Published:Updated:

ஆன்லைனில் கீரை விற்பனை... அசத்தும் கோவை இளைஞர்!

ஶ்ரீராம் பிரசாத்
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீராம் பிரசாத்

பிசினஸ்

ஆன்லைனில் கீரை விற்பனை... அசத்தும் கோவை இளைஞர்!

பிசினஸ்

Published:Updated:
ஶ்ரீராம் பிரசாத்
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீராம் பிரசாத்

நமது பாரம்பர்ய உணவான கீரைகளின் அருமை இந்தத் தலைமுறையினருக்குத் தெரியவில்லை. கீரை உணவை அவர்களும் சாப்பிட்டு பயனடைய வேண்டும் என்பதற்காகத்தான் கீரை பிசினஸில் இறங்கினோம். வெளிநாடு, பிற மாநிலங்களில் உள்ள நம்மவர்களுக்குக் கீரை கிடைப்பதில் நிறைய சிரமங்கள் உள்ளன. அந்தக் குறையைப் போக்கத்தான் எங்களது கீரைக்கடை டாட்காம் என்கிற ராம் பிரசாத், பாரம்பர்ய உணவில் புதிய தொழில்நுட்பத்தைப் புகுத்தி வெற்றியடைந்துள்ளார்.

மதுரையைச் சேர்ந்த ஶ்ரீராம் பிரசாத், ஐ.டி துறையில் பணியாற்றி வந்தார். இயற்கை விவசாயம் மீதான ஆர்வத்தில் ஐ.டி வேலையை உதறித் தள்ளிவிட்டு, கோவையில் கீரைகளுக்கு தனி ஷோரூம் தொடங்கியுள்ளார். கோவையில் இருந்து இந்தியா முழுவதும், இந்தியாவைத் தாண்டி 15 நாடுகளுக்கு கீரைகளை விற்று கவனம் ஈர்த்துள்ளார். கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள கீரைக்கடை டாட்காம் அலுவலகத்தில் ஶ்ரீராம் பிரசாத்தை சந்தித்தோம்.

ஶ்ரீராம் பிரசாத்
ஶ்ரீராம் பிரசாத்

“மதுரையில் இன்ஜினீயரிங் முடித்துவிட்டு, ஐ.டி துறையில் இருந்தேன். மாதம் ரூ.50,000 வரை வருமானம் இருந்தது. ஆனால், அது எனக்கு ஸ்ட்ரெஸாக இருந்தது. மக்களுக்கு இயற்கையான உணவு கிடைக்க வேண்டும் என்று யோசித்துக்கொண்டே இருப்பேன். 2015-க்குப் பிறகு, அதை நோக்கிப் பயணிக்கத் தொடங்கிவிட்டேன். மதுரையில் மாடித் தோட்டம் அமைத்தேன். 15 வகையான கீரைகளை வைத்தேன். அது என் வீட்டில் மட்டுமல்லாது, அருகில் இருந்தவர்களையும் ஈர்த்தது. அந்த வரவேற்புதான் என்னை இதன் பக்கம் வரவைத்தது.

40 ஆண்டுகளுக்கு முன்பு 500 வகையான கீரைகள் இருந்தன. ஆனால், தற்போது சந்தையில் 20 வகையான கீரைகள்தான் கிடைக்கின்றன. இதை இப்படியே விட்டுவிடக் கூடாது என்று கோவைக்கு வந்து, இயற்கை விவசாயத்தை முறைப்படி கற்றுக்கொண்டேன். சிறிது ஆய்வு செய்து 150 வகையான கீரைகளைத் தேடிப் பிடித்தோம். 2 லட்சம் ரூபாய் முதலீட்டில் ஷோரூம் தொடங்கினோம். அறுவடை செய்த இரண்டு மணி நேரத்துக்குள் கீரையை மக்களிடம் சேர்க்க வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். கோவை, மதுரையில் கீரையை நாங்கள் டோர் டெலிவரி செய்தோம்.

படிப்படியாகப் பக்கத்து மாவட்டங்கள், மாநிலம், வெளிநாடு வரை நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால். உரிய நேரத்தில் கீரைகளைக் கொண்டு சேர்ப்பதில் சவால்களைச் சந்தித்தோம். அப்போது, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் அறிமுகம் ஏற்பட்டது. அவர்களுடன் இணைந்து பயணிக்கத் தொடங்கினோம்.

கீரைகளை இயற்கையான முறையில் பொடியாக்கி, தரமான பேக்கிங்கில் கொடுத்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக ‘கிரீன் டிப்’ எனப்படும் கீரை சூப் வகையை அறிமுகப்படுத்தியுள்ளோம். கிரீன் டீ குடிப்பது போலதான். உப்பு, மிளகு, மஞ்சள் தூள் போன்றவற்றை கீரைப் பொடியுடன் கலந்து டிப் போன்ற பேக்கிங்கில் கொடுத்துவிடுவோம். அதை வெந்நீரில் டிப் செய்து, 2 நிமிடங்களுக்குப் பிறகு பருகலாம். இது எல்லாமே தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் உதவியால் எளிதாக சாத்தியமானது. அவர்கள் மூலமே, தமிழ்நாடு முழுவதும் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் அறிமுகமானார்கள்” என்றவர், இ-காமர்ஸ் மூலம் பல்வேறு மாநிலங்களுக்கு கீரை தந்துவருவதைப் பற்றியும் சொன்னார்.

“இ-காமர்ஸ் மூலம் இந்தியா முழுவதும் டெலிவரி செய்தோம். இந்தியா முழுவதும் 25,000 பின்கோடுகளுக்கு டெலிவரி செய்து வருகிறோம். அமெரிக்கா, கனடா, துபாய், மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 15 நாடு களுக்கு அனுப்பி வருகிறோம். யு.கே மற்றும் நியூசிலாந்து நாடுகளில் இருந்து பேசி வருகின்றனர். அடுத்ததாக, கிரீனி மீல் என்ற உணவுப் பொருளை அறிமுகப்படுத்தியுள்ளோம். வீட்டில் செய்வது போல, கீரை மற்றும் வாழைக் கூட்டுகளை லேட்டஸ்ட் பேக்கேஜிங் தொழில்நுட்பத்தில் விற்கிறோம்.

மதுரையில் எங்களுக்கு ஒரு சமையல்கூடம் உள்ளது. அங்கு சமைத்து வெளியில் கொடுக் கிறோம். உணவை 120 டிகிரியில் நன்கு கொதிக்க வைத்து விடுவோம். அப்போது அதில் உள்ள பாக்டீரியாக்கள் அழிந்து விடும். பிறகு, அதை உடனடியாகக் குளிர வைத்துவிடுவோம். இதனால், பாக்கெட்டைத் திறக்கும்வரை அதில் பாக்டீரியா வளராது. இதனால், அதை இந்தியா மற்றும் ரஷ்ய ராணுவத்திலும் பயன்படுத்தி வருகின்றனர். அடுத்தாக, கீரை ஸ்மூத்திஸ் என்கிற புதிய வகை உணவையும் கொடுக்க உள்ளோம். எங்களிடம் 15 ஊழியர்கள் உள்ளனர். சமீபத்தில் அமெரிக்காவிலும் எங்களது கிளையைத் திறந் துள்ளோம். கடந்த ஆண்டு 65 லட்சம் ரூபாய் நிகர லாபம் வந்தது. இந்த ஆண்டு 2.5 கோடி ரூபாயை எதிர்பார்க்கிறோம்.

கொரோனா வைரஸுக்குப் பிறகு, மக்களிடம் கீரை பயன்பாடு மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. அடுத்த கட்டமாகத் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு பின்கோடிலும் ஃப்ரான்சைஸி மூலம் கீரைக் கடை அவுட்லேட்டை தொடங்க உள்ளோம்” எனத் தன் பிசினஸ் பிளானைச் சொல்லி முடித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism