரையில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பின்படி, தற்போது கண்காட்சி வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இதுபோன்ற பல்வேறு சர்வதேச கண்காட்சிகள் அறிவிக்கப்பட்டு ரத்து செய்யப்படும் நிலையில் ரத்து செய்யப்படாமல் தேதி தள்ளிவைக்கப்பட்டு நடைபெறுவது இதுவே முதல்முறை என நெட்டிசன்களின் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

கண்காட்சி அரங்கம்
கண்காட்சி அரங்கம்

இந்தக் கண்காட்சியின் ஸ்பெஷலே ஒவ்வொரு நாட்டுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் இடம் ஒவ்வொரு தீமில் உருவாக்கப்பட்டிருப்பதுதான். அந்த வகையில், இந்தியாவின் கண்காட்சி அரங்கின் நுழைவு வாயிலில் பிரமாண்ட காந்தி சிலை வடிவமைக்கப்பட்டு அரங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியா தனது வேறுபட்ட கலை, கலாசாரம், பன்னோக்குச் செயல்பாடுகள் குறித்து அந்த அரங்கத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism