Published:Updated:

கம்பெனி பயோடேட்டா: டைம் டெக்னோ ப்ளாஸ்ட் லிமிடெட்!

கம்பெனி பயோடேட்டா: டைம் டெக்னோ ப்ளாஸ்ட் லிமிடெட்!
பிரீமியம் ஸ்டோரி
கம்பெனி பயோடேட்டா: டைம் டெக்னோ ப்ளாஸ்ட் லிமிடெட்!

(BSE CODE: 532856, NSE SYMBOL: TIMETECHNO)

கம்பெனி பயோடேட்டா: டைம் டெக்னோ ப்ளாஸ்ட் லிமிடெட்!

(BSE CODE: 532856, NSE SYMBOL: TIMETECHNO)

Published:Updated:
கம்பெனி பயோடேட்டா: டைம் டெக்னோ ப்ளாஸ்ட் லிமிடெட்!
பிரீமியம் ஸ்டோரி
கம்பெனி பயோடேட்டா: டைம் டெக்னோ ப்ளாஸ்ட் லிமிடெட்!

உலக அளவில் இரண்டாவது பெரிய காம்ப்போசைட் சிலிண்டரை உற்பத்தி செய்யும் நிறுவனமாக இந்த நிறுவனம் இருந்து வருகிறது. அதே போல், எம்.ஓ.எக்ஸ் பிலிம் உற்பத்தியில் இந்தியாவில் இரண்டாவது பெரிய நிறுவனமாகத் திகழ்கிறது இந்த நிறுவனம்.

கம்பெனி பயோடேட்டா பகுதியில் நாம் இந்த வாரம் பார்க்க விருக்கும் நிறுவனம் 1992-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 2007-ம் ஆண்டில் பங்குச் சந்தையில் பட்டிய லிடப்பட்ட நிறுவனமான டைம் டெக்னோ ப்ளாஸ்ட் லிமிடெட் எனும் நிறுவனத்தினுடையது.

நிறுவனத்தின் தொழில்...

பாலிமர்களைத் தயாரிக்கும் இந்த நிறுவனம் பஹ்ரைன், எகிப்து, இந்தோனேசியா, இந்தியா, மலேசியா, யுனைடெட் அரப் எமிரேட்ஸ், தாய்வான், தாய்லாந்து, வியட்நாம், சவுதி அரேபியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் வர்த்தகம் செய்துவரும் ஒரு மல்ட்டி நேஷனல் நிறுவனமாகும்.

கம்பெனி பயோடேட்டா: டைம் டெக்னோ ப்ளாஸ்ட் லிமிடெட்!

நிறுவனத்தின் தயாரிப்புகள்...

இந்த நிறுவனம் செயல்படும் தொழில் பிரிவுகள் என்கிற ரீதியில் பார்த்தால், மாக்ஸ் பிலிம்ஸ் (MOX - Multi layer multi axis Oriented X cross laminated film), காம்ப்போசைட் சிலிண்டர்கள், இண்டஸ்ட்ரீயல் பேக்கேஜிங், இன்ஃப்ராஸ்ட்ரக்சர் புராடெக்ட்ஸ், ஆட்டோ காம்ப்போனென்ட்ஸ், லைஃப் ஸ்டைல் புராடெக்ட்ஸ் போன்ற பெரும் பிரிவுகளில் செயல்படுகிறது இந்த நிறுவனம்.

மாக்ஸ் பிலிம் பிரிவில் ‘டெக்ப்ரோலின்’ என்ற பிராண்டில் டெக்பாலின் ப்ளஸ், டெக் பாலின் பேக்ஸ் மற்றும் டெக்பாலின் ரெயின் கோட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. காம்ப்போசைட் சிலிண்டர்கள் பிரிவில் ‘லைட் சேஃப்’ எனும் பிராண்டில் காம்ப்போசைட் எல்.பி.ஜி கேஸ் சிலிண்டர்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இண்டஸ்ட்ரியல் பேக்கேஜிங் பிரிவில் ‘டெக்பேக்’ மற்றும் `பல்க்டெய்னர் ஜி.என்.எக்ஸ்’ எனும் பிராண்டில் எக்ஸ்.எல் டிரம்கள், ஓப்பன் டாப் டிரம்கள், ஜெர்ரி கேன்கள், ஐபிசி (Intermediate Bulk Container), கோனிபெய்ல்ஸ் (Conipails – பெயின்ட் போன்ற தயாரிப்புகளை பேக் கேஜிங் செய்ய உதவும் கொள்கலன்கள்) போன்றவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

ஆட்டோ காம்ப்போனென்ட்டுகள் பிரிவில் ‘3 எஸ் ரெயில் பிளாப்ஸ்’, ‘டெக் டாட்’ மற்றும் ‘டெக் டேங்க்’ என்ற பிராண்டில் கமர்ஷியல் வாகனங்களுக்கான ஆன்ட்டி ஸ்ப்ரே ரெயின் ப்ளாப் (வாகனங்களில் டயர்களுக்குப் பின்னால் தண்ணீர், சாலையில் செல்வோர் மீது தெறிக்காமல் இருப்பதற்காகப் பொருத்தப் படும் பிளாப்), கமர்ஷியல் வாகனங்களுக்கான டீ-ஏரியேஷன் (ரேடியேட்டர்) டேங்குகள், கமர்ஷியல் மற்றும் பயணிகள் பயணிக்கும் வாகனங்களுக்கான பிளாஸ்ட்டிக்காலான எரிபொருள்கள் (டீசல் டேங்க் போன்ற) கொள்கலன்கள், கமர்ஷியல் வாகனங்களுக்கான ஏர்-டக்ட்கள் போன்றவை விற்பனை செய்யப் படுகின்றன. லைஃப் ஸ்டைல்கள் பிரிவில், ’டம்ப்போ பின்ஸ்’, `ரீகல்’ மற்றும் `டியுரோ மேட்ஸ்’ என்ற பிராண்டுகளில் விரிப்புகள், பெரிய அளவிலான தொட்டிகள் (பின்ஸ்) மற்றும் மோல்டட் பர்னிச்சர்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

கம்பெனி பயோடேட்டா: டைம் டெக்னோ ப்ளாஸ்ட் லிமிடெட்!

நிறுவனத்தின் சிறப்புகள்...

பிளாஸ்ட்டிக் தயாரிப்புகள் என்ற அளவீட்டில் பார்த்தால், ஆண்டொன்றுக்கு 3,03,000 மெட்ரிக் டன் அளவிலான நிர்மாணிக்கப்பட்ட உற்பத்தி மையத்தையும், ஐ.பி.சி கன்டெய்னர்களில் 12,30,000 என்ற எண்ணிக்கையின் அளவிலும், பி.இ பைப்பு களில் 53,000 மெட்ரிக் டன் என்ற அளவிலும், காம்ப்போசைட் சிலிண்டர்களில் 14,00,000 என்ற எண்ணிக்கையிலும், எம்.ஓ.எக்ஸ் ஃபிலிம்களில் 12,000 மெட்ரிக் டன் என்ற அளவிலும் நிர்மாணிக்கப்பட்ட உற்பத்தித் திறனுடன் இருக்கும் இந்தியாவில் உள்ள 20 உற்பத்தி மையங்களுடன் வெற்றிகர மாகச் செயல்பட்டு வருகிறது இந்த நிறுவனம்.

எல்.பி.ஜி மற்றும் சி.என்.ஜி-யை விநியோகம் செய்வதற்கு உதவும் காம்ப்போசைட் சிலிண்டர்களை (பிளாஸ்ட்டிக்/பாலிமரினால் ஆன) உற்பத்தி செய்யும் இந்த நிறுவனம், இதில் டைப்-4 (Polimer-Non-metallic liner wrapped with Carbon Fibre) வகையிலான சிலிண்டர்களை இந்தியாவில் முதன் முதலில் அறிமுகப்படுத்திய பெருமை இதற்கு உண்டு.

உலக அளவில் இரண்டாவது பெரிய காம்ப்போசைட் சிலிண்டரை உற்பத்தி செய்யும் நிறுவனமாக இந்த நிறுவனம் இருந்துவருகிறது. அதே போல், எம்.ஓ.எக்ஸ் பிலிம் உற்பத்தியில் இந்தியாவில் இரண்டாவது பெரிய நிறுவனமாகத் திகழ்கிறது இந்த நிறுவனம். அதே போல், இந்தியாவில் இண்டஸ்ட்ரீயல் பேக்கேஜிங் துறையில் கிட்டத்தட்ட 60% அளவிலான சந்தைப்பங்களிப்பைக் கொண்டு செயல்பட்டுவரும் ஒரு முக்கியமான நிறுவனமாகவும் இருக்கிறது இந்த நிறுவனம்.

பிளாஸ்ட்டிக் டிரம்கள் உற்பத்தியில் உலகத்தின் மிகப் பெரிய நிறுவனமாக இருப்பது இந்த நிறுவனத்தின் தனிச் சிறப்பாகும். இந்த நிறுவனம் தொழில் செய்துவரும் 11 நாடு களில் ஒன்பது நாடுகளில் அந்தத்தத் துறைகளில் சந்தைப் பங்களிப்பில் முன்னணி நிலையில் இருப்பது குறிப் பிடத்தகுந்த ஒரு விஷயமாகும். அதே போல, இந்தியாவில் இண்டர்மீடியம் பல்க் கன்டெய்னர்களை முதன்முதலாக அறிமுகப்படுத்தியதும் இந்த நிறுவனமேயாகும். உலக அளவில் ஐ.பி.சி கண்டெய்னர்களை உற்பத்தி செய்வதில் மூன்றாவது பெரிய நிறுவனமாக இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

தன்னுடைய தயாரிப்புகளை விற்பனை செய்வதற்கென ஸ்திரமானதொரு மார்கெட்டிங் மற்றும் விநியோகத்துக்கான (டிஸ்ட்ரிப்யூஷன்) நெட்வொர்க் கையும் கொண்டிருக்கிறது

இந்த நிறுவனம். தன்னுடைய 900-க்கும் (உலக அளவில்) மேற்பட்ட நிறுவன ரீதியான வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய 345-க்கும் மேலான நகரங்களில் டிஸ்ட்ரிப்யூட்டர் மற்றும் டீலர் நெட்வொர்க்கைக் கொண்டு இயங்கி வருகிறது இந்த நிறுவனம். இது போன்ற சிறந்த ஒரு மார்க் கெட்டிங் மற்றும் விநியோக நெட்வொர்க்கைக் கொண்டிருப்பதாலேயே குறைந்த கால அவகாசத்திலேயே இந்த நிறுவனத்தால் புதிய தயாரிப்பு களை வெற்றிகரமாக அறிமுகப் படுத்த முடிகிறது.

கம்பெனி பயோடேட்டா: டைம் டெக்னோ ப்ளாஸ்ட் லிமிடெட்!

யு.ஏ.இ, பஹ்ரைன் மற்றும் தாய்லாந்தில் கால்பதித்து செயல் படுவதன் மூலம் மேற்கு, தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் இருக்கும் வாடிக்கையாளர் களுக்கு சிறந்ததொரு சேவையை இந்த நிறுவனத்தால் வழங்க முடிகிறது. தன்னுடைய நிறுவன ரீதியிலான வாடிக்கையாளர் களுடன் நீண்ட நாள் அடிப்படை யிலான வர்த்தக ரீதியிலான தொடர்பை வைத்திருக்கும் நோக்கத்துடன் இந்த நிறுவனம் செயல்பட்டுவருவதால், அதிக

ரித்து வரும் பல்வேறு விதமான வாடிக்கையாளர்களின் தேவைக்கு இணங்க புதிய தயாரிப்புகளை இந்த நிறுவனத்தால் தொடர்ந்து அவர்களுக்கு வெற்றிகரமாக சப்ளை செய்ய முடிகிறது.

இந்த நிறுவனம் தனக்குத் தேவையான ஆராய்ச்சிகளை செய்துகொள்வதற்காக 30 பேரைக் கொண்ட ஓர் ஆராய்ச்சி வசதியையும் கொண்டுள்ளது. இவர்கள் அனைவருமே இந்த நிறுவனம் செயல்படும் துறையில் 15 வருடத்துக்கும் மேலான அனுபவம் கொண்டவர்கள்.

ஆதித்யா பிர்லா, அசோக் லேலாண்ட், பி.ஏ.எஸ்.எஃப், பாயர், பாரத் பெட்ரோலியம், கெடில்லா, டியூபான்ட், எக்சான் மொபில், ஜெனரல் எலெக்ட்ரிக், கோத்ரெஜ், ஹென்கெல், இந்தியா கிளைக்கால், இந்தியன் ஆயில், எல் & டி, லாஓரியல், நெஸ்லே, பிடிலைட், பி&ஜி, ஷெல், டாடா கெமிக்கல்ஸ், டாடா மோட்டார்ஸ், டோட்டல், வோல்வோ, விப்ரோ உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் இதன் வாடிக்கை யாளர்களாக இருக்கின்றன.

ரிஸ்க்குகள் என்னென்ன?

பிளாஸ்ட்டிக் மற்றும் பாலிமர் துறையில் செயல்பட்டு வரும் நிறுவனங்களுக்கே உரித்தான அனைத்து ரிஸ்க்குகளும் இந்த நிறுவனத்துக்கும் உண்டு. மூலப்பொருள்களின் விலை உயர்வு மற்றும் தொடர்ந்து தங்குதடையின்றி உபயோகத்துக்கு கிடைப்பது, அந்நியச் செலாவணி மதிப்பு மாறுதல், தொழில்நுட்ப ரீதியில் வரக்கூடிய பெரிய அளவிலான நவீனமயமாகுதல், தொழில் ரீதியான கடுமையான போட்டி, அரசாங்கத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கொள்கைகளில் வரக்கூடிய மாறுதல்கள் போன்றவையும் இந்த நிறுவனத்துக்கான ரிஸ்க்குகளே ஆகும். மேலும், இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை வாங்கி உபயோகிக்கும் நிறுவனங்கள் இயங்கிவரும் துறைகளில் சில (பெயின்ட், ஆட்டோமொபைல் போன்றவை) நேரடியாகப் பொருளாதார வளர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட வையாக இருப்பதால், பொருளாதார வளர்ச்சி ஏதோ ஒரு காரணத்தால் எதிர்பார்த்த அளவு இல்லாதுபோனாலோ, தேக்கநிலையைச் சந்தித்தாலோ அதுவும் இந்த நிறுவனத்தின் செயல்பாட்டை ஓரளவு பாதிக்கவே செய்யும்.

முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்தப் பகுதி பங்குகளைப் பரிந்துரை செய்யும் பகுதி அல்ல. முதலீட்டாளர்களுக்குப் பங்குகளை அறிமுகப் படுத்துதல் மற்றும் கல்வியே இந்தப் பகுதியின் நோக்கம். பங்கு முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டது என்பதால், எந்தவொரு பங்கை வாங்கும் முன்னும் செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரைக் கலந்தாலோசித்து, அந்தப் பங்கில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்ததுதானா என்பதை முடிவு செய்த பின்னரே முதலீட்டு நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism