Published:Updated:

லாபம் தரும் கோ - லிவிங் அபார்ட்மென்ட்! - ரியல் எஸ்டேட்டில் புதிய வாய்ப்பு!

கோ - லிவிங் 
அபார்ட்மென்ட்
பிரீமியம் ஸ்டோரி
கோ - லிவிங் அபார்ட்மென்ட்

நிலையான வாடகை எத்தனை ஆண்டுகளுக்குக் கிடைக்கும்  என்பதை முதலில் உறுதி செய்துகொள்ள வேண்டும்.

லாபம் தரும் கோ - லிவிங் அபார்ட்மென்ட்! - ரியல் எஸ்டேட்டில் புதிய வாய்ப்பு!

நிலையான வாடகை எத்தனை ஆண்டுகளுக்குக் கிடைக்கும்  என்பதை முதலில் உறுதி செய்துகொள்ள வேண்டும்.

Published:Updated:
கோ - லிவிங் 
அபார்ட்மென்ட்
பிரீமியம் ஸ்டோரி
கோ - லிவிங் அபார்ட்மென்ட்
கர்ப்புறங்கள் வேகமாக வளர்ச்சி கண்டுவரும் நிலையில், குறுகியகாலத்துக்குத் தனி வீடுகள் கிடைப்பது கடினம்தான். இந்தப் பிரச்னைக்கு ஓர் எளிய தீர்வாக வந்திருக்கிறது கோ-லிவிங் (Coliving) என்ற நடைமுறை. அது என்ன கோ லிவிங்..?

மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வரும் சுரேஷ் என்பவர் சில மாதங்களுக்கு முன்னர் குறுகியகால புராஜெக்டுக்காக பெங்களூரு சென்றார். கணவன் மனைவியாகச் சென்றாலும் ஆறு மாத காலத்துக்கு வீடு கிடைக்காது. நல்ல சம்பளம் என்பதற்காக ஓட்டலில் தங்குவதும் சாத்தியமில்லை. அதனால் `கோ-லிவிங்’ முறையில் தங்கி ஆறு மாதங்கள் பெங்களூருவில் பணிபுரிந்தார். அந்த அனுபவம் நன்றாகவே இருந்ததாகச் சொல்கிறார் சுரேஷ்.

லாபம் தரும் கோ - லிவிங் அபார்ட்மென்ட்! - ரியல் எஸ்டேட்டில் புதிய வாய்ப்பு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வெளிநாடுகளில் படிக்கும் அல்லது பணிபுரியும் நண்பர்களிடம் விசாரித்தால் இது சாதாரணம் என்பது புரியும். இந்த மாடல் கிட்டத்தட்ட இந்தியாவின் பல மாநிலங்களிலும் வளர்ந்துவிட்டது.

கோ-லிவிங் என்றால்...

ஹாஸ்டல், பேயிங் ஹெஸ்ட் (Paying Guest) போலத்தான் இதுவும். ஆனால், ஹாஸ்டலில் நமக்குப் படுக்கை (Bed) மட்டுமே கிடைக்கும். இங்கு தனியாகப் படுக்கையறை (Bed Room) கிடைக்கும். கூடவே கூடம் (Living Room / Hall), சமையலறை, பால்கனி உள்ளிட்ட வசதிகளையும் மற்றவர்களுடன் இணைந்து பயன்படுத்திக்கொள்ள முடியும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மாணவர்கள், புதிதாக வேலைக்கு வருபவர்கள், குறுகியகால புராஜெக்ட்டுகளுக்காக வேறு நகரத்துக்கு மாறியிருப்பவர்களுக்கு இது போன்ற கோ-லிவிங் மாடல் ஏற்றது. குறைந்த செலவிலும், பெரும்பாலான வசதிகளுடனும் கோ-லிவிங் வீடுகளில் வசிக்க முடியும். சர்வீசஸ் அபார்ட்மென்ட் என்பது பெரும்பாலும் நாள் வாடகைக்குக் கிடைக்கும். ஆனால், கோ-லிவிங் முறையில் பல மாதங்கள்கூடத் தங்கலாம்.

லாபம் தரும் கோ - லிவிங் அபார்ட்மென்ட்! - ரியல் எஸ்டேட்டில் புதிய வாய்ப்பு!

எப்படிச் செயல்படுகிறது?

கோ-லிவிங் பிரிவில் செயல்படும் நிறுவனங்களை `ஆபரேட்டர் நிறுவனங்கள்’ என்று சொல்வோம். உதாரணமாக `ஓலா’, `ஊபர்’போல. அவர்களிடம் சொந்தமாக எந்தச் சொத்தும் இருக்காது. ஆனால், அதை ஏற்று நடத்துபவர்கள், புதிய கட்டுமான புராஜெக்ட்டுகள் வரும்போதே கட்டுமான நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி எத்தனை வீடுகள், எத்தனை ஆண்டுகளுக்குத் தேவை என்பதையும் முடிவு செய்வார்கள். மாதம் இவ்வளவு வாடகை, அடுத்த சில வருடங்களுக்கு வழங்க முடியும் எனக் கட்டுமான நிறுவனங்களிடம் உத்தரவாதம் வழங்குவார்கள். இதை அடிப்படையாக வைத்து, கட்டுமான நிறுவனங்களும் அந்த புராஜெக்ட்டிலுள்ள வீடுகளை வாடிக்கையாளர்களுக்கு விற்பார்கள்.

இதற்கடுத்து வீட்டு உரிமையாளர்களுக்கும், ஆபரேட்டர் நிறுவனங்களுக்கும் இடையே ஒப்பந்தம் போடப்படும். சமயங்களில் பில்டர்களும் இந்த ஒப்பந்தத்தில் இணைவார்கள். தேவையான ஃபர்னிச்சர் வசதிகள் செய்யப்பட்டு கோ-லிவிங்குக்கு ஏற்ற முறையில் மாற்றி, வாடகைக்கு விடப்படும். இனி முதலீட்டுக்கு வருவோம்.

முதலீட்டாளர்கள் எப்படிப் பயன்படுத்திக்கொள்ளலாம்?

ரியல் எஸ்டேட் / அபார்ட்மென்ட்டில் பலரும் முதலீடு செய்வதற்குத் தயங்கக் காரணம் வாடகை வருமானம். பொதுவாக, ரியல் எஸ்டேட்டில் 2-3% அளவுக்கு மட்டுமே வாடகை வருமானம் வரும். ஆனால், கோ-லிவிவ் ஆபரேட்டர்களிடம் விடும்போது 4-5% அளவுக்கு வாடகை வருமானம் வர வாய்ப்புண்டு. கோ-லிவிங் முறையில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் பயன்படுத்துவதால், குடியிருப்பவர்களுக்கும் வாடகைச் செலவு குறையும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பணவீக்கம் அதிகரிக்கும்போது நிதி சார்ந்த சொத்துகளான ஃபிக்ஸட் டெபாசிட், கடன் பத்திரங்கள் போன்றவற்றின் வருமானம் குறையும். ஆனால், ரியல் எஸ்டேட் பணவீக்கத்துக்கேற்ப அதன் மதிப்பும் உயர்ந்து வரும். ரியல் எஸ்டேட்டைப் பொறுத்தவரை, சில ஆண்டுகளில் குறைவான வளர்ச்சி இருந்தாலும், 8-10 ஆண்டு சுழற்சியில் பெரிய வளர்ச்சி இருக்கும். அதனால் மற்ற சொத்துகளைப்போல, ரியல் எஸ்டேட்டிலும் நீண்டகால அடிப்படையில் 10 சதவிகிதத்துக்குமேல் லாபம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

கோ - லிவிங் 
அபார்ட்மென்ட்
கோ - லிவிங் அபார்ட்மென்ட்

ரிஸ்க் என்ன?

நிலையான வாடகை வருமானம் என்னும் அடிப்படையில் கோ-லிவிங் ஆபரேட்டர்கள் வருவதால், பில்டர்களால் எளிதாக வீட்டை விற்க முடியும். அந்த வீட்டை வாங்கியவர்களுக்கும் நிலையான வருமானம் கிடைக்கும். இந்த வருமானம் சமயங்களில் பாதகமாகவும் மாறக்கூடும்.

வீட்டின் உரிமையாளருக்கு நிலையான வருமானம் கிடைக்கப்போகிறது என்பதால், அந்தச் சொத்தின் மதிப்பை மறைமுகமாக உயர்த்த வாய்ப்பிருக்கிறது. ரூ.60 லட்சம் மதிப்புள்ள சொத்தை ரூ.65 லட்சமாக உயர்த்தினால். அடுத்த சில ஆண்டுகளுக்கு அந்தச் சொத்தின் மதிப்பு உயராது. அதனால் இது போன்ற முறையில் வீடு வாங்கும்போது சம்பந்தப்பட்ட வீட்டுக்குச் சரியான விலையைத்தான் தருகிறோமா என்பதை ஓரிரு முறை உறுதி செய்த பிறகு வாங்கவும்.

கவனிக்க வேண்டிய அம்சங்கள்..!

நிலையான வாடகை எத்தனை ஆண்டுகளுக்குக் கிடைக்கும் என்பதை முதலில் உறுதி செய்துகொள்ள வேண்டும்.

கோ-லிவிங் என்றாலே படுக்கை அறைதான் முக்கியம் என்பதால், ஹால் மற்றும் சமையலறையை மிகவும் சிறியதாகக் கட்டுவதற்கு வாய்ப்பிருக்கிறது.

கோ-லிவிங் ஒப்பந்தம் முடிந்த பிறகு, நீங்களாக வாடகைக்கு விட நினைத்தாலோ, ஒருவேளை நீங்களே குடியேற நினைத்தாலோ ஹால் மற்றும் சமையலறை போதுமான அளவில் இல்லை எனும் பட்சத்தில் அந்தச் சொத்தின் மதிப்பு குறையும். தவிர, வீட்டை விற்பதும் கடினமாகிவிடும். அதனால் ஹால் மற்றும் சமையலறை அளவை கவனிக்க வேண்டியதும் முக்கியம். மேலும், பார்க்கிங் வசதி குறித்துத் தெரிந்துகொள்வது அவசியம். அதைவிட வீடு இருக்கும் பகுதி வளர்ச்சியடையுமா என்பதை ஆராய்வதும் அவசியம். 

இந்தத் துறையின் எதிர்காலம்?

இந்தியாவில் இளைஞர்கள் அதிகம். வேலை தேடி அல்லது வேலை மாறுதலுக்காகப் பலரும் நகரங்களை நோக்கியே வருகிறார்கள். சுமார் 40% இளைஞர்கள் வேலைக்காகப் பெரு நகரங்களுக்கு மாறுகிறார்கள். மேலும், கல்விக்காகப் பெருநகரங்களுக்கு வரும் மாணவர்களும் அதிகம்.

தற்போது இந்தத் துறையின் மதிப்பு ரூ.50,000 கோடியாக இருக்கிறது. வரும் 2025-ம் ஆண்டு இந்தத் துறையின் மதிப்பு ரூ.1 லட்சம் கோடி மதிப்புள்ள துறையாக மாறலாம் என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது.

பல வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள் இந்தப் பிரிவிலுள்ள நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கின்றன.

இந்தியாவின் முக்கியமான நகரங்களில் கோ-லிவிங் வாழ்க்கை முறை வேகமாக அதிகரித்துவருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் சென்னையில் இந்தத் துறை செயல்படத் தொடங்கியது. கோவையிலும் அதிக எண்ணிக்கையிலான கோ-லிவிங் வீடுகள் செயல்படுகின்றன.

கோ - லிவிங் 
அபார்ட்மென்ட்
கோ - லிவிங் அபார்ட்மென்ட்

பெருநகரங்கள், கல்வி நிலையங்கள் அதிகமாக உள்ள ஊர்களில் கோ-லிவிங் முறையிலான வீடுகள் அதிகரித்துவருகின்றன. அதனால் கோ-லிவிங்குக்கு ஏற்ற வகையில் கட்டப்படும் கட்டுமான திட்டங்களும் அதிகரித்துவருகின்றன.

தற்போது மாணவர்கள், குறுகியகாலத் தேவைக்காக இடம் மாறுபவர்கள் ஆகியோரே கோ-லிவிங் வாய்ப்பைத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால், வருங்காலத்தில் நீண்டகால அடிப்படையில் கோ-லிவிங் முறைக்கு மாறுபவர்களின் எண்ணிக்கை உயரக்கூடும். தற்போது அபார்ட்மென்ட் வாழ்க்கை எப்படி இயல்பானதாக இருக்கிறதோ, அதுபோல எதிர்காலத்தில் கோ-லிவிங் வாழ்க்கையும் இயல்பானதாக மாறும்.

வீடு, நிலம் போன்றவற்றில் முதலீடு செய்வது போல கோ-லிவிங் அபார்ட்மென்ட்களில் உள்ள வாய்ப்பையும் முதலீட்டாளர்கள் பரிசீலனை செய்யலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism